தலைப்புச் செய்திகள் (18-10-2023)

*காசா மருத்துவமனை மீது குண்டு வீசி 500 பேரை கொன்றது இஸ்ரேல் ராணுவந்தான் என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் குற்றச்சாட்டு… உயிர்பலிக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாசும் புகார்.

*மருத்துவமனை மீது தாங்கள் குண்டு போடவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் மறுப்பு .. ஹமாஸ் அமைப்பு வீசிய ராக்கெட்டுகள்தான் மருத்துவமனை மீது விழுந்ததாகவும் இஸ்ரேல் பதில் .

*போரால் பாதிக்க்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்திருந்த அல் அக்ஸி அரபு மருத்துவமனை குண்டு வீச்சில் இடிந்து நொறுங்கிக் கிடக்கும் பரிதாபம் … பலியான 500 உடல்களை அப்புறப்படுத்தக் கூட யாரும் முன் வராத பரிதாபம்.

*பதற்றமான சூழலில் இஸ்ரேல் வந்து சேர்ந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … விமான நிலையத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஹெர்ஸாக் வரவேற்பு.

*காசா மருத்துவமனை மீது விழுந்தது பாலத்தீன போராளிக் குழுக்கள் வீசிய ராக்கெட்டுதான் என்ற இஸ்ரேல் கருத்துக்கு ஜோ பைடன் ஆதரவு .. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை விட ஹமாசின் நடவடிக்கை மோசம் என்று கருத்து.

*போரின் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத் தக்கது என்று பிரதமர் மோடி கருத்து … காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தல்.

*காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பொறுப்பல்ல என்பதை செயற்கைக் கோள் படங்களுடன் விளக்க ரஷியா கோரிக்கை.. தாக்கியது இஸ்ரேல்தான் என்று இஸ்லாமிய ஜிகாத் குழு மறுப்பு.

*போரின் போது மருத்துவமமனைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற விதியை மீறி காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன் .. போரை நிறுத்துவதற்கு ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவிகிதம் அகவிலைப் படி உயர்வு .. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

*மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி இல்லை .. உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு.

*மூன்று மாடிகளுக்கும் அதிகம் இல்லாமலும் பத்து குடியிருப்புகளுக்கும் குறைவாகவும் உள்ள வீடுகளுக்கான பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் குறைப்பு … ஒரு யூனிட் மின் கட்டணம் 8 ரூபாயிலிருந்த ஐந்து ரூபாய் 50 காசுகளாக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

*திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மறைமலை நகரில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை … தென் சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவு.

*சிவகாசி ரெங்காம் பாளையத்தில் 13 பேரை பலி கொண்ட பட்டாசு விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது … எம்.புதுப்பட்ட போலீசார் மூன்று பேரிடமும் விசாரணை.

*கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு மூன்று மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் .. உடல் நலன் கருதி பாஷாவை விடுவிக்கக் கோரும் வழக்கில் உத்தரவு.

*நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் தாக்கதல் … ரூ 5 லட்சம் மதிப்புள்ள மீன்கள்,வலைகள் உள்ளிட்டவை பறிமுதல்.

*கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் தள்ளி சித்ரவதை செய்ததாக மீனவர்கள் புகார் .. தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையி்ல் அனுமதி.

*சென்னையில் பாராமெடிக்கல் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்களில் வருமானவரிச் சோதனை … வரி ஏய்ப்புப் புகார்களின் பேரில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.

*லலித் பாட்டில் என்ற போதைப் பொருள் கடத்தல்காரன் கைது .. சென்னையில் பதுங்கி இருந்தவனை கைது செய்து அழைத்துச் சென்றது மும்பை போலீஸ்.

*நிலக்கரி இறக்குமதியில் செய்த மோசடி காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்கள் பணத்தில் ரூ 12 ஆயிரம் கோடியை கொள்ளை அடித்து உள்ளது அதானி நிறுவனம் … விசாரணைக்கு உத்தரவிடமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை.

*நடிகர் விஜயின் லியோ படத்தை காலை ஏழு மணிக்கு திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு… காலை 9 மணி முதல் ஐந்து காட்சிகளை மட்டும் திரையிட மட்டும் அனுமதி தந்து உத்தரவு.

*அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் .. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *