*உச்சதீதிமன்றம் நேற்று விதித்த கெடுவுக்குப் பணிந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா… ஆவணங்களை வெளியிட ஜுன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்த ஸ்டேட் வங்கி ஒரே நாளில் ஆணையத்திடம் தாக்கல் செய்ததால் அனைவரும் வியப்பு.
*மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டில் நடைமுறை செய்யப் போவதில்லை என்று முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அறிவிப்பு… ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது என்றும் கருத்து.
*குடியுரிமைச் சட்டம் சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழும் ஈழத் தமிழர்களின் நலனுக்கும் எதிரானது என்றும் ஸ்டாலின் விமர்சனம்… கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் CAA சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டி அறிக்கை.
*நடிகர் சரத்குமார் தம்முடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்து அதிரடி .. சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் ஐக்கியமானார் சரத்குமார்
*சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று திருநெல்வேலியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி …வயநாடு எம்.பி. ராகுல் காந்தி எப்படி பதவியைப் பெற்றாரோ அதே போன்று பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளடும என்று விளக்கம்.
*திமுக கூட்டணியில் கடந்த முறை மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு இப்போது மதுரை, திண்டுக்கல் தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் … மதுரை நாடளுமனறத் தொகுதி உறுப்பினராக உள்ள சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு.
*இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்டு வெற்றி்ப் பெற்ற திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொதிகளை கொடுத்தது திமுக… இதே கூட்டணியில் ராமநாதபுரம் முஸ்லிம் லீக் கட்சிக்கும் நாமக்கல் கொங்கு கட்சிக்கும் தரப்பட்டு உள்ளது.
*எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா என்பதில் குழப்பம் .. இரட்டை இலையை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என்று சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள மனுவால் சிக்கல்.
*பாமகவும் தேமுதிகவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் எற்படவில்லை என்று தகவல் … இரண்டு கட்சிகளும் மீண்டும் அதிமுகவுடன் பேச்சு நடத்தி அந்தக் கூட்டணியில் சேருவதற்கு முயற்சி.
*திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருவதாக கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்…. சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு.
*போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் சலீம், மைதீன் இருவரும் தலைமறைவாக இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் ….மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை நடவடிக்கை.
*தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படி நான்கு சதவிகிதம் உயத்தி 50 சதவிகிதமாக வழங்குவதற்கு உத்தரவு … முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை.
*காஞ்சிபுரம் அருகே பரந்தூர் கிராமத்தில் புதிய விமான நிலையத்திற்கு 1,75 லட்சம் சதுர மிட்டர் நில்ம் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது அரசு .. நிலம் தொடர்பான ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுகோள் .. ஆட்சபேனைகள் மீது ஏப்ரல் 30- ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
*செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு…சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில் மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
*சத்தியமங்கலம் அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழந்ததில் 3 பேர் இறப்பு … காயங்களுடன் மீட்கப்பட்ட மூவருக்கு தீவிர சிகிச்சை.
*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் பெற்று திருச்சி முகாமில் இருக்கும் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மூன்று பேரையும் சென்னை இலங்கை தூதரகத்தில் நாளை ஆஜரப்படுத்துகிறது போலீஸ் .. சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
*ஹரியானா மாநில முதலமைச்சராக இருந்த மேனோகர் லால் கட்டார் ராஜினாமாவை அடுத்து பாஜக எம்.பி. நயாப் சானி முதலமைச்சாராக பதவி ஏற்பு … முன்னதாக காலையில் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் கட்டாரியா …. நவாப் சானியுடன் ஐந்து அமைச்சர்களும் பதவியேற்பு.
* முதலமைச்சர் பதவியை துறந்த மனோகர் லால் கட்டாரியா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு,,,. அரியானாவில் இன்னொரு திருப்பமாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்றிருந்த துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜே.ஜே.பி விலகல். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
*/ரூ 85 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள், 10 வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளிட்டவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி… சென்னை- மைசூர இடையிலான மற்றொரு வந்தே பாரத் ரயிலும் ஓடத் தொடங்கியது.
*குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளுக்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்… CAA 2019-க்கு எதிரான மனு நிலுவையில் உள்ள நிலையில் சட்டத்தை அமல்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்று வலியுறுத்தல்.
*குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிராக அசாம் மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் … மாணவர்கள் ஆங்காங்கு மறியல், கடைகள் அடைப்பு. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
*போதைப் பொருட்களை கடத்தும் நபர்களைக் குறிவைத்து உத்திர பிரதேசம்,டெல்லி, பஞ்சாப், மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை … போதைப் பொருள் கடத்தல் மூலம் புரளும் பணம் தீவிரவாதச் செயல்களுக்கு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கை.
*சந்தானம் நடித்த வடக்கப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது .. அமேசன் பிரைம் , ஆகா ஆகிய இரண்டு தளங்களில் ஒரே நாளில் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447