தலைப்புச் செய்திகள் (17-09-2023)

*கலைஞர் மகளிர் உரிமைத் பிதொகையை வாடிக்கையாளர்களுக்குத் தராமல் வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டதால் பல லட்சம் பெண்கள் ஏமாற்றம்.. புரிந்துணர்வு ஒப்பந்ததை மீறும் வங்கிகளில் உள்ள கணக்குகள் வேறு வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சாிக்கை..

*அண்ணாமலைக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையான மோதல் தொடருகிறது… வசூல் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடித்தவர்களுக்கு எது சொன்னாலும் புரியாது என்று சிவி சண்முகன் பற்றி அண்ணாமலை கிண்டல்.

*சிவி சண்முகம் பகலில் ஒன்று பேசுவார், மாலை ஆறு மணிக்கு மேல் பேசுவார் என்று அண்ணாமலை விமர்சனம் … சுயமரியாதை உள்ள பாஜக கூட்டணியில் உள்ளதால் அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது என்றும் அண்ணாமலை காட்டம்.

*தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன்… திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

*தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பறிக்கிறது,நீட் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துள்ளது… 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் பேச்சு.

*சென்னை அடுத்த திருப்பெரும் புதூர் அருகே நேற்று சுட்டுல்லப்பட்ட ரவுடி விஸ்வா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தகவல்..

*சுட்டுக்கொல்லப்பட்ட விஸ்வா பாஜக மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராகவும் இருந்தவர்… தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் விளக்கம்.

*வேலூரில் இலங்கைத் தமிழர்களுக்காக ரூ 80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 1591 குடியிருப்புகளை திறந்து வைத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … தொடர்ந்து வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் பங்கேற்பு.

*அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் நாளை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு … குழுவில் திமுக. காங்கிரஸ்,பாமக. விசிக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் உள்ளனர்.

*பிளாஸ்டர் ஆப் பாரி்ஸ் மூ லம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் வைக்கவும் தடை .. நெல்லையி்ல் பிளாஸ்டர் ஆப் பாரி்ஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்யலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு.

*தந்தை பெரியாரின் 145- வது பிறந்த நாள் நாடு முழுவதும் உற்சாகக் கொாண்ட்டம் .. சமூக வலைதளங்களில் பெரியார் கருத்துகள் வைரலானது.

*கலைஞர்கள், கை வினைஞர்கள் நம்பிக்கையை விசுவகர்மா திட்டம் ஊக்குவிக்கும்.. தமது பிறந்த நாளை முன்னிட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு.

*விசுவகர்மா திட்டத்திற்கு ரூ 13 ஆயிரம கோடி செலவிடப்பட உள்ளதகாவும் மோடி தகவல்.. பயிற்சி காலத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ 500 உதவித் தொகை வழங்க உள்ளதாகவும் அறிவிப்பு.

*ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்,தமக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி மனு .. நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

*சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மதுரையைச் சேர்ந்த ஒருவர் யானை அன்பளிப்பு .. யானைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் சூட்டி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர் தீட்சிதர்கள்.

*சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நடை திறப்பு .. 22 ஆம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி..

*எட்டாவது முறையாக ஆசியக் கிரிக்கெட் கோப்பையை தட்டித் தூக்கியது இந்திய அணி .. கொழும்பில் நடை பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபாரம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *