*தனிபாலின திருமணச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு மறுப்பு … சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள் நாடாளுமன்றம் முடிவு செய்யவேண்டும் என்று கருத்து.
*நீதிமன்றங்களால் எந்த ஒரு சட்டத்தையும உருவாக்க முடியாது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து .. தன்பாலின திருமணம் தொடர்பாக சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்த முடியாது என்றும் தீர்ப்பு.
*தன்பாலின திருமண வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு நான்கு விதமான தீர்பபு … 200 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களால் மாற்ற முடியாத பல அம்சங்கள் இப்போது மாற்றப்பட்டு இருப்பதாகவும் கருத்து.
*ஹமாஸ் தலைவரான ஒசாமா மசினி இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் பலி .. காசாவில் மசினி தங்கியிருந்த வீட்டைக் குறிவைத்து தாக்கி குண்டு வீசிக் கொன்றது இஸ்ரேல் ராணுவம்.
*பதினோராவது நாளாக நீடிக்கும் போரில் இரவு முழுவதும் காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் .. பல நூறு வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து நொறுங்கிக் கிடக்கும் பரிதாபம்.
*போரால் உருக்குலைந்துக் கிடக்கும் காசாவில் வசிப்பவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல் … இஸ்ரேலின் நிலைப்பாட்டை வரவேற்பதாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிண்டன் தகவல்.
*அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல முடிவு .. நேரில் சென்று தமது ஆதரவை தெரிவிக்க நடவடிக்கை.
*சிவகாசியில் எம்.புதுப்பட்டி கனிஸ்கா பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு .. மாறநேரியில் மற்றொரு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் இறப்பு.
*பாஜகவுடன் இனி எப்போதும் அதிமுக கூட்டணி வைக்காது என்பதை அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் … சென்னையில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*செங்கற்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை … பொது மக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று விசாரணை.
*அதிமுகவின் 52 வது ஆண்டு விழா .. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை.
*கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் ரூ 15 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தகவல் .. கடந்த ஒரு வருடத்தில் 120 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ஹவாலா பணம் பிடிப்பட்டு இருப்பதாகவும் விளக்கம்.
*விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்கு நவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் சென்று வர அனுமதி கேட்டு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளையில் வழக்கு … கோயிலுக்குச் செல்ல அனுமதி கொடுத்தாலே குப்பைகளை போட்டுவிடுவார்கள் என்று நீதிபதி கருத்து.
*கோவை பயிற்சி பள்ளி மைதானத்தி்ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக இருந்த ஐயப்பன்.. கொட நாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து விசாரணை.
*சென்னையில் ஒலோ மற்றும் ஊபர் நிறுவன ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் … ஆட்டோ, வாடகைக் கார்ரிகளின் பயணம் செய்வதற்கான கட்டணம் அதிகரிப்பு.
*லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு .. காலை 9 மணிக்கு காட்சிக்குப் பதிலாக காலை 7 மணிக்கு காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உத்தரவு.
*தமிழக அரசு உள்துறை செயலாளருடன் லியோ படக்குழுவின் வழக்கறிஞர்கள் சந்திப்பு .. அரசு அனுமதித்த காலை ஒன்பது மணி முதல் இரவு ஒரு மணிக்குள் 5 காட்சிகளை திரையிட முடியாது என்று புகார்.
*இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரிக்கை … மண்டபத்தில் நவம்பர் 1 ஆம் தேதி ரயில் மறியல் செய்யப் போவதாக மீனவர் சங்கங்கள் அமைப்பு.
*ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் ஆபத்து ஏற்படும் வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து .. திருச்சி, புதுக்கோட்டை சாலையில் உள்ள கொடிக்கம்பத்தை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
*மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு .. நிலவுக்கு இந்தியா சார்பில் 2024 க்குள் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்.
*ஈரான் நாட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் டாரிஸ் மெர்ஜி மற்றும் அவருடைய மனைவி இருவரும் மர்ம நபர்களால் குத்திக்கொலை .. தி கவ், சாரா, பாரி, தி மிக்ஸ் போன்ற முக்கிய படங்களை இயக்கியவர் மெர்ஜி.