*அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2- வது நாளாக தீவிர விசாரணை … வேடசந்தூர் திமுக நிர்வாகி வீர சாமிநாதன் மற்றும் சாந்தி ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட 60 நில ஆவணங்களைக் காட்டி அமலாக்கத் துறை அடுக்கடுக்கான கேள்வி.
*போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்.. அடுத்த மாதம் 30- ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று எச்சரிக்கை.
*மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் இந்தியா பற்றி எரிகிறது என்று பொருள்.. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்த காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் பேச்சு.
*பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் செல்லாதது ஏன்? வீடியோ தொடர்பாக 80 நாட்களுக்குப் பிறகு பதில் அளித்தது ஏன்? மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்காதது ஏன்…. நம்பிக்கை இல்லாத தீர்மான விவாதத்தின் மீது கவுரவ் கோகாய் கேட்ட முக்கியமான மூன்று கேள்விகள் வைரலாகிறது.
*நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கி வைக்காதது குறித்து மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் முழக்கம்.. விவாதத்தின் போது பிரதமர் மோடி அவையில் இல்லாமல் எங்கே போனார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதிலடி.
*டெல்லி மாநில அரசை ஒரு மாநகராட்சி போல தரம் குறைக்கச் செய்யும் டெல்லி சேவை மசோதா நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கருப்பு நாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
*தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யாமல் தேசியத் தலைவர் போல கருத்துச் சொல்கிறார் மு.க.ஸ்டாலின்.. எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது மக்களுக்கு நன்மை செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை நடத்தும் விசாரணையால் பல முக்கிய மர்மங்கள் வெளியாக வாய்ப்பு.. அதிகாரிகளின் கேள்விக்கு அவர் வாய் திறந்தால் பலர் சிக்குவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
*சென்னையின் குடிநீர் தேவைக்காக நடப்பு பருவத்தில் திறக்க வேண்டிய எட்டு டி.எம்.சி. தண்ணீரை குறைக்காமல் முறைப்படி திறந்து விட வேண்டும்.. ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்.
*ஓசூர் அருகே ஆய்வு செய்யும் போதே பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. டி.ஆர்.ஓ. , தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் காயத்துடன் தப்பினர்.
*என்.எல்.சி.நிறுவனத்துடன் பேச்சு நடத்தி இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொடுக்கச் செய்தது திமுக அரசுதான்.. அமைதியாக இருக்கும் விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டி விடுவது அன்பு மணி தான் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் கருத்து.
*ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 9 பேருக்கு நிபந்தனைகள் உடன் ஜாமீன் வழங்கியது இலங்கை நீதிமன்றம்.. கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கபட்டு இருந்தவர்கள் விடுதலை.
*சொந்த வீடு வாங்குவோருக்கான பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக வெளியான தகவல் தவறு.. இதற்கு முன்பு இருந்த அதே நடைமுறை பின்பற்றப்படுவதாக தமிழக அரசு விளக்கம்.
*அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து முன்னாள் துணை வேந்தர் சூரப்பா நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும்.. சட்டப் பேரவைக் கணக்குக் குழு சார்பில் சம்மன்.
*சென்னையில் ஜனவரி 10 மற்றும் 11 – ஆம் தேதி உலக முதலீட்டாளர் மாநாடு.. மாநாட்டுக்கான இலட்சினையை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுதினம் வெளியிட உள்ளதாக அறிவிப்பு.
*செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் வீடியோ கால் மோசடிகள் அதிகரிப்பு.. பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி சைபர் பிரிவு டி.ஜி.பி. சஞ்சய் குமார் அறிவுறுத்தல்.
*சமூக நீதி பேசுகிறவர்கள்தான் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் அரசியல் செய்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்.. நம்பிக்கை இல்லாத எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவருவதாக பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பேச்சு.
*எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால் இழந்த டெல்லி துக்ளக் லேன் வீடு மீண்டும் ராகுல் காந்திக்கு ஒதுக்கீடு.. இந்தியா முழுவதுமே என் வீடுதான் என்று ராகுல் நெகிழ்ச்சி.
*பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.. முதலமைச்சர் பினராய் விஜயன் முன்மொழிந்த தீர்மானத்திற்கு காங்கிரசும் ஆதரவு.
*மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த 2014 – ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை பெரு நிறுவனங்களின் கடனில 14.5 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.. நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பதில்.
*சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மூன்று வருட சிறைத் தண்டனைக்கு எதிராக இஸ்லாமா பாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. விசாரணை நீதிமன்றம் சரியாக விசாரிக்காமல் தீ்ர்ப்பு வழங்கிவிட்டதாக புகார்.
*கடந்த 1973- ஆம் ஆண்டு வெளியாகி திகில் படங்களுக்கு முன்னோடியா திகழந்த Thr Exaorcist படத்தை இயக்கிய வில்லியர் பிரிட்கின் காலமானார்.. எக்ஸார்சிஸ்ட் படத்தின் காட்சிகளை வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் இரங்கல்.
*ரஜினிகாந்த் நடித்து உள்ள ஜெயிலர் படம் பெரும் வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டுதல்.. திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் ரசிகர்கள் அங்கப்பிரதட்சனம்.