*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு 600 பேர் விருப்ப மனு … காங்கிரஸ். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து நிர்வாகிகள் உடன் மு.க. ஸ்டாலின் இன்றும் ஆலோசனை.
*ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை…40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். அதனால் காத்திருந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுப்போம் என்று பேட்டி.
*திமுக கூட்டணியில் ஒரு தொகுதி கொடூத்தால் ஏற்பது குறித்து மதிமுக நிர்வாகிகள் உடன் வைகோ ஆலோசனை …இடது சாரி கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் கேட்க முடிவு.
*நாடளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைப்பதில் எடப்பாடிபழனிசாமி தீவிரம் … அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக , புதிய தமிழகம்,புரட்சிப் பாரதம் மற்றும் பார்வடு பிளாக் கட்சிகளை சேர்க்கத் திட்டம்.
*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் … கோவையில மார்ச் 22- ஆம் தேதி பிரமாண்ட கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்க ஏற்பாடு.
*தேர்தலில் பணம், பரிசுப் பொருட்களைக் கொடுப்பதை தடுக்க சி விஜில் மூலம் பொது மக்கள் வீடீயோ அனுப்பலாம்… தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.
*திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்தார் … ஆர்.கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் சிம்லா முத்துச் சோழன்.
*போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் வெளியானது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்…சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது 10 CCTV கேமராக்களை ஸ்பான்சர் செய்தார் ஜாபர் சாதிக்.. போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிந்ததும், ஜாபர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டதாகவும் விளக்கம்.
*புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் , ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியது … ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிறப்புக் குழு சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை.
*புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வத்தை பணியிட மாற்றம் … குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தனி நீதிமன்றம் அமைக்கவும் மாநில அரசு முடிவு.
*கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் புதுச்சேரி சாலையில் ஏராளமானவர்கள் கண்ணீருடன் பங்கேற்பு … புத்தகங்கள், விளையாட்டுப் பொம்மைகளுடன் உடல் அடக்கம்.
*அனைத்துப் பணிகளிலும் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதுதான் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு கொடுக்கும் மதிப்பாகும் … சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எடப்பாடிபழனிசாமி வாழ்த்துச் செய்தி.
*கொடநாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை, கொள்ளை நடைபெற்ற பங்களாவில் சிபிசிஐடி போலீசார் 15 பேர் சோதனை … பங்களாவில் ஜெயலலிதா வைத்திருந்த ஆவணங்களை எடுப்பதற்காக வந்தவர்களால் கவாலர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை.
*பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக கொடுத்து உள்ள விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் … தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*பெங்களூருவில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான குடி நீர் தட்டுப்பாடு.. தினசரி 2800 மி்ல்லியன் லிட்டர் குடி நீர் தேவைப்படும் நிலையில் 1500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் .நிலைமையை சமாளிக்க கட்டப்பாட்டு அறைகள் திறப்பு. குடி நீர் குழாய்கள் முன் பல மணி நேரம் பெண்கள் காத்திருக்கும் நிலை.
*அரசியல் அமைப்பின் 370- வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நான்கு ஆண்டுகள் கழித்து காஷ்மீருக்கு முதன் முறையாக பிரதமர் மோடி பயணம் … ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, 370- வது பிரிவு ரத்து செய்யப்பட்டபிறகு காஷ்மீர் மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிப்பதாக பேச்சு.
*பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காலியில் பாதிக்கப்ட்ட பெண்களை சந்தித்து குறைகளை கேட்டதற்கு ஆளும் திரினாமுல் காங்கிரஸ் பதிலடி …கொல்கத்தாவில் பெண்கள் உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட சந்தோஷ் காலி பெண்கள் பங்கேற்புடன் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி.
*மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று ஜெய்ப்பூரில் இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி உறுதி … விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என்றும் அறிவிப்பு.
*டெல்லி மதுபான கொள்கை வழக்கில் எட்டு முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாததை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு … மார்ச் 16 – ஆம் தேதி தங்கள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் தரும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
*தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தாக்கல் செய்வதற்கு ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டது தொடர்பான வழக்கை மார்ச் 11- ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு… ஸ்டேட் வங்கி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அன்றே ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வலியுறுத்தல்.
*ஏமன் நாட்டின் ‘ஹவுதி போராளிகளால் ஏடன் கடற் பகுதியில் தாக்கப்பட்ட சரக்குக் கப்பலில் மூன்று பேர் இறப்பு … கப்பலில் இருந்தவர்களில் ஒரு இந்தியர் உட்பட 21 பேர் இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்ஸ் கொல்கத்தா மூலம் உயிருடன் மீட்பு
*தர்மசாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது … இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட், அஸ்னி்ன் 4 வி்க்கெட், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
*தர்மசாலாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டி என்பதால் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து … ஆட்டத் தொடக்கத்தில் இந்திய அணி வீரர்கள் இரு புறமும் அரண் அமைத்து அஸ்வினுக்கு மரியாதை.
*உதகமண்டலத்தில் 126- வது மலக் கண்காட்சி மே மாதம் 17 – ஆம் தேதி தெடங்கி 21 – ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு .. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 24 தொடங்கி 26 வரை பழக் கண்காட்சியை நடத்தவும் தோட்டக் கலைத் துறை முடிவு.
*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720க்கு விற்பனை … இதே போக்கு நீடித்தால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து விடக்கூடும் என்று கருத்து.
*ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம். அடுத்து தனுஷ் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல் … தற்போது தனுஷ் நடித்து வரும் ராயன் படம் முடிந்த பிறகு சிதம்பரம் இயக்கும் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447