*இந்தியாவின் மூன்று முக்கியச் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றுவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் .. இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர் பாரதிய நியாய சன்ஹிதா என்று மாறுகிறது.
*மூன்று சட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட் … பெயர் மாற்றம் என்பது இந்திய அடித்தளத்தையே அவமதிக்கும் என்று செயல் என்று கண்டனம்
*நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு .. டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்.
*பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசும்போது பெரும்பாலான நேரத்தை நகைச்சுவை செய்தே கழித்தாக ராகுல் காந்தி விமர்சனம் .. மணிப்பூர் பற்றி பேசும் போது பிரதமர் கவலையின்றி சிரித்ததாகவும் குற்றச்சாட்டு.
*கலவரத்துக்குப் பிறகு இரண்டு மாநிலங்களாக பிளவுப்பட்டு நிற்கிறது மணிப்பூர் .. அமைதியை நிலைநாட்டுவதற்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தல்.
*இந்தியா பற்றி அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்து இருந்த கருத்தை பிரதமர் மோடியும் அமைச்சர் ஸ்மிருதி ராணியும் நாடாளுமன்றத்தில் திரித்துப் பேசியுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சபாநாயகருக்கு கடிதம் .. அவையில் இல்லாத வேலு பற்றி பிரதமர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரிக்கை.
*இந்தியா என்ற பெயரில் ஒரு காலத்தில் தங்களுக்கு எல்லாம் தாக்கம் இருந்தது கிடையாது என்று பேசியதாக ஏ.வ.வேலு விளக்கம் .. இந்தியா என்பது வடக்கே இருக்கிற ஒரு ஊர் என்றும் தமிழ்நாடு தான் நமது ஊர் என்றும் இருந்த எண்ணம் இப்போது மாறி இருப்பதாகவும் பேசினேன் என்றும் அறிக்கை.
*டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் நீர்வள கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு .. காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீ் திறந்து விட உத்தரவிடாததற்கு எதிர்ப்பு.
*எம்.பி.பதவி திரும்ப கிடைத்ததை அடுத்து தமது வயநாடு தொகுதிக்கு நாளை செல்ல ராகுல் காந்தி திட்டம் .. அருகில் உள்ள முதுமலை யானைகள் முகாமிற்கு வரவும் முடிவு.
*போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை முதலமைச்சர் வாசிக்க மாணவர்கள் திரும்பக் கூறி ஏற்பு .. போதைப் பொருளை ஒழிக்க தேவையானால் தாம் சர்வாதிகாரியாக செயல்படவும் தயார் என்று மு.க.ஸ்டாலின் பேச்சு.
*மதுரை அதிமுக மாநாட்டு பிரச்சாரத்துக்கான சிறப்புப் பாடல் வெளயிடு.. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரச்சார வாகனத்தையும் தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
*பிரபல திரைப்பட நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டணை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.. சென்னை ஜெயப்பிரதா தியேட்டர் தொழிலார்களிடம் வசூலித்த ஈ.எஸ்.ஐ. பணத்தை செலுத்தா வழக்கில் தண்டனை.
*சென்னை அடுத்த பொத்தேரியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதி விபத்து .. இரண்டு மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த பரிதாபம்
*விளையாட்டு அரங்கங்களில் மதுபானம் பறிமாறுவது குறித்த திருத்தச் சட்டம் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் .. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
*திங்கள் கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் தொடாச்சியாக நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்பதால் வெளியூர் செல்வதற்கு மக்கள் ஆர்வம் .. நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு.
*பெண் போலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.ஜி. முருகன் மீதான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலிஸ் நடவடிக்கை.. 20 சாட்சியங்களின் வாக்கு மூலங்களுடன் 112 பக்க குற்றப்பத்திரிகை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல்.
*ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடுவர் ஒருவரை நியமிப்பது பற்றி என்.எல்.சி. நிறுவனமும் மத்திய அரசும் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு .. நீதிமன்றம் என்பது என்.எல்.சி.க்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான் என்று நீதிபதி கருத்து.
*அரியானா மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நூக் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புகிறது .. ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளி,கல்லூரிகள் திறப்பு.
*மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுகள், பயண வசதிகள் போன்ற சலுகைளை பெறக்கூடாது.. புதிய கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய மருத்துவக் கவுனசில் நடவடிக்கை.
*உயர் நீதி மன்றங்களின் 24 நீதிபதிகள் இடமாற்றம் .. உச்சநீதிமன்ற கொலிஜியம் நடவடிக்கை.
*இன்ஸ்டா கிராமில் அதிக வருவாய் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை பெற்றார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.. ஒரு பதிவு போட்டால் 11 கோடியே 45 லட்சம் கிடைப்பதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலைக் கண்டு அனைவரும் வியப்பு.