*திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதாக பிரதமர் மோடி வேலூரில் புதிய நீதிக் கட்சி் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசுகையில் புகார் … தற்போதைய திமுக நிர்வாகிகள் பெண்களை அவமதிப்பதை வேலூர் மக்கள் அறிவார்கள் என்றும் கருத்து.
*’தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்’ … அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டதாக பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
*வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…. பிரதமர்களை உருவாக்கும் இயக்கம் தி.மு.க. என்றும் பேச்சு.
*திருநெல்வேலியில் நாளை மறுதினம் ஆறு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி … நெல்லை நகரம் உள்ளிட்ட இடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடைவிதிப்பு.
*வடலூரில் தமிழக அரசு சார்பில் ரூ 100 கோடி செலவில் கட்டப்படும் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணி நிறுத்தம் … தைப் பூச திருநாளன்று லட்சக் கணக்கானோர் ஜோதி தரிசனத்திற்கு கூடும் ஞான சபை வளாகத்தில் சர்வேதேச மையம் கட்டுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தள்ளி வைப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்ககா விட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோவையில் நடந்த பரபரப்புரைக் கூட்டத்தில் சீமான் வேண்டுகோள் … வாக்குப் பதிவு முடிந்து 44 நாட்கள் கழித்து வாக்கு எண்ணுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கருத்து.
*கோயம்புத்தூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுதினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி , ஸ்டாலின் பங்கேற்பு … கோவைக் கூட்டத்திற்குப் பிறகு பெரிய திரும்பு முனை ஏற்படும் என்று செல்வ்பெருந்தகை நம்பிக்கை.
*போதைப் பொருள் கடத்தல் வழக்குத் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் வீடுகள், அலுவலகங்களில் நேற்று தொடங்கிய அமலாக்கத் துறை சோதனை நிறைவு … இயக்குநர் அமீரை மீண்டும் டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்புத் துறை முடிவு.
*கடலூர் சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன சேமிப்பு கிடங்கு தீ பற்றி எரிந்தது…. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு வீரர்கள்.
*முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல் சென்னை நுங்கம்பாக்கம் இடுகாட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் … பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி.
*மதுரை அடுத்த திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு….குலதெய்வ கோயிலுக்குச் சென்று திரும்பிய தளவாய்புரத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்த பரிதாபம்.
*சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35 ரூபாய் அதிகரித்து 6,705 ரூபாய்க்கும், ஒரு சவரன் 280 ரூபாய் அதிகரித்து 53,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது…. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.89க்கு விற்பனையாகிறது.
*டெல்ல ஆம் ஆத்மி அரசின் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் ராஜினாமா … ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய ஆம் ஆத்மி கட்சி ஊழல் புகாரில் சிக்கித் தவிப்பாதல் இனி அந்தக் கட்சியில் நீடிக்க விரும்பவிலலை என்று விளக்கம்.
*டெல்லி உயர்நீதிமன்றம் கைதுக்கு தடை விதிக்க மறுத்ததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு … நான்கு நாட்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால் கெஜ்ரிவால் மனு திங்கள் கிழமைக்கு விசாரணைக்கு வர வாய்ப்பு.
*கேரளாவில் திருச்சூர், அட்டிங்கால் ஆகிய இடங்களில் ஏப்ரல் 15- ஆம் தேதி மோடி பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் கோழிக்கோட்டில் பிரமாண்டப்பேரணியில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி …மோடியும் ராகுலும் ஒரே நாளில் பரப்புரை செய்ய இருப்பதால் கேரளாவில் கூடுதல் பாதுகாப்பு.
*பதஞ்சலி நிறுவனம் மற்ற மருத்துவ முறைகள் பற்றி தவறாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம் தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு … பதஞ்சலி நிறுவன வழக்கில் மத்திய அரசின் செய்பாடு திருப்தியாக இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து.
*டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி தாக்கல் செய்தவருக்கு 50,000 ரூபாய் அபராதம்….முன்னாள் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ சந்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை 50,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
*இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 படத்தில் பிரபல நடிகை மணிஷா கொய்ராலா சிறிய பாத்திரத்தில் நடிக்கும் படம் வலைதளத்தில் வெளியானது … ஜுன் மாதத்தில் இந்தியன் -2 வெளியாகும் என்று தகவல்.
*சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்து மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் உயிழப்பு … கடந்த 2018- ஆம் ஆண்டு திரைக்கு வந்த கினாவ்லி படத்தில் அறிமுகமான சுஜித் ராஜேந்திரன் மறைவால் பலரும் அதிர்ச்சி.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447