*ஹமாஸ் போராளிகளின் முகாம்கள் உள்ள காசாவின் வடக்குப் பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் இஸ்ரேல் படைகள் … வானிலை காரணமாக தாக்குதலை தொடங்குவதில் தாமதம்.
*இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையோயான போர் பத்தாவது நாளாக நீடிப்பு .. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 2,670 பேரும், ஹமாஸ் போரளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1400 பேரும் கடந்த பத்த நாட்களில் பலி.
*காசாவை எகிப்துடன் இணைக்கும் ராபா எல்லையை திறக்க இஸ்ரேல் தற்காலிக அனுமதி .. வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்து உள்ளவர்கள் வெளியேறவும் உணவு உள்ளிட்ட உதவிகளை காசாவுக்கு கொண்டு செல்லவும் வாய்ப்பு.
*ஹமாஸ் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமரிக்கா அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சி பேட்டியில் அறிவிப்பு … ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறாகிவிடும் என்றும் பைடன் கருத்து.
*செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என்று உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம் .. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததால் தீர்ப்பு ஒத்திவைப்பு.
*மாற்றுத் திறனாளிகள் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து .. ரூ 1,763 கோடியிலான மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு.
*பள்ளிகளில் மாணவிகள் அனைவரும் குழந்தைத் திருமண உறுதி மொழி ஏற்பு … பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையை அடு்த்து பள்ளிகளில் உறுதி மொழி ஏற்புக்கு நடவடிக்கை.
*இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லபட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
*திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில் சமுதாய நலக்கூட மேற்கூரை இடிந்த விழுந்து விபத்து .. பேருந்துக்காக காத்து நின்ற தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரழப்பு.
*அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் நடைபயணம் மீண்டும் அவிநாசியில் இருந்து தொடங்கியது.. மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் , எல். முருகன் பங்கேற்பு.
*தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் நெசவுத் தொழில் பாதிப்பு .. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றச்சாட்டு.
*சேலத்தில் இருந்து பெங்களூரு மற்றும் கொச்சிக்கு விமான சேவை தொடங்கியது .. அல்லயன்ஸ் நிறுவன விமானம் பெங்களூருவில் இருந்து சேலம் வந்து கொச்சி சென்றது. மீண்டும் கொச்சியில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு பயணம்.
*சேலத்தில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 29 ஆம் தேதி முதல் விமான சேவை .. ஐதராப்பாத்தில் இருந்தும் பெங்களூரு வழியாக சேலத்திற்கு விமானம் இயக்கத் திட்டம்.
*சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இயங்கும் ஓலா மற்றும் ஊபர் நிறுவன கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் .. அரசே செயலி ஒன்றைஅறிமுகப்படுத்தக் கோரி போராட்டம்.
*விசயதசமியை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கேட்டு ஆர் எஸ். எஸ். அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு .. தேவர் குரு பூஜை இருப்பதால் பாது காப்பு தர இயலாது என்று அரசு தரப்பு வாதம்.
*மணல் குவாரிகளில் இறங்கி சோதனை நடத்தும் அமலாக்கத் துறை சோதனை தொடருகிறது .. விழுப்புரம் மாவட்டம் ஏனாதி மங்கலத்தில் தென் பெண்ணை ஆற்றில் ஆய்வு.
*மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தி்ன் சோதனை ஓட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி காலை ஸ்ரீஹரி கோட்டாவில் ஆரம்பம். இஸ்ரோ அறிவிப்பு.
*தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பனி விரைவில் ஆரம்பமாகும் .. இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னையில் முதலமைச்சரை சந்தித்த பிறகு தகவல்.
*திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கன மழை பெய்ததன் எதிரொலி .. பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தால் செயல் படவில்லை.
*கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கன மழையால் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழந்தது .. சுமார் ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு.
*தென் மேற்கு வங்கக் கடலில் லட்சத் தீவு அருகே நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு .. வானிலை மையம் தகவல்.
*அரசியல் கட்சிகளுகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவதற்கான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு .. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாத திட்டம் சட்டவிரோதம் என்று பொது நல மனுவில் புகார்.
*டெல்லியை அடுத்த நோய்டாவில் கடந்த 2006 ல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடல்களை சாக்கடையில் வீசிய வழக்கில் திருப்பம் … மரண தண்டனை விதிக்கப்பட்ட சுரீந்தர் கோலி, மொனிந்தர் சிங் இருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பரபரப்பு திர்ப்பு.
*நடிகர் விஜயின் லியோ படம் பெரிய வெற்றியை பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து .. நெல்லை மாவட்டத்தில் நடந்த தலைவா 170 படப்பிடிப்பு முடிந்து புறப்பட்டவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.