*மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் படி ஒவ்வொருவர் கணக்கிலும் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தொடங்கியது.. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
*அனுமதிக்கபட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. இதுவரை 789 பேர் பாதிப்பு, 77 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தி நடவடிக்கை.
*தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 120 பேருக்கு டெங்கு பாதிப்பு … தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்.
* டெங்கு சிகிச்சைக்கு 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி… டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு கோரிக்கை.
* புதுச்சேரியில் 44 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி… 2 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல்.
*கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும், கேரளாவிலிருந்து வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை .. மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் அமைச்சர் மா. சு. ஆய்வு.
*புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் 3- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை….மணல் விற்பனையில் முறைகேடு மற்றும் சட்டவிரோத பணபரிமாற்றத்திற்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்
* நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வளசரவாக்கம் போலீசார் மீண்டும் சம்மன்…. தான் விசாரணைக்கு ஆஜராகும் போது, தன் மீது குற்றம்சாட்டும் விஜயலட்சுமி மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்படும் வீரலட்சுமி ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையிடம் சீமான் மனு.
*அம்பேத்கர், திருவள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக புகார்.. ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னை போலீஸ் கைது செய்து விசாரணை.
*இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ மீனவர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிகை எடுக்க வேண்டும் .. இந்திய வெளயுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
*பள்ளி, கல்லூரி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை அக்-1 முதல் அமலுக்கு வருகிறது… கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் ஆன மசோதாவை செயல்படுத்த திட்டம்.
*சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம்… மத்திய பிரதேசத்தில் ரூ. 50,700 கோடி மதிப்புள்ள நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
*தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் .. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட கவிதா மீண்டும் அழைப்பு.
*நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி … ராஜ முந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிறகு நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு.
*சனாதனம் தொடர்பாக மாணவர்களுக்கு வெளியிட்ட இரண்டு சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெறுவதாக திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு .. சானதான எதிர்ப்பு தொடர்பாக பேசவருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த சுற்றறிக்கைகள் கடும் எதிர்ப்பு காரணமக நிறுத்தி வைப்பு.
*அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, 127 காவல்துறை சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு….போலீசாரின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு.
*பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டால் காவல்துறையினர் இரவு பகலாக பாதுகாக்க வேண்டி உள்ளது….திருச்செந்தூரில் புதிதாக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
*படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகர் தனுஷுக்கும் மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்சினையை மேற்கோள் காட்டி சிம்புவுக்கு ரெட் கார்டு… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு
*தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக விஷாலும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு தடை தயாரிப்பாளர் மதியழகன் உடனான புகார் தொடர்பாக நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு வழங்க முடிவு.
*ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடுமையான புயலின் போது அடுத்தடுத்து இரண்டு அணைகள் உடைந்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரமாக இருக்கும் என்று சர்வதேச அமைப்புகள் கணிப்பு.. கடற்கரை நகராமான டெர்னாவில் வசித்தவர்கள் வெள்ளத்தால் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டதால் இறப்பு அதிகரிப்பு.