*லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது…ரூ 1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக லாட்டரி மார்ட்டின் நிறுவனம் திகழ்கிறது.
* அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதிய விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் இருந்துள்ளார். ….கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது.
*தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு…யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
*தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. இவற்றில் 2019-20ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை பாஜக பெற்றுள்ளது.
*காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளது……* நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திற்கு ரூ.944.5 கோடி கிடைத்து உள்ளது.
*தேர்தல் பத்திரங்கக் மூலம் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.442.8 கோடி பெற்றுள்ளது….சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 181.35 கோடிகிடைத்து உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1397 கோடி பெற்றுள்ளது….கே சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1322 கோடி பெற்றுள்ளது.
*அதிமுக – பாமக இடையேயான கூட்டணி உடன்பாடு,,, நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
*பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு….பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.
*’நியாய சங்கல்ப் பாதயாத்ரா’ என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பயணம் மும்பையில் நிறைவு….மும்பையில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டு பயணத்தை நிறைவு செய்தார் ராகுல்.
*மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடைப்பெற்ற ராகுல் காந்தியின் பயண நிறைவு விழாவில் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு…தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டு பாஜகவை தோற்கடிக்க சபதம்.
*அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 2 -ஆம் தேதியே எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு….சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2 உடன் முடிவடைவதால், வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
*மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதுவாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்… 1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு. ..அவருக்கு 9வது முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.… கெஜ்ரிவால் வரும் 21 -ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவு.
*தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட்-திருப்பதி தேவஸ்தானம்…தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட், அறைகள் வசதி செய்து தரப்படும்.
*கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்…நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், நாளை காலை இவ்வழக்கை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
*தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.
*மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு…பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் ₹15,000 ஆகவும், தனி தொகுதிக்கு ₹10,000 செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.
*நெடுந்தீவு அருகே ராமேஷ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை… அனைவரையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447