தலைப்புச் செய்திகள் (08-09-2023)

*டெல்லியில் நாளை ஜி- 20 மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் .. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலியா பிரதமர் அல்பான்சி உட்பட பல நாட்டுத் தலைவர்கள் வந்து சேர்ந்தனர்

*முதன் முதலாக இந்தியா வந்த பைடனுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு… ஓட்டலுக்குச் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு

*அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை ..இரு தரப்பு உறவு,வணிகம்,தொழில் நுட்ப பறிமாற்றம் உள்ளிட்டவைக் குறித்து கருத்துப் பரிமாற்றம்.

*டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள ஜி- 20 மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனும் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல்.. ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டால் அமைப்பின் பெயர் ஜி-21 என்று மாற்றப்பட வாய்ப்பு.

*ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு தரப்பட உள்ள விருந்துக்கு முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா,மன்மோகன் சிங் ஆகியோருக்கும் அழைப்பு .. விருந்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்.

*நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பு.. ஜனதா தளத்துக்கு நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்க உள்ளதாக எடியூரப்பா அறிவிப்பு.

*இடைத் தேர்தலில் கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் வெற்றி .. மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டில் தலா ஒரு தொகுதியை திரினாமுலும் ஜே.எம்.எம்.கட்சியும் கைப்பற்றியது.

*திரிபுரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளையும் பாஜக வென்றது .. உத்தர்கண்டில் தேர்தல் நடைபெற்ற ஒரு தொகுதியும் பாஜகவுக்கு கிடைத்தது.

*உத்திர பிரதேசத்தில் கோஷி தொகுதியை கைப்பற்றியது சாமாஜ்வாதி கட்சி .. நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்று ஏழு தொகுதிகளில் நான்கை இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகள் கைப்பற்றியது.

*சமத்துவத்தை விரும்பாதவர்களுக்கு திராவிடம் என்ற சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது.. சென்னையில் மலையாளி கிளப்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

*நடிகர் விஷால் நடித்து உள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை …லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ 21 கோடியில் ரூ 15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு.

*கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் நான்கு பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஜடி போலீஸ் .. அக்டோபர் 13 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.

*செந்தில் பாலாஜி கடைசியாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் .. சட்ட விரோதப் பண பறிமாற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அடுத்த வாரத்தில் ஜாமீன் கிடைக்கக்கூடும் என்ற அமைச்சர் தரப்பு நம்பிக்கை.

*சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு .. ஆலோசனையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு.

*அதிமுக ஆட்சியில் பசுந் தேயிலைக்கு கிலோவுக்கு பத்து ரூபாய் மானியம் வழங்கியது போல இப்போதும் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை … அடிப்படை விலையை உயர்த்தித் தருவதற்கு மத்திய அரசை அணுகுமாறு வலியுறுத்தல்.

*விருத்தாசலம் அருகே இளையராஜா என்ற திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு … முன் விரோதம் காரணமாக ராஜசேகரனும் அவருடைய மகனும் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டதாக தகவல்.

*திரைப்பட இயக்குநராக வாழ்க்கையை தொடங்கி குணசித்திர நடிகராக விளங்கிய மாரிமுத்து 56 வயதில் நெஞ்சு வலியால் காலமானார் … சென்னையில் டப்பிங் ஸ்டுடியோவில் காலையில் பேசிக்கொண்டு இருந்த போது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட மாரிமுத்து உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.

*வாலி படத்தில் அறிமுகமான மாரிமுத்து அண்மையில் வெளியான ஜெயிலர் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் …நடிகர்கள் ரஜினிகாந்த், சரத் குமார் உட்பட திரை பிரபலங்கள் பலரும் இரங்கல்.

*ஹாங்காங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20 சென்டி மீட்டர் கன மழைக் கொட்டித் தீ்ர்த்தது .. சாலைகள் வெள்ளக்காடானது.

*உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்கு சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் …நேரில் வழங்கினார் பிசிசிஐ தலைமைச் செயலாளர் ஜெய் ஷா.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *