*திருவள்ளளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் தளத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து இருப்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் … தமிழ் மண்ணில் துறவின் அடையாளமாக திகழும் வெள்ளை வண்ண உடைதான் வள்ளுவரின் அடையாளம் என்று வலைதளங்களில் ரவிக்கு பதில்.
*தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வள்ளுவர் நாள் வாழ்த்துகள் என்று முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் தின வாழ்த்து… தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது என்றும் ஆளுநருக்கு முதல்வர் மறைமுக பதில்.
*கால் நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழ் நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் … மாலை அணிவித்து, மணி கட்டி, ஊர்வலமாக அழைத்துச் சென்று மாடுகளுக்கு விழா.
*மதுரை அருகே எலியார் பத்தி என்ற இடத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு … இளைஞரின் மார்பில் காளை முட்டியதில் உயிர் பிரிந்தது.
*பாலமேட்டில் 10 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 840 காளைகள் பங்கேற்பு… மாடு முட்டியதில் காயம் அடைந்த மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயராஜனுக்கு முதலுதவி மையத்தில் சிகிச்சை.
*பால மேட்டில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற பிராபகரன் என்பவருக்கு காரை பரிசாக வழங்கினார் அமைச்சர் மூர்த்தி .. சின்னம்பட்டி தமிழரசன் 11 காளகளை அடக்கி இரண்டாவது இடம், பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி மூன்றாவது இடம்.
*புதுக்கோட்டையை சேர்ந்த சின்னக் கருப்பு என்ற காளையின் உரிமையாளருக்கு சிறந்த காளைக்கான கார் அன்பளிப்பு … பாலமேட்டில் இரண்டாம் இடம் பிடித்த தேனி காளைக்கு பசுமாடு பரிசு.
*திருச்சியை அடுத்த பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்ப்பு … மாடுகள் முட்டியதில் 70 வீரர்கள் காயம்.
*அலங்கா நல்லூரில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக காளைகளும் அதிக வீரர்களும் பங்கேற்க இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு …. காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்குவதற்கு ஏற்பாடு.
*காணும் பொங்கலான நாளை சென்னையில் கடற்கரையில் குளிப்பதற்கு அனுமதி இல்லை … வண்டலூர் உட்பட முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுப்பு அளிக்க நடவடிக்கை
*மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டம் முடிந்தவுடன் தொடங்கப் பட உள்ள இரண்டாவது புல்லட் ரயில் திட்டத்தில் சென்னை-பெங்களூர்- மைசூர் பாதை சேர்ப்பு … விரைவில் புதிய பாதைக்கான செயல்திட்டம் வெளியாகும் என்று தகவல்.
*முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளாவை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்து கார்கே உத்தரவு …. ஒய்.எஸ், ஆர். தெலுங்கான என்ற கட்சியை நடத்தி வந்த சர்மிளா அண்மையில் காங்கிரசில் இணைந்தவர்.
*தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு ஊழல் தொடர்பாக ஆந்திர அரசு பதிந்து உள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு… ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன் தகுதி வாய்ந்த அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டுமா என்பதில் வெவ்வேறு கருத்து. சந்திரபாபு நாயுடு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.
*தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடுமையான பனி மூட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிப்பு … விமானங்களின் புறப்பாடும் தரையிறக்கமும் தாமதம்.
*டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை நிலவிய பனி மூட்டத்தால் மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பல மணி நேரம் தாமதாக இயக்கப் பட்டதால் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி பட்டதன் எதிரொலி … பனி மூட்டம் போன்ற காரணங்களால் விமானத்தை இயக்க மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனால் பயணத்தை ரத்து செய்து கட்டணத்தை திருப்பிக் கொடுக்கலாம் என்று இந்திய விமான கட்டுப்பாட்டுத் துறை அறிவிப்பு.
*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை இரண்டு நாள் பாரத நியாய பயணத்தின் போது கேட்டறிந்து ஆறுதல் … மூன்றாவது நாளான இன்று காலை நாகலாந்து மாநிலம் கோகிமாவில் இருந்து பயணம் ஆரம்பம்.
*அயோத்தியில் ராமர் கோயில் விழாவை பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மோடியின் விழவாக மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி புகார் … அதனால் அந்த விழாவுக்கு செல்லப்போவதில்லை என்றும் விளக்கம்.
*ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் பேச்சு … புதினுடானன பேச்சு நல்ல விதமாக இருந்தது, இரு நாடுகள் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமைந்தது என்று மோடி எக்ஸ தளத்தில் பதிவு.
*உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஜி இத்கா மசூதியை ஆய்வு செய்வதற்கு அதிகாரியை அலாகாபாத் உயர்நீதிமன்றம் நியமித்ததற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை … மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக வழக்குத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு அதகாரியை நியமிக்க அனுமதி பெற்று இருந்தனர்.
*அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியடுதற்கான தகுதி தேர்தலில் லோவே காகோஸ் மாகாணத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி … பதிவான வாக்குகளில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற டிரம்ப் மற்ற இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளினார்.
*அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வந்த இந்திய வம்சாவழி விவேக் ராமசாமி திடீர் விலகல் … லோவா காகோஸ் மாகாணத்தில் டிரம்ப்க்கு கிடைத்த அமோக ஆதரவை அடுத்து விலகுதல் அறிவிப்பை வெளியிட்டார் விவேக் ராமசாமி.
*கடந்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த கால் பந்து வீரருக்கான விருதை பெற்றார் லியோனஸ் மெஸ்சி … சிறந்த வீரர் விருதை மெஸ்சி பெறுவது இது மூன்றாவது முறை.
*சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி காந்த் வீட்டு முன் புத்தாண்டு, பிறந்தநாள், பொங்கலின் போது ரசிகர்கள் கூடி சத்தம் போடுவதற்கு பக்கத்து வீ்ட்டுப் பெண்மணி எதிர்ப்பு … ரஜினி அவருடைய ரசிகர்களை திருமண மண்பம் அல்லது வேறு இடத்தில் சந்திக்காமல் இங்கு சந்தித்து பக்கத்து வீடுகளுக்கு இடையூறு செய்வது சரியா என்றும் கேள்வி.
*ஆந்திராவில் நான்கு நாள் முன் வெளியான குண்டூர் காரம் படத்தில் நாயகன் அடிக்கடி பீடி பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் கண்டனம் … புகையிலை இல்லாத லவங்கம் இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பீடியை பிடித்ததாக மகேஷ் பாபு விளக்கம்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447