*ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டிருந்ததை நீக்கிக்கொண்டது மக்களவைச் செயலகம். . இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து நடவடிக்கை.

*நாடாளுமன்றத்திற்கு திரும்பி ராகுல் காந்தி அவை நிகழச்சிகளில் பங்கேற்பு.. காந்தி சிலைக்கு மாலை அணிவி்ப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்தி வரேவேற்பு.

*ஆன் லைன் விளையாட்டுக்கு தடை என்பது கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.. நேரில் ரம்மி விளையாடும் போதுதான் திறமை பெருகும் என்றும் விளக்கம்.

*அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடு்த்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி.. கைது செய்தது சட்டவிரோதம் என்று தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுடி செய்து உத்தரவு.

*உச்சநீதிமன்ற உத்தரவை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி பெற்றது அமலாக்கத்துறை.. புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை.

*வருமானத்திற்கு அதிகமாக 53 சதவிகிதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கு..முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் மனைவியும் 29- ஆம் தேதி ஆஜராக புதுக்கோடடை நீதிமன்றம் உத்தரவு.

*கலைஞர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அமைதிப் பேரணி.. நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை.

*சென்னையில் கலைஞர் நினைவு நாள் பேரணியில் பங்கேற்ற 146-வது வட்டக் கவுன்சிலர் சண்முகம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றும் பலனின்றி உயிர் பிரிந்தது,

*நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு.. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் படத்துக்கு மலர் தூவி மரியாதை.

*தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் காலனி ஒன்றுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் எடுத்த நடவடிக்கை திமுக ஊராட்சி மன்றத் தலைவரால் தடுத்து நிறுத்தம்.. பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

*திருநெல்வேலி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு.. வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சபாநாயகர் தகவல்.

*வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைக்குக் தீர்வு காண கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை .. சுமூகத் தீர்வு ஏற்படவில்லை என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல்.

*மாவட்டங்கள் பெரிதாக இருந்தல் சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்க முடியாது..பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தல்

*திரிகோணமலை அருகே நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது.. எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி படகையும் பறிமுதல் செய்து நடவடிக்கை.

*பள்ளிக்கூட மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் காலனிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தல்.. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு கோடிக்கணக்கில் செலவிடும் தமிழ்நாடு அரசு மாணவர்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்று கோரிக்கை.

*வாட்ஸ் அப் குழுவில் நண்பர்களுடன் நடந்த விவாதத்தில் மதம் பற்றி ஆட்சேபதுக்கு உரிய ஆடியோவை பதிவிட்டதாக புகார்.. சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

*என்.எல்.சி.நிறுவனம் கைப்பற்றிய நிலத்தை அறுவடை முடிந்ததும் ஒப்படைத்து விட வேண்டும்.. மீண்டும் விவசாயம் செய்யக்கூடாது என்றும் விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

*காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் தான் கவனம் செலுத்தப்பட்டதே தவிர வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.. பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பாதையில் நாடு வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பேச்சு.

*டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.. ஏற்கனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதா மீது விரைவில் விவாதம் நடைபெறும் என்று தகவல்.

*மணிப்பூர் மாநில டி.ஜி.பி. ராஜீவ் சிங் உச்சநீதிமன்த்தில் நேரில் ஆஜராகி விளக்கம்.. மூன்று மாதங்களாக தொடரும் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியது பற்றி நீதிபதிகள் அதிருப்தி.

*மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கபடும் இழப்பீடு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் நடவடிக்க.. உயர்நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவு.

*குக்கி சமூகத்தினரை வெளிநாட்டவர், தீவிரவாதிகள் என்று முதலமைச்சர் பைரோன் சிங் குற்றஞ்சாட்டியதாக புகார்.. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வந்த வாபஸை பெற்றது குறித்து குக்கி மக்கள் கட்சித் தலைவர் டொங்க்மங் விளக்கம்.

*சந்திராயன் -3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்டு 23-ஆம் தேதி நிலவில் இறக்கப்படும்.. விண்கலத்தின் பயணம் சிறப்பாக உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம் நாத் பேட்டி.

*தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ மனையில் திடீர் தீ விபத்து.. எண்டோஸ் கோப்பி அறையில் பிடித்த நெருப்பு, தீ அணைப்பு வீரர்களால் அணைப்பு.

*ஆந்திராவின் புரட்சிகர இயக்கப் பாடகர் கத்தார் உடலுக்கு ஐதராபாத்தில் ஏரளமானவர்கள் அஞ்சலி.. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பாடுபட்டவர் கத்தார் என்று ராகுல் காந்தி உட்பட பலரும் இரங்கல்.

*திரைப்பட நடிகை சிந்து தமது 42-வது வயதிலேயே மார்பகப் புற்று நோய் காரணமாக காலமானார்.. அங்காடித் தெரு, கருப்பசாமி குத்தகைத் தரார் உள்ளிட்ட படங்களில் நடித்த சிந்து உடலுக்கு திரை உலகத்தினர் அஞ்சலி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *