தலைப்புச் செய்திகள்… (18-12-2023)

*நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மிதக்கின்றன… முக்கிய நகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களும் தண்ணீரில் தத்தளிப்பு.

*நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை.. தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரே இடத்தில் கடந்த 75 வருடங்களில் பதிவான அதிக மழை அளவு இது என்று கருத்து.

*காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 69 செ.மீ, திருவைகுண்டம் 62 செ.மீ, மாஞ்சோலை 55 செ.மீ, கோவில்பட்டியில் 53 செ.மீ மழை பதிவு … தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பெய்த மழையின் சராசரி அளவு 60 சென்டிமீட்டர் ஆகும். இரு நூறு ஆணடுகளில் இல்லாத மழை என்று நிபுணர்கள் தகவல்.

*மூன்று மாவட்டங்களில் பெய்த அதி கன மழை மேக வெடிப்பால் ஏற்பட்டது அல்ல, வளி மண்டல சுழற்சியால் ஏற்பட்டது என்று வானிலை அதிகாரி பாலச்சந்திரன் விளக்கம் .. கன மழை நீடிக்கும் என்பதால் ரெட் அலர்ட் தொடர்வதாகவும் அறிவிப்பு.

*திருச்செந்தூரில் நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் திருவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு … 500 பயணிகளையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கு ஏற்பாடு.

*நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களுக்கான ரயில் சேவைகள் ரத்து … தென் மாவட்டங்களுக்கான பல ரயில்கள் மதுரையுடன் நிறுத்தம்.

*சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரக்கூடிய 200 ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து … குருவாயூர் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் இன்று இயக்கப்படவில்லை.

*நெல்லை, மணியாச்சி , கோயில் பட்டி உட்பட்ட பல ரயில் நிலயைங்கள் தண்ணீரில் தத்தளிப்பு .. சென்னை – தூத்துக்குடி இடையிலான விமான சேவைகள் இரண்டாவது நாளாக ரத்து.

*மழையால் பாதிக்கட்டவர்களை மீட்கும் பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன … மீடக்ப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா தகவல்

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்தபடி காணொலி மூலம் நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை… பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு உத்தரவு.

*அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், மனோ தங்கராஜ் , உதயநிதி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் தென் மாவட்டங்களில் முகாம்.. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை.

*நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு .. பல்கலைக் கழகத் தேர்வுகளும் ஒத்திவைப்பு.

*தென்காசி மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்த இடங்களில் இன்று லேசான மழை மட்டுமே பெய்தது .. மழை குறைவால் விரைவாக இயல்பு நிலை திரும்பக்கூடும் என்று நம்பிக்கை

*திருநெல்வேலியை மற்ற ஊர்களுடன் இணைக்கும் பல சாலைகள் பெருமழையால் துண்டிப்பு … நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை, கோவில்பட்டி செல்லும் சாலைகள் உட்பட பல சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

*திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்புறங்கள் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தனித் தீவு ஆனது .. சாலை மற்றும் இணையத் தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் தவிப்பு.

*தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை .. முல்லைப் பெரியார் அணை நீர் மட்டம் 138 அடியை எட்டியதால் கேரளா பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை.

*போடி நாயக்கனூரில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் பல இடங்களில் மண் சரிவு .. போக்குவரத்து துண்டிப்பு.

*அரசின் சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களின் குறைகளை களைய அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் .. மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.

*மழையால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உணவு,பால், குடிநீர் உள்ளிட்டவைகளை உடனயாக வழங்குமாறு தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் .. சீர்குலைந்த சாலைகள் சீரமைப்பை துரிதமாக செயல்படுத்துமாறும் வலியுறுத்தல்.

*தாமிரபரணியில் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது .. மணித்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 34 ஆயிரம் கன அடியில் இருந்த 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு

*நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கக் கோரிக்கை … இரு அவைகளிலும் நடந்த அமளியை அடுத்து 67 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை.

*அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதன் முறை .. திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம்.

*சென்னையில் இருந்து கோவைக்கு காலையில் முதல்வர் பயணம் செய்த விமானத்தில் ஆளுநர் ரவியும் பயணம் .. ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூட கூறிக் கொள்ளவில்லை என்று தகவல்.

*கோவையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் .. பிரதமர் மோடியை நாளை சந்தித்து வெள்ள நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்த முடிவு.

*நாளை பிற்பகல் 12 மணிக்கு பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கீடு .. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அடுத்து சந்திக்கும் நேரம் பற்றி அறிவிப்பு.

*ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டன் அனுப்ப முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் .. லண்டனில் உள்ள மகளுடன் சேர்ந்து வாழ பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார் முருகன்.

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் திட்டத்தை தொடங்கிவைத்தார் மல்லிகார்ஜுன கார்கே .. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு ரூ 138, ரூ 1380, ரூ 13,800 என்ற அளவில் நிதி வழங்கக் கோரிக்கை.

*டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகுமாறு அரவிந் கெஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்.. கடந்த முறை அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகத கெஜ்ரிவால் இந்த முறை ஆஜராவாரா என்பதில் குழப்பம்.

*மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் .. உறவினர்களால் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று வளைதளங்களில் பரவும் செய்தியை உறுதி செய்ய பாகிஸ்தான் மறுப்பு.

*காசா முனையில் உள்ள ஜபாலியா என்ற அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் வழித்தாக்குலில் 110 பேர் பலியாகிவிட்டதாக ஹமாஸ் தரப்பில் தகவல் … அகதிகள் முகாம்கள் மீதான தாக்குதலை உறுதி செய்ய இஸ்ரேல் மறுப்பு.

*ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் தேர் திருவிழா என்ற பாடலை வெளியிட்டது லைகா நிறுவனம் … பொங்கல் அன்று படத்தை வெளியிட முடிவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *