*சென்னை அடுத்த சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் போலீ்சால் சுட்டுக் கொலை .. டெல்லியில் கைது செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு பேரும் விசாரணையின் போது போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக புகார்.
*சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள் இருவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் அதிமுக பிரமுகருமான பார்த்தீபன் என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் .. இருவர் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்.
*ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர்கள் மூன்று பேர் காயம் அடைந்ததாக ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் விளக்கம்.. ரவுடிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.
*செங்கற்பட்டில் தணிகா என்ற ரவுடி தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுப் பிடிப்பு .. பெரியபாளையத்தைச் சேர்ந்த தணிகா மீது 20 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீ்ஸ் தரப்பில் விளக்கம் .
*பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டீனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை .. கோவையில் உள்ள மார்ட்டீன் வீட்டில் கேரளாவில் இருந்து வந்து அமுலாக்கத்துறை மத்திய துணை ராணுவ படை உதவியுடன் விசாரணை.
*சென்னையில் போயஸ் தோட்டத்தில் மார்ட்டீன் மருமகன் அர்ஜுன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை காலையில் ஆரம்பம்.. கடந்த ஓராண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிப்பு.
*நீலகிரி மாவட்டத்தில் உள்ள வரையாடுகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .. ஆண்டு தோறும் அக்டோபர் 7- ஆம் தேதியை வரையாடு நாளாக அனுசரிக்க நடவடிக்கை.
*தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்குமாறு காவரி ஒழுங்காற்றுக் குழு நேற்று உத்தரவிட்ட நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது .. மேல் முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அறிவிப்பு.
*மேட்டூ்ர் அணையைச் சுற்றி கன மழை பெய்ததன் எதிரொலி .. அணைக்கான நீர் வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
*முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமாக கோவையில் உள்ள இடத்திற்கு சீல் வைப்பு.. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இரு தினங்கள் முன்பு ராசாவின்15 சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை அடுத்தக் கட்ட நடவடிக்கை.
*தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூன்று மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை சோதனை .. சுரங்கங்களில் இறங்கி அளந்துப் பார்த்து கடந்த ஓராண்டு எடுக்கப்பட்ட மணல் அளவு சேகரிப்பு.
*தமிழ்நாட்டின் பிரபல மணல் வியாபாரிகளான திண்டுக்கல் ரத்தினம் புதுக்கோட்டை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் மூன்று வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையை அடுத்து மணல் குவாரிகளில் ஆய்வு .. கடந்த இரண்டு வாரங்களில் கரூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி முடித்து உள்ளது அமலாக்கத் துறை.
*பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா தங்களுக்கு நடிகர் விஷால் செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாயில் பாதித் தொகையாவது செலுத்தமாறு உத்தரவிடக் கோரிக்கை .. லைகா தரப்பு பேச்சு வார்த்தைக்கு முன் வராதததால் பணத்தை செலுத்த முடியவில்லை என்று விஷால் தரப்பு உயர் நீதிமன்றத்தில் பதில்.
*தமிழ் நாட்டில் சீறுநீரகத்திற்காக 6,205 பேரும் கல்லீரலுக்காக 443 பேரும் இதயத்திற்காக 75 பேரும் காத்திருப்பு.. அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி வேண்டுகோள்.
*மதுரை – சிங்கப்பூர் இடையே இதுவரை மூன்று முறை இயக்கப்பட்டு வந்ததற்குப் பதில் இனிமேல் தினமும் விமானம் … ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு.
*புதுச்சேரி மாநில அமைச்சர் பிரிய சந்திரிகா அவராக ராஜினாமா செய்யவில்லை என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரபரப்பு தகவல் .. செயல்படாததால் கடந்த வாரம் முதலமைச்சர் ரங்கசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் பேட்டி.
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்கனவே அறிவித்த படி நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு .. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்திக்க முறையாக அழைப்பு வரவில்லை என்றும் புகார்.
*சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு .. சிறையில் தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாக புகார்.
*காஷ்மீர் மாநிலத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனி மலையில் செல்போன் டவர் அமைத்தது பி.எஸ்.எல்.நிறுவனம் .. உலகின் உயரமான போர் முனையில் தங்கி இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு
*பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து ஆறாவது நாளாக ஏராளமான உடல்கள் மீட்பு .. ஆயிரத்திற்கும் அதிகாமானவர்கள் கொல்லப்பட்டதால் காசாவில் மரண ஓலம்.
*பிணைக்கைதிகாளகப் பிடித்துச் சென்றவர்களை கழுத்தை அறுத்த ஹமாஸ் இயக்கத்தினர் கொண்று விட்டதாக குற்றச்சாட்டு .. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஒவ்வொருவருக்கும் தண்டனை நிச்சயம் என்று இ்ஸ்ரேல் எச்சரிக்கை.
*இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான ஆப்ரேஷன் அஜய் என்ற நடவடிக்கை தொடங்கியது .. முதல் கட்டமாக 230 பயணிகளை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் நாளை டெல்லி வந்து சேர உள்ளதாக தகவல்.
*இஸ்ரேலில் இருந்து 114 தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளதாக மாநில அரசு தகவல் … இந்திய அரசின் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை.
*சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் விமான நிலையம் மீது இ்ஸ்ரேல் விமானப் படை குண்டு வீசி த்தாக்குதல் …ஹமாஸ் இயக்கத்திற்கு சிரியா உதவுவதாக கிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கை.