*தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் சராசரியாக 72. 09 சதவிகித வாக்குப் பதிவு … கடந்த தேர்தலில் பதிவான 69 விழுக்காட்டை விட இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
*தமிழ்நாடடில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 77.67 விழுக்காடு வாக்குகளும் தருமபுரியில் 75. 44 விழுக்காடு வாக்குகளும் பதிவு… மிகவும் குறைந்த பட்சமாக தென் சென்னையில் 67.35 சதவிகிதத்தினர் வாக்களிப்பு.
*மின்னணு வாக்கு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைத்து பாதுகாப்பாக லாரிகளில் ஏற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு … வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஜுன் நான்காம் தேதி வரை பெட்களை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை.
*துப்பாக்கிச் சூடு, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போன்ற வன்முறைகள் இல்லாமல் தமிழ்நாட்டில் அமைதியான வாக்குப்பதிவு … பெரும்பாலான சாவடிகளில சிறு அசம்பாவிதங்கள் கூட இல்லாததால் மக்கள் நிம்மதி.
*முதலமைச்சர் மு.க. ஸ்டலாலின் சென்னையில தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாளகத்தில் ஒட்டுப் போட்டார் … எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் சொந்த ஊரான சிலுவம்பாளயைத்தில் வாக்கைப் பதிவு செய்தார்.
*நடிகர்கள் ரஜினி காந்த்,கமல்ஹாசன், அஜித், விஜய் உட்பட திரை நட்சத்திரங்களில் பெரும்பாலனாவர்கள் சென்னையில் வாக்களிப்பு … நடிகைகளும் ஆர்வமாக வந்து ஜனநாயக கடமை ஆற்றி மகிழ்ச்சி.
*மத்திய சென்னை தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மின்னனு இயந்திரத்தில் லைட் எரியவி்ல்லை என்று புகார் … போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கார்த்திகேயன் கைது.
*சென்னையில் சாலிக்கிராமத்தில் வசிக்கும் திரைப்பட நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் … வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் திரும்பிச் சென்றார்
*தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை தாடாண்டர் நகரில் அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் 500 பேர் பெயர் பட்டியலில் இல்லை … அனைவரும் வாக்களிக்க முடியல்லை என்று புகார்.
*வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து ஏப்ரல் 17,18 தேதிகளில் நான்கு லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம் … மேலும் ரயில், கார் போன்ற வாகனங்கள் மூலம் பல பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பதகா தகவல்.
*சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் நரசிங்கம் பாளையம் வாக்குச் சாவடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பாஜகவினரும் மோதிக் கொண்டத்தில் ஒருவர் மண்டை உடைந்து காயம் … இரண்டு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தம்.
*கோவை நாடாளுமன்றத் தொகுதியில பல ஆயிரம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை புகார் … பெயர்கள் இல்லாததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்குமோ என்று சந்தேகம்.
*காஞ்சிபுரம் மாவட்டம் ஏகானபுரம் வாக்குச் சாவடியில் மாலை வரை 17 வாக்குகள் மட்டுமே பதிவு .. பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிராக தேர்தல் புறக்கணிப்பு.
*அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு போராட்டம் .. அதிகாரிகளே திமுகவுக்கு வாக்களிப்பதாக கூறி தர்ணா.
*சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி வாக்குச் சாவடியில் மூதாட்டி ஒருவரும் சூரமங்கலத்தில் 65 வயது நபரும் வாக்களிக்க வந்த இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு … திருத்தணியில் நெமிலி கிராமத்திலும் ஒருவர் வாக்களிக்க வந்த இடத்தில் இறப்பு.
*நாகாலாந்து மாநிலத்தில் கிழக்கு நாகாலாந்து பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து ஊரடங்கு … தங்களுடைய ஆறு மாவட்டங்களையும் தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தால் வீதிகள் வெறிச்சோடின.. வாக்களிக்க யாரும் வரவில்லை.
*நாடாளுமன்றத் தேர்தலில் முதற் கட்டமாக இன்று 102 தொகுதிகளுகக் வாக்குப் பதிவு நடந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் 26-ஆம் தேதி … இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் தீவிரம்.
*வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தான் பாஜகவை எதிர்த்துப் போரிடும் போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தம்மை குறிவைத்து தாக்குவது ஆச்சரியமாக உள்ளது என்று புகார் … தங்கள் கூட்டணியில் உள்ள இரண்டு முதலமைச்சர்கள் சிறையில் இருக்கும் போது கேரள முதல்வருக்கு எதுவும் நடக்காதது ஏன் என்றும் கேள்வி.
*குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா வேட்பு மனுத் தாக்கல் … காந்தி நகரில் மே 7- ஆம் தேதி வாக்குப்பதிவு.
*இந்திய அரசுக்குச் சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியின் லோகோ காவி நிறத்துக்கு மாற்றம் … எதிர்க்கட்சிகள் கண்டனம்.
*தற்போது நடைபெறுவது இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாபெறும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் … இந்தியாவில் வலுவான அரசு இருப்பது அவசியம் என்றும் பிரதமர் மோடி போபாலில் பிரச்சாரம்.
*ஈரான் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதலை உடனடியாக நடத்தப் போவதில்லை என்று இ்ஸ்ரேல் அதிகாரிகள் தகவல் … இருப்பினும் இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக புகார்.
*பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ஜப்பான் நாட்டவர்கள் சென்ற வேன் மீது குண்டுவீசி நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் உயிரிழப்பு .. குண்டு துளைக்காத வாகனத்தில் பயணம் செய்ததால் ஜப்பானியர்கள் உயிர் தப்பினர்.
*மாலத் தீவு நாட்டில் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 11 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து … மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் ஊழல் புகார் குறித்து மறு விசாரணை நடத்த உத்தரவு.
*சென்னை அண்ணா நகர் தொகுதியில் உள்ள சாவடியில் நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களிப்பு … ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ சட்டை அணிந்து விஷால் சைக்கிளில் செல்லும் வீடியோ வைரல்.
*அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷபா- 2 திரைப்படத்தை நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி.தளம் ரூ 275 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்… ஆகஸ்டு 15- ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது புஷ்பா – 2.
*தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு .. நடப்பு கோடைக் காலத்தில் இதுவே அதிகபட்ச வெயில் ஆகும். வேலூரில் 107 டிகிரி, க.பரமத்தி, திருத்தணி போன்ற இடங்களில் 106 டிகிரி வெப்பம் பதிவு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447