*வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றுவது என்று டெல்லி ஜி 20 மாநாட்டில் தீர்மானம் …அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் பிரகடனம்.
*பாலின இடைவெளியை குறைப்பது, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை 43 சதவிகிதமாக 2030 ஆம் ஆண்டுக்குள் குறைப்பது உட்பட மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றம் .. பயங்கரவாதச் செயல்களுக்கும் ஜி 20 மாநாட்டில் கண்டனம்.
*பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதராம்,எரிசக்தி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உறுதியானத் தீர்வைக் காண வேண்டும் என்று ஜி 20 நாடுகள் மாநாட்டு தொடக்க உரையில் பிரதமர் மோடி கருத்து… வளமான எதிர்காலத்திற்காக ஜி 20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தல்.
*தென்னாப்பிக்கா யூனியனை ஜி 20 நாடுகள் அமைப்பில் சேர்ப்பதற்கு பிரதமர் மோடி முன்மொழிந்தது ஏற்பு .. கூட்டமைப்பை ஜி 21 என்று இனி அழைக்க முடிவு.
*டெல்லி ஜி 20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பெயர் பலகை .. நாட்டின் பெயர் மாற்றப்பட இருப்பதை மறைமுகமாக உலக நாடுகளுக்கு உணர்த்த ஏற்பாடு.
*பிரதமர் மோடி டெல்லியில் பிரிட்டன் பிரதமர் ரிஷி மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை …பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புக் குறித்து கருத்து பறிமாற்றம்.
*தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்த போது சீமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ரூ 317 கோடி ஊழல் செய்ததாக புகார் .. நந்தியாலில் தங்கி இருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது ஆந்திர மாநில அரசு.
*சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் மறியல், போக்குவரத்த பாதிப்பு .. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்.
*தம்மை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று சந்திரபாபு நாயுடு புகார் .. எந்த ஊழலையும் செய்யாததால் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் பேட்டி.
*கரும்பு பயிர் மஞ்சள் அழுகல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை…ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை.
*நடிகை விஜயலட்சுமி தம்மை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக கொடுத்த புகாரில் போலீஸ் கொடுத்த சம்மனை ஏற்று சீமான் இன்று ஆஜராகவில்லை .. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 12 ஆஜராவதாக பதில்.
*மதுரை மாவட்டம் வேம்பன் குளத்தில் நிலத்தை ஆக்கிரமித்து காளியம்மன் கோயில் கட்டப்படுவதற்கு எதிராக வழக்கு .. கட்டுமான பணிகளை உடனே நிறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் மறியல் போராட்டம் .. சென்னை அடுத்த வானகரத்தில் நடந்த மறியலில் பிரேமலதா பங்கேற்பு.
*தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த இழுவைக் கப்பல் தரை தட்டியது … அணுமின் நிலைய ஊழியர்கள் மீனவ மக்களுடன் இணைந்து கப்பலை மீட்க முயற்சி.
*விருத்தாசலம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ.மகன் நேற்று துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு … ஒன்பது பேரை கைது செய்து விசாரணை.
*நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் சென்னையில் கூடி ஆலோசனை .. நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப் பட்டதாக தகவல்.
*தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் .. சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை.
*ஆப்பிரிக்காவின் வடக்கில் உள்ள மொராக்கோ நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரம் பேர் இறப்பு .. தூங்கிக்கொண்டிருந்த பல பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்ட பரிதாபம்.
*மொரோக்க நாட்டின் மையப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளி 8 ஆக பதிவு .. பல நூறு கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியது. மீட்புப் பணிகள் தீவிரம.
*திரைப்பட நடிகர் மாரிமுத்து உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரியில் தகனம் .. உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலரும் அஞ்சலி.