*பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ,,, சரியான நேரத்தில், அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பேட்டி.
*கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க திமுக மறுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் … வாக்களிக்கும் மக்களை மட்டுமே அதிமுக நம்புவதாகவும் கருத்து.
*உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும் … திமுக தலைமை அறிவிப்பு.
*பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க சிறையில் உள்ள இம்ரான்கானின் பிடிஐ கட்சிக்கும் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி … தேர்தல் நடைபெற்ற 266 இடங்களில் இம்ரான்கானின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 102 இடங்களின் வெற்றி.
*நவாஷ் ஷெரிப்பின் கட்சி 73 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ள போதிலும் 54 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க பேச்சுவாத்தை … ஷெரிப் ஆட்சி அமைக்க ராணுவம் ஆதரவு.
*கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதை அடுத்து நான்கு பேர் கைது … 6 லேப்டாப்கள், 25 செல்போன்கள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தகவல்.
*சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக நேற்று இரவும் பேருந்துகளை சிறை பிடித்து பயணிகள் போராட்டம் … திருச்சி உட்பட பல்வேறு ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது பயணிகளின் புகார்.
*கிளாம்பாக்கத்தில் இரண்டாவது நாளாக பிரசசினைகள் எழுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புகார் … வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் திருச்சிக்கு இயக்கப்படுவதகாவும் விளக்கம்.
*ஆம்னி பேருந்துகள் புறநகரில் இரண்டு இடங்களில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் மொத்தம் 585 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் சிவசங்கர் தகவல் … அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக தகவல் பரப்பினால் அரசு பேருந்துகளில் அதிகம் பேர் ஏறுவாார்கள் எனறு சதி செய்யப்படுவதாகவும் புகார்.
*நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் பிரச்சினைகளைக் கொண்டு செல்வதற்காக மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ தலைமையில் சட்டக் குழுவை நியமித்து திமுக நடவடிக்கை …ஊடகங்களை விவாதங்களை நடத்துவதற்கு ஆஸ்டின் தலைமையில் குழு அமைப்பு.
*சென்னையில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பரமாரிப்பு காரணமாாக இன்று பகலில் 14 மின்சார ரயிலகள் ரத்து … மாலை 3.30 மணிக்குப் பிறகு வழக்கம் போல ரயில்கள் இயக்கம்.
*கோயம்புத்தூரை மையமாக கொண்டு செயல்பட்ட மை வி3 ஆட்ஸ் செயலியை முடக்கியது காவல் துறை … செயலியின் உரிமையாளர் சக்தி ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்து உள்ள போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் முடிவு.
*நியாய விலைக் கடைகளில் கை ரேகைப் பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு … குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்ற கைரேகை பதிவுகளை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்.
*திமுகவில் இருந்து ஓராண்டுக்கு முன்பு நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்ப்பு … பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் நீக்கப்பட்டு இருந்து சிவாி4 கிருஷ்ணமூர்த்தி நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் கட்சியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கருத்து.
*பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சென்னையில் சவுகார் பேட்டையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணத்தில் பங்கேற்பு …பொத்தேரியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை.
*டெல்லி நோக்கிப் பேரணி என்ற பெயரில் 200 விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை டெல்லி நோக்கி பிரமாண்ட ஊர்வலத்தை நடத்தத் திட்டம் .. பஞ்சாப்,உத்திர பிரதேசம்,அரியானா மாநில விவசாயிகள் திரள உள்ளதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு.
*காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சாதி , மொழி மற்றும் மாகாணங்கள் பெயரில் பிரிவினையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி புகார் … தோல்வியை தவிர்க்க கடைக் கட்ட முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு.
*இந்தியாவில் பல்வேறு மதம் மற்றும் சிந்தனைகளைக் கொண்டவர்கள் அன்புடன் அமைதியாக வாழ்வதாக ராகுல் காந்தி கருத்து… பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்- ம் மக்களிடம் வெறுப்பை பரப்புதாகவும் சத்தீஷ்கர் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தில் புகார்.
*மியான்மர் நாட்டில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், 18 வயது முதல் 27 வயது உள்ள பெண்களை சேர்த்து ராணுவத்தை பலப்படுத்த நடவடிக்கை …கிளச்சியாளர்கள் பல்வேறு இடங்களைக் கைப்பற்றி முன்னேறி வருவதை தடுக்க திட்டம்.
*ரஷ்யாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் புட்டினின் தீவிர எதிர்ப்பாளர் போரீஸ் நட்ஜெதினின் மனுவில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி போட்டியிடும் வாய்ப்பு மறுப்பு… நீண்ட நாட்களாக அதிகாரத்தில் இருக்கும் புதின் மற்றும் இருவரின் மனுக்கள் ஏற்பு.
*பிரபல திரைப்பட நடிகர் மிதுன் சக்கரவத்தி உடல் நிலை குணமடைந்து வருவதாக கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகம் தகவல் … 77 வயதாகும் மிதுன் நெஞ்சு வலி காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதி.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447