*புயல்,மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ ஆறு ஆயிரம் வழங்குவது என்று சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு.. அந்தந்த இடத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவிப்பு.
*வெள்ளத்தால் கால்நடைகள் இறந்திருந்தால் தலா ரூ 37,500 நிவாரணம் … மழையால் விவசாயப் பயிர் பாதிக்கப்பட்ட இருந்தால் ஹெக்டேருக்கு ரூ 17 ஆயிரம் தருவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு.
*சென்னையில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கருக்கா வினோத் என்பவரால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு.. கடந்த மாதம் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்ட தேசிய புலனாய்வு முகமை நேரடி விசாரணையை தொடங்கியது.
*கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு..பெட்ரோல் குண்டுவீச்சை நேரில் பார்த்ததாக கூறப்படும் ஆயுதப்படை காவலர் சில்வானை தேசிய புலனாய்வு முகமைக்கு அழைத்துச் சென்று விசாரணை.
*மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரணப் பணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் ரூ.10 லட்சம் நிதி.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் முதல்வரிடம் அளிப்பு.
*மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் மலிவு விலை காய்கறிகள் விற்பனை… வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைப்பு.
*மழை நீர் வடியும் கால்வாய் பணிகள் 90% முடிவடைந்துவிட்டதாக முன்பு சொன்னவர்கள் தற்போது 45% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக சொல்கிறார்கள்…. வடி நீர் கால்வாய் அமைக்கும் பணியில் மொத்தம் எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி.
*மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பொழிவால் நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளது…. விவாசயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவொற்றியூரில் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படும்.. உயர் கல்வித் துறை அறிவிப்பு.
*மகுவா மொய்தராவின் எம்.பி.பதவி பறிப்பு இந்திய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது .. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.
*ஒகேனக்கல் மலைப்பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேண் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்து.. விழுப்புரத்தில் இருந்து சுற்றுலா வந்தவ 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
*காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான சோனியா காந்தி 77- ஆவது பிறந்த நாள் … நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி பதிவு.
*குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக வாகன ஓட்டிகளிடம் ₹75 கோடி வசூலித்திருப்பது அம்பலம்.. தனியார் நிலத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து, அதற்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றிவிட்டு வசூல் செய்தவர்களை கைது செய்து விசாரணை.
*ஒரிசாவை மையமாக கொண்ட மதுபான ஆலை தொடர்பான இடங்களில் நான்காவது நாளாக வருமானவரிச் சோதனை .. இது வரை கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ 290 கோடி இருக்கும் என்று தகவல்.
*காசா முனையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது அமெரிக்கா … ஹமாசிடம் பிணைக்கைதிகளாக 200 பேர் உள்ள நிலையில் போர் நிறுத்தம் ஒருதலைப் பட்சமானது என்று கருத்து.