தலைப்புச் செய்திகள் …(14-12-2023)

*நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் புதனன்று ரகளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் டெல்லி தனிப்படை போலீ்ஸ் தொடாந்து விசாரணை ,,, நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 7 பேர் சஸ்பெண்ட்..

*நாடாளுமன்றத் தாக்குதலை நடத்த ஆறு நண்பர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியது விசாரணையில் அம்பலம் .. வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை, மணிப்பூர் கலவரம் போன்றவற்றால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்த தாக்குதல் நடத்தியதாக தகவல்.

*தப்பி ஓடிய ஆறாவது நபரான லலித் ஷா என்பவர்தான் நாடளுமன்றத்திற்கு வெளியே முழக்கமிட்டதை படம் பிடித்த வெளியிட்டவர் .. லலித்தை தேடிப்பிடிக்க நடவடிக்கை.

*இரண்டு இளைஞர்கள் உள்ளே வந்து ரகளை செய்தது குறித்து விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் .. நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும் அமளி.

*மக்களவையில் சு.வெங்கடசன், கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன் உட்பட 15 எம்.பி்.க்கள் சஸ்பெண்ட் .. மக்களவை, மாநிலங்களவை இரண்டும் அலுவல்கள் எதுவுமின்றி நாளை வரை ஒத்திவத்து நடவடிக்கை.

*நாடாளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 301பேரில் 176 பேர்தான் பணியில் உள்ள நிலையில் நிரப்பப்படாமல் 125 இடங்கள் உள்ளன.. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தருமாறு டி.ஆர்.பாலு வலியுறுத்தல்.

*சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இரண்டு நாள் ஆய்வு செய்த மத்தியக்குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை .. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்திட ரூ 12,659 கோடி வழங்கிடுமாறு முதலமைச்சர் கோரிக்கை.

*மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ 6 ஆயிரம் வழங்கும் திட்டம் … சென்னையில் ஞாயிற்றுக் கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு.

*மழை வெள்ளத்தால் நான்கு மாவட்டங்களில் 37 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு .. வணிகர்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த மூன்று மாதங்கள் விலக்கு அளிக்குமாறு மத்திய நிதி அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

*தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நடிகர் விஜயகாந்திற்கு பதில் பிரேமலதா விஜயகாந்த் தேர்வு ..சென்னையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை விஜயகாந்திற்கு வழங்கி தீர்மானம்.

*வடலூரில் பல லட்சம் பக்தர்கள் கூடும் இடத்தில் 70 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் கட்டுவதால் தைப் பூச நாளில் பெரும் சிரமம் ஏற்படும் .. அந்த இடத்தில் நிலம கைப்பற்றுவதை கட்டுவதை கைவிட்டு வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*மிக்ஜாம் புயல் – பல்வேறு வீடுகளில் தண்ணீர் தேங்கியதால், மின் கணக்கீடு செய்வதில் சிரமம்…. மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு, அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின் கட்டணம் வசூல் செய்ய மின்சாரத்துறை விளக்கம்.

*சென்னை அடுத்த எண்ணூர் துறை முகத்தில் எண்ணெய் கசிவால் ஐநூறுக்கும் அதிகமான பைபர் படகுகள் சேதம் .. முழுமையாக எண்ணெய் அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்ப பல வாரங்கள் ஆகும் என்பதால் மீனவர்கள் கவலை.

*கோவா விமான நிலையத்தில் சர்மிளா என்ற தமிழ் பெண்ணிடம இந்தி கற்றுக்கொள்ளுமாறு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் வலியுறுத்தல் … இந்தி அதிகாரப் பூர்வ மொழி மட்டுமே ஆட்சி மொழி அல்ல என்ற சர்மிளா சுட்டிக்காட்டியதை அடுத்து தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி வருத்தம்.

*கூட்டாட்சி தன்மையை உணர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் … விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பு கொடுக்குமாறு கோரிக்கை.

*சென்னை பெண் பொறியாளர் சர்மிளாவிடம் அத்துமீறி பாதுகாப்புப் படை வீரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் .. சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்துமாறும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

*திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையளார் மதன் செல்வராஜ் மனைவி கார்த்திகா கைது .. பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்தவழக்கில் மதன் ஏற்கனவே கைது.

*கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. .. இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949ஆக அதிகரிப்பு.

*சிக்கிம் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு .. சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள் 800 பேர் ராணுவத்தால் பத்திரமாக மீட்பு.

*நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் தமது 92 வயதில் மூப்பு காரணமாக சென்னையில் காலமானார் .. எட்டுப் படங்களை இயக்கி உள்ள சங்கரன் மவுன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

*திரிஷா கதா நாயகியாக நடித்த மௌனம் பேசியதே படம் திரைக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவு .. கதாநாயகியாக அறிமுகம் ஆகி 21 ஆண்டுகள் ஆனதை முன்னிட்ட திரிஷா வீடீயோ வெளியிட்டு அனவைருக்கும் நன்றி.

*ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பகல்பத்து 2- ம் நாள் … நெல்லிக்காய் மாலை, காசு மாலை அடுக்கு பதக்கங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *