*சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்… 6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் ராஜினாமா.
*தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தமது உரையை படிக்காமல் வெளிநடப்பு … அரசின் உரையை படித்தால் அரசியலமைப்புச் சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் படிக்கவில்லை என்று ரவி விளக்கம்.
*வழக்கம் போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை தொடங்கியது … ஆளுநர் ரவி வணக்கம் என்று கூறி பிறகு அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு அவையில் இருந்து வெளியேறியதால் பரபரபபு.
*அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காததால் அதன் தமிழாக்கத்தை படித்தார் சபாநாயகர் அப்பாவு …. உரையை படிக்காமல் புறக்கணிதத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்.
*சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் அறிவிப்பு … சாவர்க்கர் விழயில். கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்றும் அபபாவு பதிலடி.
*சட்டசபையில் தொடக்கத்தின் போதும் முடிக்கும் போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்ததாக ஆளுநர் ரவி அறிவுப்பு … தமிழ்த்ததாய் வாழ்த்து முதலிலும் தேசிய கீதம் முடிவிலும் பாடப்படுவதுதான் மரபு என்று சபாநாயகர் விளக்கம்.
*சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய காரணங்களை விளக்கி ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் … அரசு தயாரித்த உரையில் ஏராளமான கருத்துகள் உண்மைக்கு புறம்பானதாக இருந்தது என்றும் புகார்.
*சட்டசபையில் ஆளுநர் பேசியதை சப்-டைட்டிலுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிடக்கூடாது என்பது சட்டமன்ற விதி ஆகும்.
*ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை, ஊசிப்போன உணவுப்பண்டம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் … புதிய திட்டங்களை அறிவிக்காமல் வார்த்தை ஜாலத்தால் தொகுக்கப்பட்ட உரை என்றும் கருத்து.
*சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு,,, பிப்ரவரி 19 -ஆம் தேதி பொது பட்ஜெட், 20- ஆம் தேதி வேளாண் பட்ஜெட்.
*முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு … பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு தள்ளுபடி.
*விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை பட்டாசு ஆலைகளில் நடந்துள்ள 69 விபத்துகளில் 131 தொழிலாளர்கள் இறப்பு,146 பேர் படுகாயம் … ஆலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்து நடப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அறிக்கை
*இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு…. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4- ஆம் தேதி விபத்தில் சிக்கினார்.
*செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் …. திருச்சி மாநகர ஆணையர் வைத்தியநாதன் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமனம்.
*பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தேசிய பட்டியலின ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலின ஆணையம் பதிலளிக்கவும் புதிய உத்தரவு பிறப்பிப்பு.
*”திமுகவிடம் தனித்தொகுதிகள் 3, பொதுத்தொகுதி 1 என 4 தொகுதிகளை தருமாறு விசிக வலியுறுத்தல் … நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியப்பின விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
*தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது … பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி ஆரம்பமாகிறது.
*பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதிஷ்குமார்…. 243 உறுப்பினர்கள் கொண்ட அவையில் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி அரசுக்கு 129 உறுப்பினர்கள் ஆதரவு.
*டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் 144 தடை உத்தரவு அமல்….டெல்லி சலோ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்.
*இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரும் கத்தார் நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதால் டெல்லி திரும்பினர்…. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டதால் எட்டு பேரும் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல்.
*இந்தியாவின் யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளை இலங்கை மற்றும் மொரிஷியசில் பயன்படுத்தும் முறை அறிமுகம்…. இலங்கை அதிபர் ரணில், மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜகுநாத் முன்னிலையில் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.
*மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் சவான் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்.
*ஈரான் நாட்டில் கடந்த அக்டோபரில் பிரபல திரைப்பட இயக்குநர் டைரியுஷ் மற்றும் அவருடை மனவவி வகிதா மொகமதுதிப்பார் கொல்லப்பட்ட வழக்கு… கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு.
*இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல் … தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447