*சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது தவறு என்று உச்சநீதிமன்றம் கருத்து … மசோதாக்கள் மீது மாற்றுக் கருத்து இருந்தால் விரைவாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஆளுநருக்கு அறிவுரை.
*மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசு மனு மீது விசாரணை … மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணை நவம்பர் 20 ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு.
*சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பான வழக்கில் சட்டமன்ற சபாநாயகர், மற்றும் செயலாளர் பதில் தர உத்தரவு… சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை.
*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களின் நவம்பர் மாத தொகை உடனே வரவு வைக்கப்படும் என்று அறிவிப்பு.
*கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்த தமக்கு மக்களை பார்க்கும் போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி மேலிடுகிறது…தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்வு இருக்கக்கூடாது என்று நிகழ்ச்சிக்கு வந்ததாக ஸ்டாலின் பேச்சு.
*அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு என்ன என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி … வேலூர் தீர்ப்பை படிப்பதற்குள் உயர்நீமன்றம் மறு விசாணைக்கு எடுத்துவிட்டதாக பதில்.
*தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் தீபாவளிக்காக நேற்று ஒரே நாளில் 1,36,700 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் ..அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 2,23,613 பேர் முன்பதிவு செய்திருந்ததாகவும் போக்குவரத்துத் துறை தகவல்.
*சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் … தாம்பரம், செங்கற்பட்டு இடையே போக்குவரத்து நெரிசல் …
*கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு … மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் நவ. 16 ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
*அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 200 பேருக்கு எடப்பாடி பழனிசாமி தீபாவளி பரிசு அளித்து பாராட்டு … சேலம் வீட்டுக்கு அனைவரையும் அழைத்து ரொக்கம், இனிப்பு வழங்கி கௌரவிப்பு.
*அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீது நவம்பர் 15 ஆம் தேதி விசாரணை.. இன்று விசாரிக்கப்படுவதாக இருந்த மனுவை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் நடவடிக்கை.
*ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீ்ர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் …. வழக்கறிஞர்களின் கருத்துக்கு ஏற்ப அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சட்ட அமைச்சர் ரகுபதி தகவல்.
*அடுத்த 2024 ஆம் ஆண்டில் 24 நாட்களை விடுமுறை தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு .. திங்கள் கிழமைகளில் ஆறு நாட்களும் புதன்கிழமைகளில் ஐந்து நாட்களும் விடுமுறை.
*பிரபல திரைப்பட பைனான்சியர் போத்ராவின் மகன் ககன் போத்ரா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது … போலி ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் நடவடிக்கை.
*மாநகராட்சி இடத்தில் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் என்று உத்தரவாதம் தர வேண்டும் .. அண்ணாமலை வீட்டு முன் கொடிக்கம்பம் வைப்பதற்கு ரகளை செய்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் ஜாமீன்.
*வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையும் வரை சரண் அடைவதற்கு விலக்கு … உச்சநீதிமன்றம் உத்தரவு.
*வைகை அணை முழு கொள்ளவை எட்டியது… பெரியார் பாசன பகுதிக்காக விநாடிக்கு 900 கன அடி திறப்பு.
*மாநில அரசு அனுப்பிய மேசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும், மாநில அரசின் செயல்பாடுகளை எவ்வாறு கிடப்பில் போட முடியும்? .. பஞ்சாப் ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கு தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி.
*ஆளுநரின் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட பஞ்சாப் சட்டசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் … மாநில அரசின் மசோதாக்களை முடக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து.
*அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் டெல்லியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு … பாதுகாப்பு, உயர் தொழில் நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை.
*ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் தலைவர் பவன் காந்த் முன்சாலின் ரூ 25 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் .. சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை.
*தலைநகர் டெல்லியில் பெய்த லேசான மழையால் காற்று மாசு ஓரளவு குறைந்தது … செயற்கை மழை பெய்விக்க அரசு யோசித்த நிலையில் இயற்கை மழை கை கொடுத்தது.
*காசா முனையில் நான்கு மணி நேரம் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இஸ்ரேல் .. வடக்குப் பகுதியில் வசிப்பவர்கள் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்தனர்.