*ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு.
*மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு விடும் முன்பு பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு .. .. மீன் வளப் பல்கலைக் கழகம் தொடர்பான பிரச்சினையில் வெளிநடப்பு செய்தால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இல்லை.
*ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்று சட்டப் பேரவையில் மு.ஸ்டாலின் பேச்சு … தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது பற்றி ஆளுநர் தினமும் யோசித்து வருவதாகவும் புகார்.
*மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் என்ன ? பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
*மாநில சுயாட்சிக் கொள்கையை அதிமுக தொடரும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் வேண்டாம் .. எடப்பாடி பழனிசாமி பதில்.
*பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் புகார் .. மசோதாக்களைி நிறைவேற்றக் கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக வெளநடப்பு.
*பீகார் மாநிலத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் ..சட்டசபையில் பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.
*சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்துச் சோதனை .. பித்தப்பையில் கல் இருப்பதாக தகவல்.
*திருமணமான மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உண்டு என்று நாகப்பட்டினம் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு ரத்து .. திருமணமானவர் இறந்துவிட்டால் சொத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுக்குதான் பங்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
*நடுக்கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை … யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.
*திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்காரத்தை நேரில் காண்பதற்கு பல லட்சம் பக்தர்கள் திரண்டனர் .. மூவாயிரம் போலிசார் பாதுகாப்பு.
*முத்துப் பேட்டை ஜாம்பு வானோடை சந்தனக் கூடு விழாவை முன்னிட்டு 24 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை … மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.
*சென்னை குன்றத்தூரில் நேற்று மாலை பள்ளி முடிந்து திரும்புகையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் மீது சக்கரம் ஏறி கால் துண்டானது .. உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட மாணவன் சந்தோசின் இரண்டு கால்களும் அகற்றம்.
*போதைப் பொருள் புழக்கத்திற்கு உடந்தையாக இருந்த புகாரின் பேரில் 22 காவலர்கள் மீது சென்னை காவல் துறை ஆணையர் நடவடிக்கை … உதவி ஆய்வாளர்கள் 6 பேர், தலைமைக் காவலர்கள் 2 பேர், காவலர்கள் 14 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
*அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்ட செமஸ்டர் கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் அறிவிப்பு .. கூடுதல் கட்டணம் செலுத்திய மாணவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்.
*ராஜஸ்தான் மாநிலம் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் நாட்டிலேயே முதலிடத்திற்கு வந்து விட்டது … தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்.
*பெங்களூரு வீட்டிற்கு தீபாவளியன்று மின் கம்பத்தில் இருந்து 71 யூனிட் மின்சாரம் திருடியதாக காங்கிரஸ் கொடுத்த புகார் எதிரொலி … கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ரூ 67 ஆயிரம் அபாரதம் செலுத்தி புகாருக்கு பதில்.
*குமாரசாமியை மின்சாரத் திருடன் என்று வர்ணித்து போஸ்டர் ஓட்டி காங்கிரஸ் கிண்டல் .. தமக்குத் தெரியாமல் ஒப்பந்ததாரல் மின்சாரத்தை எடுத்து விட்டதாக குமாரசாமி விளக்கம்.
*உத்தர்காண்ட் மாவட்டத்தில் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலார்களை மீட்பதில் தாமதம் … சுரங்கம் மேலும் இடிந்து விழக்கூடும் என்பதால் மேலிருந்து துளை போட்டு மீட்பது பற்றி நிபுணர்கள் ஆலோசனை.
*காங்கிரஸ் கட்சியில் நேற்று சேர்ந்த நடிகை விஜயசாந்திக்கு இன்று புதிய பதவி … தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்.
*காசா முனை மீது நடத்தப்படும் போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்லவேண்டும் … கேரளா மாநில காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் பரபரப்பு பேச்சு.
* காசா முனையில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் தங்கி இருந்த ஏராளமானவர்கள் வெளியேறினர் .. மருத்துவ மனையை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியதால் இயல்பு நிலை பாதிப்பு.
*தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை .. வயல் வெளிகளை தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை .
*மாநிலத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி இரண்டாவது ஆண்டாக நிரம்பவில்லை .. எஞ்சிய நாளில் நிரம்புமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பு.