*கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்று ஸ்டாலின் உறுதி .. சட்டசபையில் உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில்.
*காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் … பல ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வணிகர்கள் ஆதரவு.
*விவசாயிகள் போராட்டத்தால் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடியது .. தனியார் பேருந்துகளும் நிறுத்தம்.
*புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டஙகளில் விவசாயிகள் மறியல் .. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து விடுவிப்பு.
*காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு … கர்நாடக மாநில அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு.
*தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சாமிநாதன் பெயர்..வேளாண் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு சாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
*எதிக்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் முற்றுகை.. அவைக்காவலர்கள் மூலம் 3 பேரும் வெளியேற்றம்.
*துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சட்ட விதிகள்படிதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.. துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவதில் மரபுகளை மீற வேண்டாம் என்று வெளிநடப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*மாநில அரசின் 7 மீட்டர் அகலச் சாலையை 9 மீட்டர் அகலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாற்றிவிட்டு டோல்கேட்டு அமைப்பதாக அமைச்சர் வேலு புகார்.. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்துவதாக சட்டசபையில் தகவல்.
*உலகக் கோப்பை 2023: ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா…இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
*நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் இரண்டு இயக்குநர்கள் கைது .. 30 சதவிகித வட்டித் தருவதாகக் கூறி பல கோடி மோசடி செய்த வழக்கில் மதுரை குற்றப் பிரிவு போலீஸ் நடவடிக்கை.
*இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழ மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர் .. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டவர்களை அனுப்பி வைத்தது இலங்கை.
*பாபுலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான வழக்கில் ஆறு மாநிலங்களில என்.ஐ.ஏ. சோதனை .. தமிழ்நாட்டில் மதுரையில் விசாரணை.
*நியூஸ் கிளிக் என்ற இணைய தளம் மீது சீனவிடம் இருந்த பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிட்டதாக இரண்டு வழக்குகள் பதிவு .. கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து ஆசிரியரை கைது செய்த சிபிஐ, அடுத்தக் கட்ட நடவடிக்கை.
*இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காப்பற்ற அமெரிக்கா துணை நிற்கும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்ததன் எதிரொலி .. ஆயுதங்களுடன் அமெரிக்கப் போர்க் கப்பல் இஸ்ரேலுக்கு வந்தது.
*ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆறு புள்ளி ஒரு ரிக்டர் ஆக பதிவு .. ஏற்கனவே ஏற்ட்ட நிலநடுக்கத்தில் நான்காயிரம் பேர் பலியான நிலையில் இரண்டாவது முறையும் பலமான அதிர்வு.
*ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறப்பு .. ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு.
*அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
*பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைத்து தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன் வடிவு பேரவையில் நிறைவேறியது…. ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் ஆய்வுகள், விவசாயம் அல்லாத பணிகளுக்காக துளையிடுதல், பிரித்தெடுத்தலுக்கும் இனி அனுமதியில்லை.
*தமிழக அரசின் சார்பில் அடுத்தாண்டு பிப்ரவரியில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு….பிப்ரவரி 08, 09, 10ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாடு நடத்தப்பட உள்ளதாக தகவல்.
*ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் தேதி மாற்றம்….நவம்பர் 23 -ம் தேதிக்கு பதில் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு.
*கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் 16-ம் தேதியில் இருந்து 31–ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்….காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முடிவு.