*அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு .. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கம் .
*அரசியலுக்கும் பாஜக தலைவர் பதவிக்கும் தகுதியில்லாத அண்ணாமலை போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழே தான் ஓட்டுக் கிடைக்கும் .. அதிமுக பற்றிய விமர்சனஙகளை நிறுத்தாவிட்டால் தாறுமாறாக விமர்சிக்க நேரிடும் என்றும் ஜெயக்குமார் எச்ரிக்கை .
*அண்ணாமலை அடிக்கடி அதிமுகவை விமர்சிப்பதால் தான் ஜெயக்குமார் மூலம் பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருப்பதாக தகவல் … அதிமுக தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள் மனக்குறலை தான் ஜெயக்குமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் விமர்சகர்கள் கருத்து.
*கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்ததால் பாஜகவினர் மகிழ்ச்சி .. பொள்ளாச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாடி ஜெயக்குமாருக்கு பதிலடி.
*அதிமுக பற்றிய தமது கருத்துகளை அண்ணாமலை அறிக்கையாக தயாரித்து பாஜக மேலிடத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைப்பு .. தமது விமர்சனத்தில் தவறு இல்லை என்று விளக்கி இருப்பதாகவும் தகவல்.
*நாடாளுமன்ற பழைய கட்டிடதில் கடைசி கூட்டம் இன்றுடன் முடிந்தது.. புதிய கட்டிடத்தில் நாளை முதல் நாடாளுமன்றக் கூட்டம் ஆரம்பம்.
*புதிய கட்டிடத்திற்கு நாடாளுமன்றம் மாறினாலும் பழையக் கட்டிடத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களை செயல்படுத்த திட்டம் … சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுடன்றக் கட்டிடம் திகழ்வதாக மோடி பேச்சு.
*இந்தியா சார்பில் முன்வைக்கபட்ட பிரகடனத்தை ஜி – 20 நாடுகள் ஏற்றுக் கொண்டது நாட்டின் பலத்தைக் காட்டுகிறது .. தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருவதாகவும் நாடாளுமன்றக் சிறப்புக் கூட்டத்தில் மோடி பெருமிதம்.
*ஐந்து நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கபட்ட இருப்பதாக மோடி தகவல் .. கூட்டத் தொடர் தொடங்கும் முன் அளித்த பேட்டியில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு.
*அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்தி சிங் ஷெகாவாத் உடன் சந்திப்பு.. காவரியில் நடப்பு பருவத்தில் தரவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.
*தமிழக குழு சந்திப்பதற்கு முன்பு மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் காவரி ஆணையத் தலைவர் மற்றும் ஒழுங்காற்றுக் குழுத்தலைவர் சந்தித்து ஆலோனை … தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு ,
*நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உணவகம் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு, மேலும் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் மருத்துவமனையில் அனுமதி.. உணவக உரிமையாளர் நவீன் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை.
*நாமக்கல் மாவட்டத்தில் தந்தூரி மற்றும் சவர்மா தயாரித்து விற்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்து உத்தரவு.. இறைச்சி விற்கும் கடைகளிலும் சோதனை.
*நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக சீமான் மனைவியுடன் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் …புகாரை நடிகை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில் ஆஜரான சீமானிடம் விசாரணை.
*பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை .. உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றமும் மறுப்பு.
*கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்வது ஆரம்பமானது … 57 லட்சம் பேரும் மறு விண்ணப்பம் செய்வதில் ஆரம்பம்.
*காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விவகாரம்… யு டியூபர் வாசன் மீது விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டிச் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு.
*புவி வட்ட சுற்றுப்பாதையில் இருந்து ஆதித்யா எல் -1 விண்கலம் நாளை விடுவிப்பு .. அடுத்த கட்டமாக சூரியனை நோக்கி விண்கலத்தை இயக்குகிறது இஸ்ரோ.
*கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு .. கோழிக்கோட்டை ஒட்டி உள்ள புதுச்சேரி மாநிலத்தில் மாகே மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 24 -ஆம் தேதி வரை விடுமுறை.
*திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடை உள்ள பெரிய அளவு கொழுக்கட்டை படையல் .. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.
*தென்னிந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலும் கோயில்களிலும் கொண்டாட்டம் .. பிள்ளையார்பட்டி மற்றும் ஈச்சனாரி கோயில்களில் பக்தர்கள் கூட்டம்.
*மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலை கரைக்கும் போது தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு .. உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை.