*நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.. பாரதீய ஜனதா கட்சியினர் தேச விரோதிகள் என்றும் காட்டமாக விமர்சனம்.

*கும்பகர்ணணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்தது போன்று அதானி மற்றும் அமித்ஷா பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புகார்.. பாஜக அரசின் ஆணவத்தால் முதலில் மணிப்பூரும் இப்போது அரியானாவும் பற்றி எரிவதாக குற்றச்சாட்டு.

*மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதாததால் பிரதமர் இதுரை அங்கு செல்லவில்லை.. தாம் நேரில் சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அறிந்து வந்ததாக ராகுல் காந்தி பேச்சு.

*மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்… வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ் என்று குற்றச்சாட்டு.

*பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் முழக்கம்.. எதிர்க்கட்சிகள் ஊழல் மற்றும் திறமை இன்மையின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கண்டனம்.

*பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தொழிலபதிர் அதானியுடன் உள்ள புகைப்படத்தை அவையில் காட்டி ஸ்மிரிதி ராணி பேச்சு.. பழங்குடி மக்களின் எதிர்ப்பை மீறி அதானிக்கு நிலம் வழங்கியது காங்கிரஸ் அரசுதான் என்று ராகுல் காந்திக்கு பதில்..

*கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சத்துணவு மையங்களில் ஆகஸ்டு 14- ஆம் தேதி இனிப்புப் பொங்கல் .. தமிழ்நாடு அரசு உத்தரவு.

*தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களால் உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சிறிய வாய்ப்புக் கிடைத்தால் கூட அதைக் கொண்டு தமிழக மாணவர்கள் முன்னேறி விடுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

*அமைச்சர் செந்தில் பாலாஜயிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை.. வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்து ஆதராங்களை வலுப்படுத்துகிறது அமலாக்கத்துறை.

*கரூரில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கட்டும் பிரமாண்ட பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு.. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அசோக்குமார் ஆஜராக உத்தரவிட்டு சுவற்றில் நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை.

*356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை 90 முறை காங்கிரஸ் கட்சி கலைத்த நாள் தான் ஜனநாயகத்தின் கருப்பு நாள்.. டெல்லி அரசின் மசோதா நிறைவேறிய நாள் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்ற ஸ்டாலின் சொன்னதற்கு அண்ணாமலை பதில்.

*மதுரையில் ஆகஸ்டு 20- ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதில் அதிமுக தீவிரம்.. மழை வந்தால் சமாளிக்க மாநாட்டு அரங்கில் சிமெண்ட் காங்கீரிட் தளம் அமைக்க நடவடிக்கை.

*கேரளா என்ற பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு சட்டசபையில் தீர்மானம்.. முதலமைச்சர் பினராய் விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்.

*வாரிசு மற்றும் ஊழல் அரசியல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூளுரை.

*நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இமய மலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.. நாளை ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில் ஆன்மீக பயணம் ஆரம்பம்.

*ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்.. ஆறு படை விடு கோயில்களில் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ஏற்பாடுகள்.

*கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை வெளியீடு… சென்னையில் வரும் 16 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடைபெறும் என அறிவிப்பு.

*இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையில், 9 போட்டிகளின் தேதி மாற்றம்… அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி, அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *