*அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் ….குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது,சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை கடைபிடிக்க முடியாது என்றும் கருத்து.
*மகாராட்டிரா மாநிலத்தில்ா I.N.D.I.A. கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு…. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே ) 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டி.
*சென்னையி்ல் தியாகராயர் நகர் பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வரை இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்குச் சேகரிப்பு … வேட்பாளர்கள் தமிழசை சவுந்தர் ராஜன், வினோஜ் செல்வம்.பால்.கனகராஜ் ஆகியோரை ஆதரிக்கக் கோரிக்கை.
*பிரதமரின் வாகனப் பேரணியைக் காண பாஜகவினர் ஆர்வம் … சாலையில் இரண்டு புறண்டு திரண்டு நின்று மலர்களை தூவி மோடியை வாழ்த்தி முழக்கம்.
*போதைப் பொருள் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் வீடு உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…போதை பொருள் மூலம் வந்த பணம் மற்றும் இதில் யாருக்கு தொடர்பு என்பது குறித்து விசாரணை.
*சென்னை தியாகராயர் நகரில் இயக்குநர் அமீர் அலுவலகத்தில் காலையில் தொடங்கிய சோதனையை தொடர்ந்து சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் உள்ள வீட்டிலும் சோதனை … வீடு பூட்டியிருந்ததால், 10 நிமிடங்கள் காத்திருந்து பிறகு சோதனயை ஆரம்பித்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
*ஜாபர் சாதிக் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குவதால் இயக்குநர் அமீருக்கு பிரச்சினை …கடந்த வாரம் டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்த அமீர் வீடு இப்போது சோதனைக்கு ஆளாகி இருப்பதால் பரபரப்பு.
*முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக் குறைவால் காலமானார்….எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்
*மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை திருமாவளவன் வெளியிட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்…. வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத் திருநாளாக அங்கீகரிக்க வலியுறுத்தல்.உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கவும் கோரிக்கை,
*கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது…கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் வனத்துறையினர் நடவடிக்கை
*குருப் – 2 பிரிவில் 5,990 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி … ஒரு பணியிடத்திற்கு இரண்டரை பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்க முடிவு.
*குருப் *-2 தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு … https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/03_2022_RANKLIST_PHASE_II.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
*கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியலும் வெளியாகி உள்ளது. … மொத்தம் 198 பேர் கொண்ட பட்டியலில், 850 மதிப்பெண்களுக்கு 587 புள்ளி 25 மதிப்பெண்கள் பெற்ற பெண் ஒருவர் முதலிடம் … குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 198 பேருக்கும், வரும் 12ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கலந்தாய்வு.
*இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அனுமதி … நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெறுகிறது.
*சென்னை தி மயிலாப்பூர் இந்து சாசுவாத நிதி லிட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ 525 கோடியை திரும்பக் கொடுக்க மறுப்பதாக முதலீட்டாளர் கள் தெரிவித்து உள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு … நிதி நிறுவனத்தின் தலைவரும் சிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளருமான தேவநாதன் பணத்தை கையாடல் செய்து விட்டதாக தகவல்.
*ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை வீரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் நான்கு மீனவர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பினர்… கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.
*இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது Z பிரிவு பாதுகாப்பு.. உளவு அமைப்பினர் அளித்த தகவலை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை.
*கேரளாவில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரின் சொத்துகளை மதிப்பிடுமாறு நேரடி வரிகள் வாரியத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு … வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் உண்மையானதல்ல என்று காங்கிரஸ் செய்த புகாரின் பேரில் நடவடிக்கை.
*பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங், அவருடைய மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரேம லதா இருவரும் காங்கிரசில் இணைந்தனர்.. பிரேந்தர் சிங்கின் மகன் பிரிஜேந்தர் சி்ங்கும் ஒரு மாதத்திற்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தது குறிப்பிடத் தக்கது.
*கேரளாவில் பத்தனம் திட்டம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமது மகன் அணில் அந்தோணி தோற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி பேட்டி .. காங்கிரஸ் கட்சியில் இருந்த அணி்ல் அந்தோணி சில மாதங்களுக்கு முன்பு காஙகிரசி்ல் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்.
*குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய் பட்டவர்கள் வெயிலில் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தல் …மேலும் ‘ORS’ எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுரை.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447