*இளைஞர்கள் இருவர் உள்ளே நுழைந்து ரகளை செய்ததில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறப்பினர்கள் இரண்டாவது நாளாக வலியுறுத்தல் .. அமளி மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக நாடாளுமன்ற இரண்டு அவைகளும் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு.
*நாடாளுமன்றத்தில் புதனன்று நடந்த தாக்குதல் குறித்த உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது ..நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகால்த் ஜோஷி தகவல்.
*நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தொடாந்து விசாரனை ..பின்னணியில் உள்ள அமைப்புகளை கண்டறிய நடவடிக்கை.
*அண்டை மாநிலமான கேரளாவில் மேலும் ஒருவர் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பு … கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு தொற்று.
*கேரளாவில் முதல் முறையாக ஜே என் 1 வகை கெரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிப்பு .. ஜே என் 1 வகை வேகமாக பரவக்கூடியது என்பதால் சோதனைகளும் அதிகரிப்பு.
*கோட நாடு வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் … சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவதற்கு பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்கும் படி இல்லை என்றும் கருத்து.
*வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறபிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு … வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்பதால் தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்தத அல்ல என்றும் விளக்கம்.
*தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இரண்டு அதிகாரிகள் முகாம் … 10 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 10 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல்.
*சென்னையில் இருந்து சபரி மலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோட்டயத்திற்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம் … டிசம்பர் 15,17, 22, மற்றும் 24 ஆம் தேதி காலை சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு மாலை 4.15 க்கு கோட்டயத்தை அடைகிறது வந்தே பாரத்.
*அமலாக்கத் துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் … மத்திய அரசு அதிகாரிகள் தவறு செய்யும் போது விசாரணை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்பு.
*குருப் 2 தேர்வுகளை பத்து மாதங்களாக வெளியிடாமல் மாணவர்கள் வாழ்க்கையுடன் தமிழ் நாடு அரசு விளையாடுவதாக அன்புமணி ராமதாஸ் புகார்… அரசு பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு புதிய தலைவரையும் பத்து உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் வலியுறுத்தல்.
*அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக் கைதிகள் பல்லை பிடுங்கிய வழக்கில் காவல் துறை அதிகாரி பல்பீர் சிங்குங்கு ஜாமீன் .. நெல்லை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
*கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கியது உயர்நீதி மன்றம் .. கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டப் புகார் எழுந்த போது தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்று அறிக்கை அளித்து இருந்தார் .சம்பத் குமார்.
*தேமுதிக புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து … தேமுதிகவை பல படிகள் முன் கொண்டு செல்ல பிரேமலதாவை வாழ்த்துவதாக அண்ணாமலை அறிக்கை.
*தேமுதிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா சென்னையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை.. பக்கத்திலேயே உள்ள அண்ணா நினைவிடத்திற்கு செல்லாமல் தவிர்ப்பு.
*திருச்சி பிரணவ் நகைக்கடை விளம்பர படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் அந்தக் கடையின் மோசடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் விளக்கம் … மோசடியில் தாம் ஈடுபடவில்லை என்று கூறிய போது தமக்கு துணை நின்ற அனைவருக்கும் பிரகாஷ் ராஜ் நன்றி,
*சென்னை வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞர்கள் மூன்று பேர் கைது .. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பறிமுதல்.
*தீப்பெட்டித் தொழிலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் பிளாஷ்டிக் லைட்டர்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிக்கை …. கோவில் பட்டியில் தீப்பெட்டித் தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்.
*சேலத்தில் மாடர்ன்ஸ் ஸ்டுடியோ இருந்த இடத்தில் கலைஞர் சிலை அமைக்க நிலம் கேட்டு அரசு தரப்பில் நிர்ப்பந்தம் செய்வதாக வெளியான தகவலுக்கு மறுப்பு .. சாலை விரிவாக்கத்திற்கு நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்.
*ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன் லால் சர்மா பதவி ஏற்பு … துணை முதலமைச்சர்களாக இரண்டு பேருக்கு பதவிப் பிரமாணம் .. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
*அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் இயக்கத்தலைவர் பன்னும் என்பவரை கொல்ல முயன்றதாக புகாருக்கு ஆளாகி இருக்கும் நிகில் குப்தா செக் நாட்டு நீதிமன்றத்தை நாடுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் … இன்னும் சில நாட்களில் அமெரிக்காவுக்கு நிகில் அனுப்பப்பட உள்ளதை தடுத்த நிறுத்தக் கோரும் வழக்கில் உத்தரவு.
*கடந்த ஜுன் மாதம் செக் நாட்டில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக புகார் …மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற நிகில் குப்தா குடும்பத்தின் கோரிக்கை மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
*கர்நாடக மாநிலத்தில் நான்கு விமான நிலையங்களுக்கு சூட்ட வேண்டிய தலைவர்கள் பெயரை பரிந்துரைத்து சட்டசபையில் தீர்மானம் .. மைசூரு விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை வைக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை பாஜக எம்எல்ஏ எதிர்ப்பால் நிறுத்தி வை்ப்பு
*தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம் … கடலோரப் பகுதியில் ஓரிரு இடங்களில் 12 சென்டி மீட்டர் வரை மழை பெய்யலாம் என்று எச்சரிக்கை.
*சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் லேசான மழை … கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
*புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ..திருநள்ளாறு கோவில் சனி்ப்பெயர்ச்சி நிகழ்வை முன்னிட்டு நடவடிக்கை.
*இயக்குநர் விக்னேஷ் சிவன் தமது புதிய படத்திற்கு எல்.ஐ.சி.என்று சூட்டி உள்ள பெயருக்கு மற்றொரு இயக்குநரான எஸ்.எஸ். குமரன் எதிர்ப்பு .. கடந்த 2015 ஆம் ஆண்டில் தாம் பதிவு செய்துள்ள பெயரை விக்னேஷ் சிவன் கைவிடாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிப்பு.