*போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் உடன் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி… திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் என்று தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.
*பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது.. அரசுப் பேருந்துகள் இயக்கம் படிப்படியாக குறைப்பு.
*அரசுப் பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு … போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள் ஏற்பு. மேலும் 4 கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தகவல்.
*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து ஜனவரி 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் … தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் உறுதி.
*சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ₹6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி … புதிய முதலீடுகளால்14.54 லட்சம் பேருக்கு கிடைக்கும் நேரடி வேலைவாய்ப்பை சேர்த்து, மொத்தமாக 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் என்றும் விளக்கம்.
*முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 28 – ஆம் தேதி முதல் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணம் .. தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் முதல்வர் செல்ல உள்ளதாக தொழல் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்.
*மகளிர் உரிமைத் தொகையைப் போன்று பொங்கல் பரிசுத் தொகையையும் வங்கிக் கணக்கல் செலுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்… பொது நல மனுத் தாக்கல் செய்தவரின் மற்றொரு கோரிக்கையான சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குவது குறித்தும் யோசிக்குமாறு வலியுறுத்தல்.
*ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முறையீடு…. மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி கருத்து.
*ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது என்று மனுவில் பீட்டா அமைப்பு புகார் … ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
*தமிழ்நாட்டில் காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ. மழைப்பொழிவு … சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கன்னியில் 22 செ.மீ., திருவாருர், நாகையில் தலா 21 செ.மீ., மழைப்பதிவு.
*திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் … தீவிரமாக உள்ள வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்றும் விளக்கம்.
*பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கருத்து.‘
*பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசால் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட 11 பேரும் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதின்றம் உத்தரவு … பில்கிஸ் பானு வழக்கில், 2022 -மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே தவறானது என்றும் கருத்து.
*குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002 – ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஐந்து மாத கர்ப்ப்பிணியாக இருந்த 20 வயது பில்கிஸ் பானு 11 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் . .. . பில்கிஸின் குடும்பத்தைச் சேர்ந்த 14 படுகொலை செய்யப்பட்டனர்.
*குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பிலிகிஸ் பானு வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டது… மராட்டிய மாநில நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களை குஜராத் மாநில அரசு முன் கூட்டியே விடுவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
*இந்தியா பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் மாலத் தீவு அமைச்சர்கள் மூன்று பேர் அவதூறாக பேசிய விவகாரம் … மாலத் தீவுக்குப் போட்டியாக லட்சத் தீவுக்கு சுற்றுலா சென்று அந்த தீவின் சுற்றுலாவை விளம்பரப்படுத்த இந்தி திரை பிரபலங்கள் திட்டம்.
*பங்களாதேஷ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 300 தொகுதிகளில் அவாமீ லீக் கட்சி 250- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி ….ஷேக் ஹசினா ஐந்தாவது முறை பிரதமர் ஆனார்.