*இந்தியாவில் திடீரென 166 பேருக்கு கோவிட் பாதிப்பு .. அதிகம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ..மீண்டும் கோவிட் பரவல் அதிமாகவிடுமோ என்று அச்சம்.
*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குப் பின் பள்ளி,கல்லூரிகள் நாளை திறப்பு … வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்க நடவடிக்கை.
*மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமானதால் அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு… நாளை மறுதினத்திற்குள் 4 மாவட்டங்களிலும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.
*ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வுக்கு புதிய அட்டவணை வெளியீடு .. டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..
*மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்… எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்குமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, கூடுதலாக ரூ.25,000 வழங்குமாறு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை .. சகதி, குப்பை கழிவுகளை அகற்றுவதுடன் கிருமி நாசினிகளை தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்குமாறும் அறிக்கை.
*நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பர்லியார் அருகே மண் சரிவு .. மேட்டுப்பாளையம், குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கும் என்பதற்காக திமுக அரசின் ஊது குழலாக செயல்படுகிறார் நடிகர் கமலகாசன்… வெள்ளநிவாரணம் பற்றி அரசுக்கு ஆதரவாக கமல் பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்.
*சென்னை மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியமானது..விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை.
*நாகப்பட்டடினம், காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது… ராமேஷ்வரத்தில் சென்ற மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்.
*துபாயில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்புடைய, தங்க செயின்களை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வந்த பெண் பயணி கைது. .. சிங்கப்பூர் விமானத்தில 1.73 கிலோ தங்கப் பசை, பசையை இருக்கையின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, தப்பிச் சென்ற நபருக்கு வலைவீச்சு.
*ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்…. நாளை மறுதினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆஜராக உள்ளதாக தகவல்.
*தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,359 போலீஸ் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு .. மாநிலம் முழுவதும் 200 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பல ஆயிரம் பேர் பங்கேற்பு.
*இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்கு குணமடைந்து வருகிறார் … விரைவில் வீடு திரும்புவார் என்ற மருத்துவமனை நிர்வாகம் தகவல் .
*முன்னாள் மத்திய அமைச்சரும் பழங்குடி சமூக மக்களின் தலைவருமான விஷ்னு டியோ சாயை சத்தீஷ்கர் மாநில முதலமைச்சராக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு … முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங், முதல்வர் பதவி கிடைக்காததால்அதிருப்தி என்று தகவல்.
*பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தமது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் என்ற 28 வயது உறவினர் அறிவித்து பரபரப்பு … குடும்ப அரசியலுக்கு எதிராக பேசிவந்த மாயவாதி தமக்கு அரசியல் வாரிசை நியமித்தது பற்றி பலரும் விமர்சனம்.
*ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு சரியாக புர்கா அணியவில்லை என்று கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உயிரிழந்த மாசா அம்ணியின் பெற்றோர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்… பிரான்ஸ் நாட்டில் வழங்கப்பட உள்ள உயரிய விருதை பெறுவதற்கு செல்ல அனுமதி மறுப்பு.
*சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டம் .. தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க கோவில் தேவசம் போர்டுமுடிவு.
*இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ 18,700 கோடி என்று மதிப்பீடு … உலகத்தின் பணக்கார அமைப்பு என்று தகவல்.
*கடந்த 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுக் கிடைக்கவில்லை … முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறிய கருத்து வலைதளங்ளில் வைரல்.
*ரன்பீர் கபூரின் நடிப்பில் டிசம்பர் முதல் தேதி வெளியான அனிமல் என்ற திரைப்படம் ரூ 650 கோடி வசூல் .. படக்குழு அறிவிப்பு.