*நாடாளுமன்ற மக்களவைக்குள் திடீரென இளைஞர்கள் இருவர் குதித்து வண்ணப்பொடிகளை தூவி முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு … மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் , சாகர் சர்மா என்ற இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை.
*நாடாளுமன்றம் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் நினைவுநாளான இன்று இளைஞர்கள் இருவர் நுழைந்தது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி .. எதிாக்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
*இளைஞர்கள் இருவர் குதித்த அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே அமல் ஷிண்டே என்ற இளைஞரும் நீலம் என்ற பெண்மணியும் வண்ணப் பொடிகளை தூவி முழக்கம்.. இவர்கள் இரண்டு பேரும் வெளியில் இருந்த காவர்களால் சுற்றி வளைத்து கைது.
*இளைஞர்கள் இருவர் குதித்தை அடுத்து நாடாளுமன்ற மக்களவை உடனடியாக ஒத்திவைப்பு… நடைபெற்ற நிகழ்வு குறித்து 4 பேரிடமும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத்தலைவர் ஓம் பிர்லா உறுதி.
*மைசூரு பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவிடம் அனுமதிச் சீட்டுப் பெற்று மனோரஞ்சன், சாகர் சர்மா இருவரும் உள்ளே நுழைந்தது தெரியவந்தது .. முழுமையான விசாரணை நடத்த தனிக்குழுவை அமைத்தது டெல்லி மாநில காவல் துறை.
*சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது பற்றி தமிழக ஆளுநரும் முதலமைச்சரும் கலந்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும் … தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து.
*சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் ,, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தயாரக இருப்பதாகவும் உறுதி.
*முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்புக் கடிதம் அனுப்பி இருப்பதாக உச்ச நீதிமன்றத்த்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தகவல் .. அனைத்து விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று ஆளுநர் நினைப்பதாக நீதிமன்றம் கருத்து. விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு.
*சென்னையில் அனைத்து வட்டத்திலும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு … செங்கற்பட்டு மாவட்டத்தில் மூன்று வட்டங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் உள்ளவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.
*திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு வட்டங்களில் நிவாரணம் … பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் வட்டங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறாயிரம் தரப்படும் என்று அரசாணையில் விளக்கம்.
*சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு .. சேத விவரங்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களும் சேகரிப்பு.
*ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பசும் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிப்பு .. இது வரை ரூ 35 -க்கு வாங்கப்பட்ட பால் இனி ரூ 38க்-கு வாாங்கப்படும் என்று அறிவிப்பு.
*எருமைப்பால் விலை ரூ 44 லிருந்து 47 ஆக உயர்வு ..புதிய விலை உயர்வை டிசம்பர் 18- ஆம் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை.
*11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீடு திட்டத்தை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் செயல்படுத்த நடவடிக்கை .. பள்ளிக் கல்வித் துறை தகவல்.
*சிறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொலை பேசி வசதி மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்றும் ஒரு அழைப்பிற்கான நேரம் 12 நிமிடம் என்றும் உயர்த்தி வழங்கப்படும்… கைதிகள் தங்கள் உறவினர்களை முகம் பார்த்து பேசுவதற்கான வீடியோ அழைப்புகளையும் அனுமதித்து தமிழ் நாடு அரசு உத்தரவு.
*மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்பு .. போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக முன்னணி தலைவர்கள் பங்கேற்பு .
*ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவி எற்றார் சாகுல் சர்மா .. ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவின் சத்தீ்ஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய்பதவி ஏற்பு.