*பாலத்தீனத்தின் காசாவில் வசிக்கும் 11 லட்சம் பேரும் உடனடியாக வெளியேறுமாறு இ்ஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை .. தரை வழித் தேடுதல் மூலம் ஹமாஸ் போராளிகளை கூண்டோடு ஒழிக்கத் திட்டம்.
*இந்தியாவின் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் மீட்கப்பட்ட 212 பேருடன் முதல் விமானம் டெல்லி வந்தடைந்தது … அங்கு தங்கி உள்ள 18 லட்சம் பேரையும் படிப்படியாக மீட்க நடவடிக்கை.
*இஸ்ரேலில் இருந்து டெல்லியை அடைந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரில் 7 பேர் கோவை பயணம் .. சென்னை வந்த 14 பேருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு.
*காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் விரைவில் செயல்படுத்த முடிவு .. உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்.
*காவிரியில் கர்நாடகம் விநாடிக்கு மூன்றாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் .. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு.
*மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு … அணையின் நீர்மட்டம் 30 அடி மட்டுமே உள்ளதால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று பேட்டி.
*காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்வதன் எதிரொலி. மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிகரிப்பு.
*சென்னையில் திமுக சார்பில் நாளை மகளிர் உரிமை மாநாடு … ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலி்ன் ஆய்வு.
*மகளிர் மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் சோனியா, பிரியங்கா உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் வரவேற்பு .. விமான நிலையம், மாநாட்டு்த் திடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு.
*பா.ஜ.க. அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம் மீண்டும்16 ஆம் தேதி ஆரம்பமாகிறது .. மேட்டுப் பாளையம் மற்றும் அவிநாசியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.
*காலாண்டு வரி உயர்வை ரத்து செய்யுமாறு தமிழ அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை … நாமக்கல்லில் 19 ஆம் தேதி சங்கப் பொதுக்குழுவை நடத்தி வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட முடிவு.
*நியாய விலைக் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளும் முறை நடை முறைக்கு வந்தது .. சென்னை மற்றும் புறநகரில் 562 கடைகளில் புதிய திட்டம் அமலானது.
*தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்த இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை .. சுரங்கங்களில் இறங்கி டேப் பிடித்து அளந்து அள்ளப்பட்ட மணல் அளவு சேகரிப்பு.
*நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை ஆரம்பமாகிறது … முதல் நாளில் இலங்கை செல்ல 35 பேர் முன்பதிவு.
*கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டீன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக சோதனை … மார்டினின் மருமகனின் சென்னை வீட்டிலும் சோதனை தொடருகிறது.
*கன்னியாகுமரி அருகே மூகாம்பிகை என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் .. மூன்று பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்.
*கிருஷ்ணகிரியில் வணிகர் சங்கத் தலைவரும் நகைக்கடை உரிமையாளருமான சுரேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை .. போலீசார் உடலைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.
*திருப்பதி ஏழு மலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா நாளை தொடங்க இருப்பதால் சிறப்பு தரிசனங்கள் ரத்து .. பக்தர்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து நூறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
*கிருஷ்ணகிரி அணை நிரம்பியதை அடுத்து தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு … சாத்தனூர் அணையும் நிரம்ப உள்ளதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை.
*வேலூர் அருகே அரசு பள்ளிக் கூடத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியை ஜன்னல் கம்பியில் தலைமை ஆசிரியர் கட்டி வைத்ததாக புகார் .. மாணவி வீட்டுக்கு ஓடி வந்துவிடுவதால் தாமே கட்டி வைத்தாக தாயார் விளக்கம்.
*பெங்களூரில் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 42 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை .. பூட்டி வைத்திருந்த அறையில் படுக்கை மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிப்பு.
*இந்தியாவின் முகநூல், வாட்ஸ் ஆப், யூ டியூப் உளளிட்ட வலைதளங்கள் நடுநிலையுடன் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அதன் நிர்வாகிகளுக்கு கோரிக்கை .. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கடிதத்தை சுட்டிக்காட்டி இந்தியா கூட்டணி தலைவர்கள் கடிதம்.
*டெல்லியில் ஜி 20 நாடுகளின் சபாநாயகர் மாநாட்டில் ரஷ்யா, இத்தாலி, சவுதி அரேபியா நாடுகளின் பிரநிதிகள் பங்கேற்பு .. காலிஸ்தான் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக கனடா புறக்கணிப்பு.
*அமெரிக்காவில் 2028 ஆண்டு நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு .. ஒரு நூற்றாண்டு முயற்சிக்கு பலன் கிடைத்தது.