தலைப்புச் செய்திகள் (08-10-2023)

*உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி… அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை நிதானமாக விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற விராட் கோலி, கே.எல்.ராகுல் அணி.

*போர் பிரகடனத்தை அறிவித்தது இஸ்ரேல்…. இஸ்ரேலில் ஹமாஸ் படையினரின் தீடீர் தாக்குதலில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது…. 1973ல் நடைபெற்ற போருக்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது போர் பிரகடனத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல்.

*போரை தீவிர்ப்படுத்த போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தல்…. ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அறிவிப்பு.

*பாலஸ்தீனுக்கு ஆதரவாக களமிறங்கப்போவதாக அறிவித்தது ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு…. ஈரான், ஈராக், ஜோர்டான் எல்லையை கடந்து சென்று தாக்க திட்டம்.

*இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்…. ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்.

*பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது….ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

*டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்…. அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

*நாகை – இலங்கை இடையேயான பயணிகள் போக்குவரத்து கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியது…. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கப்பல் சோதனை ஓட்டம்….நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.

*புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது; யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்…. மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

*புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை….தற்போதைய நிலை தொடரும் என மத்திய அரசு தெரிவித்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கருத்து.

*அக்டோபர் 14ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவிப்பு… இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே மோதல் நிலவும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு.

*ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு… இந்திய வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும் கடின உழைப்பும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளதாகவும் பெருமிதம்.

*செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு…ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்… அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை.

*தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை…எவ்வளவு மணல்கள் அள்ளப்பட்டுள்ளது, கணக்கில் காட்டப்பட்டுள்ளது? என்பது குறித்து ஆய்வு.

*ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 2000 பேர் பலி – 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன…நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு…உயரமான கட்டிடங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி தெருக்களில் தஞ்சம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *