*மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்ட மன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது .. ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது .. . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு முக்கிய தீர்மானங்கள் சட்டப் பேரவையில்குரல் வாக்கெடு்ப்பு மூலம் நிறைவேறியது.
*ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து மத்தியில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? …. சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா என்றும் ஸ்டாலின் கேள்வி.
*நாடாளுமன்ற தேர்தலைக் கூட ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்கு தயாராக இல்லாத சூழல்தான் இப்போது இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 30 மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமாகத் தான் இருக்கும் என்றும் சட்டப்பேரவையில் ஸ்டாலின் விமர்சனம்.
*ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை… எதிர்ப்பை தெரிவிக்க வெளிநடப்பு.
*டெல்லிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட இரண்டாவது நாளாக முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு .. பத்தாயிரத்துக்கும் அதிகமான டிராக்டர்களில் திரண்டு வரும் விவசாயகளைக் கட்டுப்படுத்த சாலை முழுவதும் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸ் நடவடிக்கை.
*டிராக்டருக்குப் பதில் கார்,லாரி,பேருந்து போன்ற வாகனங்கள் மூலம் விவசாயிகள் டெல்லிக்குள் வந்துவிடக் கூடும் என்பதால் வாகனச் சோதனையும் தொடருகிறது … ரப்பர் குண்டுகளை வீசி விவசாயிகளை விட்டவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்.
*தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல் .. பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.
*போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி குர்மித் சி்ங் உடன் ராகுல் காந்தி தொலை பேசி வாயிலாக நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் … நாட்டிற்கான உணவை வழங்குவோர் மீது மோடி அரசு தாக்குதல் நடத்துவதாக விமர்சனம்.
*சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கி பேரவைத் தலைவர் நடவடிக்கை.. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 2- ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.
*எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்ததை பரிசீலிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் நேற்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார் … முதல்வரின் பரிந்துரையால் அதிமுக வின் வெகுநாள் விருப்பம் செயலுக்கு வந்தது.
*தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த அரசு ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு…தங்கள் அமைப்பு முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை அளித்திருப்பதால் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் பேட்டி.
*ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு பதில் மனு… ஜாமின் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
* வழக்கு விசாரணை காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது…. சகோதரர் அசோக் குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில் செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அமலாக்கத்துறை மனுவில் கருத்து.
*காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மெரினா,பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு … காதலர்கள் அதிகம் கூடும் இடங்களில் போட்டோ எடுத்து சிலர் மிரட்டுவதை கண்காணிக்கவும் நடவடிக்கை
* சோனியா காந்தி, மாநிலங்களவைத் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் சென்று மனுத்தாக்கல் ..மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி இமாச்சல் பிரதேசத்தி்லும் , அகிலேஷ் பிரசாத் சிங் பீகாரிலும் சந்திர காந்த கண்டோர் மராட்டியத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டி.
*தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளராக போட்டியிட மனு … கடந்த முறையும் ம.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார் முருகன்.
*சவால்களை முறியடிக்க தூய்மையான மற்றும் வெளிப்படையான அரசாங்கம் தேவை … ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத்தை சந்தி்ப்பின் போது பிரதமர் மோடி பேச்சு.
*பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அறிவிப்பு… நவாஷ்ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சிக்கு பிலவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு.
*இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாக அறிவிப்பு … நாடளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய போதிலும் ஆட்சி அமைக்க முடியவில்லை பி.டி.ஐ.கட்சியால்.
*சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தமிழ்கத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள்…. 40 நாள் தவக்காலம் தொடங்குவதால் ஆலயங்களில் கிறி்த்துவர்கள் பிரார்த்தனை.
*தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் … வானிலை மையம் தகவல்
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447