*இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்த பய ராஜபக்சே, பசில் ராஜபக்சே சகோதரர்கள்தான் பொறுப்பு .. இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
*வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது .. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.
*நாகை , மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இடைவிடாது கன மழை .. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மனி நேரத்தில் வேளாங்கண்ணியில் 17 சென்டிமீட்டர் மழை, கடலூரில்1 2 சென்டிமீட்டர் மழை பதிவு.
*கன மழை பெய்யக்கூடும் என்பதால் 27 மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வருவாய்த்துறை கடிதம் .. மழையால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு.
*வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை .. ஆழ் கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களும் உடனடியாக திரும்ப உத்தரவு.
*தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு .. மறு தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்க முடிவு.
*கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தலாம்.. இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவுசெய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
*கனமழை காரணமாக நெய்வேலியில் மூன்று சுரங்கங்களையும் தண்ணீர் சூழ்ந்ததால் நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிப்பு .. போதுமான நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின்சார உற்பத்தி பாதிக்காது என்று உறுதி.
*இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து 1326 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் .. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு.
*திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்கத் தடை .. இலங்கையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை.
*திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி புகார் .. காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறும் வலியுறுத்தல்.
*சென்னையில் ஆளுநர் மாளிகை உள்ள சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்தது.. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் என்.ஐ.ஏ. தாமாக முன் வந்து விசாணையை தொடங்கியது.
*திருச்சி அருகே தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டிய வழக்கில் இளைஞர்கள் எட்டுபேரை கைது செய்து விசாரணை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் … இளைஞர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து லால்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை.
*திருச்சியைப் போன்று திருநெல்வேலி மாவட்டம் திசையான் விளையிலும் பட்டாசை வெடித்துக் கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்கள் இருவர் கைது .. மோட்டார் சைக்கிளும் பறிமுதல்.
*நடிகை நமீதாவின் கணவர் மீது மோசடிப் புகார் .. விசாரணைக்கு ஆஜராகததால் கைது செய்து அழைத்துச் செல்ல சேலம் போலீஸ் திட்டம்.
*திண்டிவனம் அருகே பிரீசர் பாக்சில் மின்சாரக் கசிவு காரணமாக திடீரென ஷாக் .. பெட்டியை தொட்டு்கொண்டு இருந்த15 பேர் லோசன பாதிப்புடன் தப்பினர்.
*கேரளாவில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று மாதத்தில் தீர்ப்பு …குற்றவாளி அஸ் பாக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
*உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடருகிறது … குழாய் வழியாக உணவு, ஆக்சிஜனை சுரங்கத்துக்குள் அனுப்புகிறது மீட்புக் குழு.
*பாலியல் தொழிலை குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பது அவசியம் .. நாடாளுமன்றக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை.
*காசா முனையில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையை சுற்றி பீரங்கிகளை நிறுத்தி இஸ்ரேல் அச்சுறுத்துவதாக புகார் .. உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைக்காமல் ஏராளமானவர்கள் அவதி.
*அல் ஷிபா மருத்துவமனை மீது தாக்குதல் எதுவும் நடத்தக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ படைன் வலியுறுத்தல்… மருத்துவமனைக்கான அடிப்டை தேவகளை உடனடியாக அளிக்ககுமாறு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்கும் கோரிக்கை.