*ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன் லால் சர்மா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு … கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான சர்மா, ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச்செயலாளர் ஆவார்.
*துணை முதல்வர்களாக தியா சிங், பிரேம் சந்த் பெய்வா ஆகியோருக்கு பதவி… மூன்று முறை முதலமைச்சராக இருந்த வசுந்தார தேவிக்கு இந்த முறை முதல்வர் பதவி கிடைக்கவில்லை.
*திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை…. சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முன் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருந்த பிரபுவின் கொலை பின்னணி குறித்து விசாரணை.
*மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்டதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை வந்த மத்திய அரசின் குழு பாராட்டு….வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் குழு உறுப்பினர்கள் உறுதி.
*சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டுக் குழுக்களாாக பிரிந்து பார்வையிட்டது மத்தியக் குழு … முன்னதாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை
*சரக்கு ரயில் தடண் புரண்டதால் செங்கற்பட்டு -தாம்பரம் இடையே நேற்று ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தி்ல் விரிசல் .. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி.
*அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி… அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் இரண்டு வாரங்கள் முன்பு கைது செய்யப்பட்ட அங்கித் திவாரிய வேறு யாரிடம் எல்லாம் லஞ்சம் பெற்றார் என்பதை அறிய போலீஸ் நடவடிக்கை.
*கோடநாடு வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு – சாட்சியப் பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
*மதுரையில் அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. .. பெங்களூர் மற்றும் சென்னை சட்டவிரோத கட்டுமானங்களால் பாழாய் போய்விட்டதாக நீதிபதி கருத்து.
*ஆருத்ரா நிதி நிறுவன பண மோசடி வழக்கில் சென்னை பொருளாதார குற்றப்பபிரிவு போலீ்ஸ் முன் ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை… பல மாதங்களாக துபாயில் தங்கி இருந்து விட்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பிய சுரேஷிடம் அடுக்கடுக்காக கேள்வி.
*தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகள் மீத நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் கேள்வி.
*சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூரில் கடலில் மிதக்கும் எண்ணெய படலத்தை உறிஞ்சும் பணியில் நவீன இயந்திரங்கள் .. எண்ணெய் அகற்றும் பணியை அகற்ற ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்படடு உள்ளதாகவும் கூடுதல் தலைமைச் செயலளால் சுப்ரியா சாகு தகவல்.
*ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றவியல் மசோதாக்களைத் திரும்பப் பெற்று திருத்தங்களுடன் புதிய மூன்று சட்டங்களும் மக்களவையில் தாக்கல் .. டிசம்பர் 14 ஆம் தேதி விவாதம் நடத்தி 15 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு.
*அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்க 64 சதவிகிதம் பேர் ஆதரவு ..இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே.
*சபரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் சன்னிதானம் செல்லாமலேயே திரும்பும் நிலை … பக்தர்கள் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க 18 மணி நேரம் ஆகுவதாக தேவசம்போர்டு தகவல்.
*சபரி மலை கூட்ட நெரிசல் பற்றி முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரிகள் உடன் அவசர ஆலோசனை .. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் பீதி அடைய வேண்டாம் என்று வேண்டுகோள்
*திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் காவலர்கள் உடன் கர்நாடகத்தில் இருந்து வந்த பக்தர்கள் மோதல் …கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை.
*சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி டிச.27-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. இதனை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 6-ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு .
*நடிகர் ரஜினி காந்திற்கு 73 வது பிறந்தநாள் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , நடிகர்கள் கமலகாசன், மோகன் லால் உட்பட பலரும் வாழ்த்து.
*ரஜினி நடிக்கும் 170 படத்தின் பெயர் வேட்டையன் .. ‘குறி வைச்சா இறை விழனும்’ என்ற ரஜினி வசனத்துடனும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
*மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு… சென்னையில் 25 இடங்களில் 14- ம் தேதி காலை 8.05 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை முகாம்களை நடத்த முடிவு.
*கடந்த 25 வருடங்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரி்கெட் வீரர் விராட் கோலி … இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் மற்றவர்களை விட அதிக ரசிகர்கள் உடன் கோலி முதலிடம்.