*பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்தின் 266 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னணி நிலவரம் தெரியவந்துள்ள 163 தொகுதிகளில் சிறையில் உள்ள இம்ரன்கானின் தெக்ரிக் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சைகள் 73 இடங்களில் முன்னிலை…. நவாஷ் ஷெரிப்பின் முஷ்லிம் லீக் கட்சி 48 இடங்களிலும் பிலவால் புட்டோ வின் மக்கள் கட்சி 35 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்.
*பாகிஸ்தான் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இம்ரான்கானின் தெக்ரிக் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் அனைவருக்கும் வியப்பு … தெக்ரிக் கட்சிக்கு சின்னம் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுத்ததால் அந்த கட்சி நிர்வாகிகள் சுயேட்சையாக வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டும் முன்னிலை வகிப்பதே வியப்புக்கு காரணம்.
*இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். …தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திட உரிய தூதரக வழிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்,
*கடந்த 2023 – ஆம் ஆண்டில் மட்டும் 243 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது …. கடந்த 28 நாட்களில் 48 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தகவல்.
*முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு… பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
*சரண் சி்ங்குக்கு பாரத ரத்ணா விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய பேரன் ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ஆர்.எல்.டி கட்சி அதிரடி முடிவு … இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஆர்.எல்.டி.கட்சி உடனே பாஜக கூட்டணியில் இணைந்தது.
*சென்னையில் நேற்று 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இண்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு. இ-மெயிலில் மிரட்டல் விடுத்தவர் ஐ.பி. முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் இண்டர்போல் உதவியை நாட திட்டம்.
*முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம்…. எம்ஜிஆர்-ன் முகம் காட்டித் தான் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது என்று பேச்சு.
*தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் உள்ள பணியிடங்களை சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப வேண்டும் … ரயில்வே அமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்.
*திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவில்லை….ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தவில்லை என்றும் அன்புமணி புகார்.
*சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேலு பிப்வரி 29 – ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறு பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு அரசு உத்தரவு … பல்கலைக் கழகத்திற்கு கணிப்பொறி வாங்கியது உட்பட பலவற்றில் ஊழல் செய்துள்ளதாக புகார்.
*சென்னை பெரம்பூர் பின்னி மில் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கடந்த 2015 – ஆம் ஆண்டு அனுமதி பெற்றதில் ரூ 50 கோடி லஞ்சம் கைமாறிய புகாரின் பேரில் சென்னையில் பல இடங்கஙளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை … கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு.
*நெல்லை – மேலப்பாளையம் இடையே இரு வழிப்பாதை பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாளான ஞாயிற்றுக் கிழமை முதல் 21- ஆம் தேதி வரை 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து … நெல்லையில் இருந்து காலையில் திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 20- ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
*போலி பில் தயாரித்து வணிகம் செய்கிறவர்களின் ஜி.எஸ்.டி.பதிவை முடக்க வேண்டும் என்றும் அதிகாரிளுக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு … அரசின் வரி வருவாயை உயர்த்துமாறும் வேண்டுகோள்.
*தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு…. கன்னியா குமரி உட்பட மற்ற இடங்களிலும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் குவிந்தனர்.
*புதுச்சேரியில் முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய அனுமதிக்க முடியும் என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு…. புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை.
*இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் பிப்.14 முதல் மார்ச் 15 வரை trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் … தேர்வு வாரியம் அறிவிப்பு
*ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் சாதனை .. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்தார் பதும் நிசாங்கா. 2000- ஆம் ஆண்டு சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்களே, ஒரு இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
*தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் என்ற பெருமைக்கு உரிய கோவை டிலைட் திரையரங்கத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை … கடந்த 1914 – ஆம் ஆண்டு வெரைட்டி ஹால் திரையங்கம் என்ற பெயரில் இந்த அரங்கத்தைக் கட்டி ஊமைப் படங்களை திரையிட்டார் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர்.
*ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் திரைப்படம் திரையரங்குளில் வெளியானது … ரஜினிகாந்த் நடித்து உள்ள காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447