*வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி கையில் ரொக்கமாக வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்….வாக்குப்பதிவு 19-ம் தேதி முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரை கட்டுப்பாடுகள் தொடரும் எ ன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்படும் .. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு.
*அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை… கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததார் என்பது ஐ.பெரியசாமி மீதான புகார் ஆகும்.
*சென்னையில் நாளை பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு 20 நிபந்தனைகள் விதித்தது தேர்தல் ஆணையம்…. தோல் பை, தண்ணீர் பாட்டில் போன்ற எளிதில் தூக்கி எறியக் கூடிய பொருட்களை பொதுமக்கள் கொண்டு வர அனுமதியில்லை. மரத்தால் ஆன கைப்பிடியுடன் கூடிய பதாகைகளை பொதுமக்கள் எடுத்து வரக்கூடாது. பிரதமர் மோடி பயணிக்கும் பாதையில் அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது. மத நம்பிக்கைக்கு எதிரான, வெறுப்பு கருத்துகளுடன் முழக்கமிடக் கூடாது என்பதும் கட்டுப்பாடு ஆகும்.
*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டதில் எடப்பாடி பழனிசாமி பேச்சு … ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் பெயரைக் கூட குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
*திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு… . புகழேந்தி(71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.
*தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டத்தில் இருந்து விலக்களிக்கக் கோரி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மீது முடிவெடுக்க ஜூன் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுக்கு அவகாசம்… தமிழ்நாடு அரசின் சட்டம், சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக 300 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.
*பிரச்சாரத்தில் ராணுவத்தை பயன்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் புகார்.. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு.
*முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…. டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி 3-வது முறையாக வழக்கு தொடரப்பட்டதால் கண்டிப்பு.
*ராகுல் காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தகவல் .. அவரது சகோதரி பிரியங்கா காந்தி ரேபரலி தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்ப்பு.
*டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தின் முன்பு திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 எம்.பி.க்கள் போராட்டம் … வருமான வரித்துறை , அமலாக்கத் துறை போன்றவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு தேர்தல் நேரத்தில் தடை விதிக்கக் கோரிக்கை.
*மலையாளத் திரைப்படமான பிரேமலு உலகம் முழுவதும் 130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து உள்ளதாக தகவல் … ஹாட் ஸ்டாரில் ஏப்ரல் 12- ஆம் தேதி வெளியிட முடிவு.
*நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இருவரும் விவாகரத்துக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் …விரரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு.
*தமிழ்நாட்டில் இன்றும் அதிகபட்சமாகா ஈரோட்டில் 107 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு … சேலத்திலும் வெயில் சுட்டெரிப்பு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447