தலைப்புச் செய்திகள் (10-09-2023)

*அடுத்த ஜி- 20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை ஏற்கிறது பிரேசில்…. அந்த நாட்டு அதிபரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி.

*ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா எடு்த்து வரும் முயற்சிக்கு ஜி 20 நாடுகளின் மாநாட்டு தீர்மானம் வலுசேர்த்து உள்ளது… அமெரிக்கா வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பைனர் கருத்து.

*டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி … காந்தியின் வீட்டை அகன்ற திரையில் காட்டி உலக தலைவர்களுக்கு மோடி விளக்கம்.

*அனைவருக்கும் அதிக வர்ய்ப்பு என்பதே ஜி- 20 நாடுகளின் நோக்கம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தி.. மூன்று நாள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பைடன் வியாட்நாமுக்கு பயணம்.

*டெல்லியில் குடியரசு தலைவரின் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் …ஜோ பைடனுக்கு ஸ்டாலினை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி

*ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு முன்னேறியது… அடுத்தகட்டப் பணிகள் 15- ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு.

*நந்தியாலில் நேற்று கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இடம் இன்று 10 மணி நேரம் தொடா்ச்சியாக விசாரணை… 14 நாட்கள் சிறையில் அடைக்க விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு.

*ஆட்சியில் இருந்த போது ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஊழல் செய்தார் என்பது சந்திரபாபு நாயுடு மீது புகார்… கைது செய்யப்பட்டதால் விஜயவாடா உட்பட ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு.

*சென்னை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில் குட முழுக்கு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆயிரமாவது நிகழ்வு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில் பதிவு … இறை நம்பிக்கை உள்ளவர்கள் போற்றும் அரசாக திமுக அரசு செயல்படுவதாக பெருமிதம்.

*நாடளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கணிப்பு ..தொண்டர்கள் தயாராக இருக்கும்டி அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வேண்டுகோள்.

*தமிழ் நாடு அரசின் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்து உள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தில் பெறப்பட்ட ஆதராத்தின் மூலம் உறுதியாகி உள்ளது … கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதாக அண்ணாமலை புகார்.

*நடிகர் சங்கத்திற்கு சென்னையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் … நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பின் தலைவர் நாசர் அறிவிப்பு

*தருமபுரிஅருகே தம்மனம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறப்பு…. உடல்களை அதியமான் கோட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை …

*கூடங்குளம் அணு உலைக்கு மிதவை கப்பல் மூலம் கொண்ட 300 டன் எடை கொண்ட நீராவி ஜெனரேட்டரை மீட்பதில் தாமதம்… கடல் அலை சீற்றம் அதிகம் காணப்படுவதால் மீட்பு பணி மேலம் இரு தினங்கள் ஆகும் என தகவல்.

*மெரோக்கோ நாட்டில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,000 -த்தைத் தாண்டியது .. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக நீடிப்பு.

*ஒவ்வொரு கிராமத்திலுல் ஒரே இடத்தில் பல நூறு உடல்கள் குவிந்து கிடக்கும் பரிதாபம் … மொராக்கோ நாட்டின் பல சாலைகள் சேதம் அடைந்த விட்டதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்வதில் தாமதம்,

*அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் சாம்பியன் … இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் 19 வயது கோகோ.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *