*கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.. தொலைக் காட்சி, சமூக ஊடகள் மூலம் பரப்புரை செய்வதும் நிறுத்தப்பட்டது.
*பரப்புரை ஓய்ந்த பிறகு சமூக ஊடகங்கள் வழியாக வாக்குக் கேட்டு விளம்பரம் செய்தால் இரண்டு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை … ஒவ்வொரு தொகுதியிலும் தங்கியிருக்கும் வெளியூர் நபர்களும் வெளியேற்றம்.
*நாளை மறுதினம் காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்களிப்பதற்கு ஏற்பாடு … அனைவருக்கும் பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் அறிவிப்பு.
*தமிழ்நாடு முழுதும் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் போலீசார் பாதுகாப்பு .. பதற்றமான 8050 வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீ்ஸ்காரர்களை நிறுத்த ஏற்பாடு… ஆங்காங்கு கொடி அணிவகுப்பு … தகவல் வந்தால் அடுத்த பத்து நிமிடத்திற்குள் அந்த இடத்தை அடைய ரோந்து வாகனங்கள் அடைவதற்கும் நடவடிக்கை.
*ஊழல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்கு பொருத்தமானவர் பிரதமர் மோடிதான் என்று தென் சென்னையில் நடைபெற்ற கடைசி பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து… பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்றும் புகார்.
*தமிழர் உரிமையை மீட்போம், தமிழ் நாட்டைக் காப்போம் என்ற முழக்கத்துடன் சேலத்தில் பரப்புரயை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.. சேலத்தில் அதிமுக வேட்பாளருக்காக திறந்த வாகனத்த்தில் வீதி,வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு.
*தேர்தலில் வாக்களிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு போக்குவரத்துத் துறை ஏற்பாடு.
*கடந்த இரண்டு முறை மோடியால் ஏமாற்றப்பட்ட மக்கள் இந்த முறை அவரை தோற்கடிக்கத் தயாராகிவிட்டதாக மு.க. ஸ்டாலின் பேட்டி … மீனவர்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடு்த்ததாகவும் புகார்.
*தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி … மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்ப்பதில் திமுக உறுதயாக இல்லை என்றும் விமர்சனம்.
*தமிழ்நாடு முழுவதும் தேர்தல் காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மூன்று நாட்கள் கழித்து சனிக்கிழமைதான் திறக்கப்பட உள்னன. மதுப் பிரியர்கள் நேற்று மாலையே பாட்டில்களை வாங்கி குவித்து வைத்ததால் ரூ 400 கோடிக்கு மது விற்பனை.
*சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பது பற்றி புகார் தந்தால் நடவடிக்கை.. பொது நல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
*நாடாளுமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிப் பெற வாய்ப்பில்லை என்று ராகுல் காந்தி பேட்டி .. உத்திரபிரேதேசத்தில் உள்ள அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு வேட்பாளர் தேர்வை காங்கிரஸ் தலைமை முடிவு செய்வதாக விளக்கம்.
*ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு… தங்கள் தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியதால் ஈரான் மீது பொருளாதார தடை அறிவிப்பு.
*துபாயில் நேற்று தீடீரென பெய்த கன மழையால் சர்வதேச விமான நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது, போக்குவரத்து பாதிப்பு … சென்னையில் இருந்து செல்லவேண்டிய ஐந்து விமானங்களும் அங்கிருந்து வரவேண்டிய விமானங்களும் ரத்து.
*மியான்மர் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சன் சூ அகி வெப்ப அலை காரணமாக வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டதாக ராணுவம் தகவல்.. கடந்த 2020 -ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்ற தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தவா், ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.54,960-க்கு விற்பனை…. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.90 க்கும் விற்பனையானது.
*நடிகர் சித்தார்த்தின் 45- வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கர் இயக்கும் இந்தியன்- 2 படத்தின் படக்குழு போஸ்டர் வெளிட்டு வாழ்த்து … இந்தியன் 2 படத்தி்ல் முக்கிய வேடத்தில் நடிக்ககிறார் சித்தார்த்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447