தலைப்புச் செய்திகள் (15-10-2023)

*ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் 28 பேர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது .. மீனவர்களின் படகு மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.

*நாகப்பட்டினம், காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டாவது நாளிலயே போதிய பயணிகள் இல்லாததால் நிறுத்தம் .. இனி வாரத்தில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிப்பு.

*மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் .. ம.பி. முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் மீண்டும் சிந்துவாரா தொகுதியில் போட்டி.

*காசா மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த ஆயத்த நிலையில் இ்ஸ்ரேல் படைகள் .. பாலஸ்தீனத்தியர்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறுவது தொடருகிறது.

*கசாவில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் .. இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ படைன் வலியுறுத்தல்.

*இஸ்ரேலை ஒட்டிய மத்திய தரைக் கடல் பகுதிக்கு விமானம் தாங்கி இரண்டாவது கப்பலை அனுப்பி வைத்தது அமெரிக்கா .. ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் உள்ளிட்ட நாடுகள் போரில் ஈடுபடுவதை மிரட்டல் மூலம் தடுக்க நடவடிக்கை.

*கடுமையான உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்பட்டு இருக்கும் இஸ்ரேலில் இருந்து மூன்றாவது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது… நான்காவது விமானம் டெல் அவிவ் நகரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது.

*ஐதராபாத்தைச் சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகுவை பேய் என்று விமர்சனம் .. பாலஸ்தீன மக்கள் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்.

*சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தி்ல் அப்துல் கலாமுக்கு சிலை .. அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு.

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் கே.எஸ்.அழகிரி நீக்கப்படலாம் என்று தகவல் .. சோனியா காந்தியிடம் நேற்று முக்கிய நிர்வாகிள் அழகிரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்.

*முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நாளான அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் சென்று மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு … கடந்த ஆண்டு செல்லாதவர் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் செல்லத் திட்டம் .

*திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து .. ஏழு பேர் உயிரிழந்த பரிதாபம்.

*சென்னையில் நடைபெற்ற சுங்கத் துறை தேர்வை ப்ளு டூத் உதவியுடன் விடைகளை பெற்று எழுதியது கண்டுபிடிப்பு .. உத்திர பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்த 29 பேர் மீது நடவடிக்கை.

*குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது….கொடி மரத்திற்கு தர்ப்பை புல் கொண்டு அலங்காரம் செய்து 16 வகையான அபிஷேகம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

*பெங்களூருவில் காண்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறையால் ரூ 42 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் .. உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாஜக கோரிக்கை.

*சிக்கிம் மாநிலத்தில் இரண்டு வாரங்கள் முன்பு கன மழை பெய்து தீ்ஸ்தா ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டதன் எதிரொலி .. இரண்டு நீர்மின் திட்டங்களை கை விடுவது பற்றி பரிசீலனை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *