*உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி… நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… 397 ரன்களை துரத்தி விளையாடிய நியூசிலாந்து 48.5 ஒவரில் 327 ரன்கள் எடுத்து போராடி தோற்றது. இந்திய அணி சார்பில் முகமது சமி அபாரமாக பத்து வீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
*உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தர் விராட் கோலி … கடந்த 2003 ஆம் ஆண்டு போட்டியில் சச்சின் 673 ரன் எடுத்திருந்த நிலையில் கோலி இன்றுடன் 674 ரன்கள் எடுத்து சாதனை.
*சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி .. சச்சின் அடித்து இருந்த 49 சதங்களை முறியடித்து கோலி புதிய சாதனை படைப்பு.
*ஒரே நாளில் இரண்டு சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலிக்கு பாராட்டு குவிகிறது .. பிரபலங்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து.
*விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்வதற்கான அவகாசத்தை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு .. அவகாசம் இன்றுடன் நிறவைடைந்த நிலையில் நீட்டிக்கக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியதை அடுத்து நடவடிக்கை.
*வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது … தமிழ் நாட்டில் மழை தொடரும் என்று வானிலை மையம் தகவல்.
*தமிழ்நாட்டில் நவம்பர் 21 ஆம் தேதி வரை மிதமான மழை தொடரும் .. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் மழை நீடிக்கும் என்றும் அறிவிப்பு.
*இன்று ( புதன் கிழமை) காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி வளாகத்தில் 19 சென்டி மீட்டர் மழை … நாகை மாவட்டத்தில் 11 சென்னை மீட்டரும் சென்னை அடுத்த அம்பத்தூரில் 10 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல்.
*தமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் உட்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் .. அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள்.
*காவிரி டெல்டாவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களில் தண்ணீர் வடியவில்லை… காவிரியில் போதிய தண்ணீர் இல்லாததால் தாமதமாக நடப்பட்ட நெல் பயிர்கள் அழுகும் சூழல்.
*சென்னை ஆளுநர் மாளிகை முன் பெட்ரேல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஆவணங்களை கேட்டு சென்னை போலீசுக்கு என்.ஐ.ஏ.கடிதம் … சிறையில் இருக்கம் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க கூடும் என்றும் தகவல்.
*அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட வழக்கு.. காவல் துறை அதிகாரி பல் பீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி.
*அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைியில் சேர்ப்பு..புழல் சிறையில் இருந்தவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்.
*சுதந்திரப் போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான என். சங்கரய்யா தமது 92 வயதில் சென்னை மருத்துவமனையில காலமானார் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி.
*சட்ட மன்ற உறுப்பினராக மூன்று முறை தோந்தெடுக்கப்பட்டவர் சங்கரய்யா .. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
*சுதந்திரப் போராட்டக் காலம், பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யபப்ட்ட போது என எட்டு ஆண்டுகளை சிறையில் கழித்த தியாகி சங்கரய்யா.. தமிழ்நாடு அரசின் தகை சால் விருது பெற்ற பெருமைக்கு உரிய மனிதர்.
*விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கல்லூரி படிப்பை பாதியில விட்ட சங்கரய்யாவை டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பிக்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முயன்றது .. ஆளுநர் ரவி கையெழுத்துப் போட மறுத்ததால் டாக்டர் பட்டம் வழங்க முடியாமல் போனது.
*சென்னையில நாளை சங்கரய்யா உடலுக்கு இறுதிச் சடங்கு .. அரசு மரியாதை அளிக்க முதலமைச்சர் உத்தரவு.
* தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி .. நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு.
*புதுக்கோட்டையில் கட்டப்பட்டு உள்ள தமிழ் நாட்டின் இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைப்பு.. தூத்துக்குடிக்கு குடி நீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்து சிலையும் காணொலி வாயிலாக திறப்பு.
*ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் – ஓழுங்கு இன்றியமையாதது என்பதை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய நிலையை உருவாக்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை.
*திமுக இளைஞர் அணி நடத்து மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி கொடுத்து உள்ள காவல் துறை பாமக பேரணிக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது… காவல் துறை நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
*இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை .. இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவர் என்பதால் முருகன் என்ற மீனவருக்கு மட்டும் 24 மாத சிறை தண்டனை விதிப்பு.
*அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீ்ட்டு மனு.. நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு.
*கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர் .. சாலை சரியில்லாததால் விபத்து நேரிட்டதாக கூறி பொதுமக்கள் மறியல்.
*ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிழிந்த பரிதாபம்… படுகாயம் அடைந்த 19 பேரில் சிலரது உடல் நிலை கவலைக்கிடம்.
*உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கி்கொண்ட 40 தொழிலார்களை மீட்கும் பணி நான்காவது நாளாக நீடித்தது…. பாறை இடுக்கு வழியாக பெரிய குழாயை உள்ளே அனுப்பி அதன் விழியே தொழிலார்களை மீட்க நடவடிக்கை.
*விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 15- வது தவணைத் தொகையை விடுவித்தார் பிரதமர் மோடி … எட்டு கோடி விவசாயிகளுக்கு ரூ 18 ஆயிரம் கோடி உதவித் தொகை.
*ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட குர்மீத் சிங் உடல் நலக்குறைவால் மரணம் .. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த குர்மித் உயிர் டெல்லி மருத்துவமனையில் பிரிந்தது.
*ஆசிய-பசிபிக் பொருளாதா மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்த சீன அதிபர் ஜின் பிங்-குக்கு சான் பிரான் சிஸ்கோ விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு .. அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் சீன அதிபர்.
*கசா முனையில் உள்ள அல் ஷகிபா மருத்துவமனைக்குள் நுழைந்தது இஸ்ரேல் படை … ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை மீட்க ஒவ்வொரு அறையாக நுழைந்து தேடுதல் வேட்டை.