தலைப்புச் செய்திகள் (19-08-2023)

*மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு ஐந்து லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல், 300 ஏக்கரில் வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பு.. மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு உணவளிக்க பிரமாண்ட சமையல் கூடம்.

*தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் இருந்தும் அதிமுகவினர் வாகனங்களில் மதுரை நோக்கி பயணம் .. எடப்பாடி பழனிசாமியின் பலத்தைக் காட்டுவதற்கு 15 லட்சம் பேரை திரட்டிக் காட்ட ஆதரவாளர்கள் ஏற்பாடு.

*கச்சத்தீவை 1974- ஆம் ஆண்டில் மத்திய அரசு இலங்கைக் கொடுத்த போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .. சென்னையில் இருந்து அதிமுக மாநாட்டுக்குப் புறப்பட்டவர்களை வழியனுப்பும் விழாவின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

*மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்யும் அதிகாரச் சட்டத்தை முன் தேதியிட்டு அமுல்படுத்த முடியாது.. முன் தேதியி்ட்டு அமல்படுத்த அனுமதித்தால் லட்சக்கணக்கான பதிவுகளை ரத்து செய்ய கோரிக்கை வரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

*கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து சென்னையில் திமுகவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை … திமுக சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பு.

*சாதி உணர்வையும் சாதிப் பகையையும் நெஞ்சில் கொண்டு உள்ள எந்த மாணவரும் கற்றவர் என்ற தகுதியை அடையமுடியாது .. சக மாணவரை பிற சாதி என்று பகை காட்டும் மாணவர்கள் இருக்கும் போது ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று பெருமைப்படுவதும் கேலிக்கூத்து என்று ப.சிதம்பரம் கருத்து.

*சென்னை அடுத்த மணலியில் வீட்டுக்குள் தீபிடித்து புகை மூட்டம் ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு பேர் உயிரிழந்த பரிதாபம்.. கொசு விரட்டும் இயந்திரம் சூடாகி தீப்பிடித்து இருப்பதாக போலிஸ் தகவல்.

*விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமி உட்பட 85 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி … இரு சக்கர வாகனத்தில் குல்பி விற்றவரை பிடித்து போலிஸ் விசாரணை.

*திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி கடலூர் பேருந்து நிலையத்தில் தப்பி ஓட்டம் … கை விலங்குடன் தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டை.

*தமிழ் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஸ்டாட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்து உள்ளது .. தொடக்க நிலையில் உள்ள 109 நிறுவனங்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்க உள்ளதாகவும் கோவையில் நடைபெறும் ஸ்டாட் அப் திருவிழாவில் காணொலி மூலம் பேசிய மு.க.ஸ்டாலின் தகவல்.

*பழனி முருகன் கோயிலுக்குச் செல்லக்கூடிய ரோப் கார் சேவை பரமாரிப்பு பணிக்காக நிறுத்தம் .. பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிக்கட்டுகள் வழியாக மலை ஏறும்படி கோயில் நிர்வாகம் வேண்டுகோள்.

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு ..பெங்களூரு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கர்கேவை ஆதரவாளர்களுடன் சந்தித்தப்பின் பேட்டி.

*சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல் …மார்க்கெட்டை மாற்றினால் கோயம்பேட்டில் கடை வைத்து உள்ளவர்கள் என்ன ஆவார்கள் என்று கேள்வி.

*டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து விவாதிக்க பெங்களூரை விட சிறந்த இடம் இல்லை .. பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி பேச்சு.

*செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய பாஷினி என்ற மொழிபெயர்ப்பு தளத்தை இந்தியா உருவாக்கி வருவதாக ஜி 20 கூட்டத்தில் பேசுகையில பிரதமர் தகவல் … இந்தியாவில் 85 கோடி பேர் மலிவான விலையில் இணைய சேவையை பயன்படுத்தி வருவதாகவும் பெருமிதம்.

*லடாக்கில் மிகவும் அழகு வாய்ந்த பான்காங் ஏரிக்கு கே.டி.எம்.மோட்டார் சைக்கிளில் ராகுல் காந்தி பயணம் செய்யும் படம் வைரலானது .. தந்தை ராஜீவ் காந்தி பிறந்த நாளை அங்கு கொண்டாட இருப்பதாக தகவல்.

*நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவது நிச்சயம் .. சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர் வேதி நம்பிக்கை.

*தைவான் நாட்டைச் சுற்றி சீன நாட்டு ராணுவத்தின் விமானம் மற்றும் கடற்படைகள் போர் பயிற்சி .. அமெரிக்காவுடன் தைவான் நெருக்கமான உறவு வைத்து இருப்பதற்கு எச்சரிக்கை.

*கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதன் எதிரொலி .. மேட்டூர் அணைக்கான தண்ணீர் வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி என்ற அளவை எட்டியது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *