தலைப்புச் செயதிகள் … ( 08-11- 2023)

*ஆகம விதிகள் தெரிந்த எந்த சாதியினரையும் அர்ச்சராக நியமிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருந்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு … வழக்கு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அதுவரை தற்போதைய நிலை தொடர உத்தரவு.

*அதிமுக கொடி ,பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல் முறையீடு .. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக அறிவிப்பு.

*ஆள் கடத்தல் வணிகம் தொடர்பாக 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை … தமிழ் நாடு, புதுச்சேரி, கர்நாடகம்,தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் வங்க தேசத்தில் இருந்து ஊடுறுவியவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பு.

*சென்னை படப்பையில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது .. திரிபுரா மாநிலத்தவர்கள் என்று போலியாக அடையாள அட்டை தயாரித்து சென்னைக்கு வந்து வேலை செய்தது கண்டுபிடிப்பு.

*வங்க தேசத்து தொழிலார்களை வட மாநிலத்தவர்கள் என்று கூறி திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வேலையில் சேர்த்ததாக புகார் … போலியாக ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தவர்கள் பற்றி என்.ஐ.ஏ. விசாரணை.

*மகளிர் உரிமைத் தொகையை 2- வது கட்டமாக வழங்கும் விழா சென்னையில் 10 ஆம் தேதி .. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்

*சென்னையில் நடைபெற்ற திறந்த வெளி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.. சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்ட வழங்க ஆளுநர் மறுப்பதால் மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவையும் பொன்முடி புறக்கணித்தது குறிப்பிடத் தக்கது.

*திறந்த வெளிப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழால் உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திக்கும பங்கேற்க வில்லை… விடுமுறையில் இருப்பதால் பங்கேற்க வில்லை என்று தகவல்.

*சென்னை கோயம் பேடு பேருந்து நிலையத்தில் புறப்படும் ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம், பெருங்குடி வழியாக வியாழன், வெள்ளிக் கிழமைகளில் செல்லக்கூடாது … மதுரவாயல், நசரத் பேட்டை, வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல உத்தரவு.

*இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்கள் 12 பேரும் நிபந்தனைகளுடன் விடுவிப்பு .. யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை.

*சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் புதிய கட்டுமானங்கள் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்படுகிறதா ? கோயிலை நிர்வாகிக்கும் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம்.

*கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த சீனியர் மாணர்வகள் 7 பேர் கைது … மது குடிப்பதற்கு பணம் கேட்ட முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்ததாக பெற்றோர் புகார்.

*விருதுநகர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமன் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை .. கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்.

*திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர், துணை மேயர் வராததால் குழப்பம் … இன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த கூட்டம் ரத்து.

*தமிழ்நாட்டில் லாரி உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவிப்பு .. காலண்டு வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி போராட்டம்.

*திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி கவச விழா .. தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

*திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலை சுற்றி உள்ள சாலைகளில் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் .. தீபத் திருவிழாவின் போது ஏற்படும் நெரிசலை சமாளிக்க நடவடிக்கை

*கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ஆதி வாசிகள் குடியிருப்பில் போலீஸ் , மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச் சண்டை … இரண்டு பேர் கைது, இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

*நாடளுமன்றத் தேர்தல் ஏற்பாடு தொடர்பாக தென் மாநில தேர்தல் அதிகாரிகள் உடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் நாளை ஆலோசனை .. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அழைப்பு.

*பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்டார் .. கருத்தரிப்பு விகிதம் குறைவதுப் பற்றி பேசும் போது பெண்களை இழிவாக பேசியதாக கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து நடவடிக்கை.

*கடந்த 2016 ஆம் ஆண்டு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த நாள் இன்று … ஏ.டி.எம்.மையங்கள் முன் காத்துக் கிடந்ததை நினைவு கூர்ந்து வலை தளங்களில் விமர்சனம்.

*டெல்லி மற்றும் புறநகர்களில் காற்று மாசு குறையாதால் காலை எட்டு மணி வரை கூட சாலையில் வெளிச்சம் இல்லாத நிலை .. வாகனங்கள் விளக்குகளை எரியவிட்ட படி பயணம்.

*திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. மொகூவா மொய்த்ரா மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த ஊழல் ஒழிப்புத் துறை உத்தரவு … தொழிலபதிரிடம் பணம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.

*ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக இரண்டாவது வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது கேரளா அரசு .. சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று புகார்.

*நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் டிசம்பர் 2 வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு … ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியான பிறகு ஆரம்பமாகலாம் என்று தகவல்.

*உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் நகரத்தின் பெயர் மாறுகிறது … ஹரி கர் என்று மாற்றக் கோரி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்.

*அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இருவரும் நாளை டெல்லிக்கு வருகை .. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாது காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சு நடத்த முடிவு.

*காசா முனையை வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டாக பிரித்து மையத்தில் இஸ்ரேல் படைகள் முற்றுகை .. பொதுமக்களையும் ஹமாஸ் தீவிரவாதிகளை தனித்தனியாக பிரித்து தாக்குதல் நடத்த திட்டம்.

*அரபிக் கடலில் புதிய காற்றழுத்தப் பகுதி உருவானது .. தமிழ் நாட்டில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு .

*காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதன் எதிரொலி .. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

*ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நிரம்பியதால் தென் பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம் .. கரை ஓரம் வசிப்பவர்களுக்க எச்சரிக்கை.

*கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியது .. பானத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய அமைப்புகள் கோரிக்கை.

*கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சுக்காக தர வரிசை பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் முதலிடம் … சர்வதேச அளவில் பேட்டிங்க் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் சுப்மன் கில்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *