* ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கின்றன… தீர்மானத்தின் மீதான பதிலுரையில் பிரதமர் மோடி விமர்சனம்.
* எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி மீது அக்கறை இல்லை, அதிகாரத்தின் மீதே ஆசை என பிரதமர் மோடி புகார்…. ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பேச்சு.
* அப்துல்கலாம், ராஜாஜி பிறந்த தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து திமுக பிரித்து பேசுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு… வட இந்தியா மட்டுமே இந்தியா என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாகவும் புகார்.
* இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த நிலையில், கச்சத்தீவை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார்… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு.
* மக்களவையில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும்போது மணிப்பூர்… மணிப்பூர்… என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்… மணிப்பூரை பற்றி மோடி பேசத்தொடங்கியதும் வெளிநடப்பு…
* மணிப்பூரின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சியின் அரசியலே காரணம்… இதுவரை வடக்கிழக்கு மாநிங்களுக்கு 50 முறைக்கும் மேல் பயணம் செய்துள்ளதாகவும் மோடி பேச்சு. .
* வடகிழக்கு மாநிலங்களை நேரு புறக்கணித்ததால் அதன் விளைவை தற்போது காண்கிறோம்… 1962 ஆம் ஆண்டு நேரு அசாம் மக்களுக்கு துரோகம் செய்ததாகவும் மோடி காட்டம்.
* வடகிழக்கு மாநிலங்கள் எதிர்க்காலத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எனது கனவு என பிரதமர் மோடி உருக்கம்… மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்கள் தலையாயபணி என்று பேச்சு.
* பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…. 2028ஆம் ஆண்டிலும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் என்றும் பிரதமர் மோடி விமர்சனம்…
* நாடாளுமன்றத்தில் ராகுல் தெரிவித்த கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக மீது புகார் சொல்கிறார் மத்திய அமைச்சா் ஸ்மிருதி ராணி.. பூச்சாண்டிகளுக்கு பயந்து ஒதுங்கிற இயக்கம் அல்ல திமுக என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை.
* வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதிம் ஆறு புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
* சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதி மாற்றப்படலாம் என்று தகவல்.. ஜனவரி 10,11க்குப் பதில் 7மற்றும் 8- ஆம் தேதிகளில் நடத்தப்பட வாய்ப்பு.
* சென்னையை சேர்ந்த ஓசியானிக் எடிபில் என்ற நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை.. 225 கோடி ரூ பாய் வங்கி மோசடி தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ.வழக்குப் பதிந்து உள்ள நிலையில் இப்போது அமலாகத்துறை நடவடிக்கை.
* என்.எல்.சி.சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகியவற்றால் நிலம், காற்று மாசுபடுவதாக புகார்.. மத்திய, மாநில மாசு கட்டுபாட்டு வாரியங்கள் பதில் அளிக்க தென்மண்ட பசுமை தீ்ர்ப்பாயம் உத்தரவு.
* சென்னை சூளைமேட்டில் பள்ளி விட்டு வீடு திரும்பிய சிறுமி. மாடுகள் வளைத்து வளைத்து முட்டியத் தள்ளியதில் காயம்.. மாடுகள் முட்டும் வீடியோ காட்சி வலைதளங்கில் வைரலாகி பரவியதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி
* சிறுமியை முட்டிய மாட்டு உரிமையாளர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு .. தெருக்களில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு.
* மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் காவிரி டெல்டாவில் பல ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர் நெல் பயிர் கருகும் அபாயம்…கருகும் நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
* அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மிக மோசமான முறையில் நடத்தப்பட்டு உள்ளதாக கூறி தாமாக முன் வந்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடவடிக்கை .. லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பொன்முடி பதிலளிக்க உத்தரவு/
* சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய புறநகர் ரயில் நிலையத்தை அடுத்த மாதம் திறக்க நடவடிக்கை ..பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையம் கட்டுமாறு தமிழக அரசு தரப்பில் ரயிவேக்கு கடிதம் எழுத்தப்பட்டு உள்ளதாக தகவல்.
* சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை எதிரொலி ..சென்னையில் இருந்து கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கான விமானங்களின் கட்டணம் இரண்டு மடங்கு கூடியது
* அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனுக்கு வலை தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் சுட்டுக்கொலை..போலிசார் கைது செய்ய வந்த போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழப்பு.
* கடந்த இரண்டு வாரங்களாக உச்சத்தை தொட்டிருந்த தக்காளி விலை ஓரளவு குறைந்தது .. சென்னையில் சில்றை கடைகளில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை.
* நடிகர் ரஜினி காந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் .. கட் அவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்து கொண்டாட்டம்.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய கன மழை .. அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பருவ நெல் பயில் தண்ணீரில் நினைந்ததால் விவசாயிகள் வேதனை..
* சென்னை மற்றும் புறநகரில் லோசான மழை .. கடந்த சில நாட்களாக நிலவிய வறண்ட வானிலை மாறி குளிர்ச்சியான சூழல்.