*மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் (82) காலமானார்… ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர்.
*மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்…பங்காரு அடிகளார் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிப்பு.
*மேல்மருத்துவத்தூரில் பங்காரு அடிகளார் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது… பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிதத்து.
*மேல்மருவத்தூர் பகுதியில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு…மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர்20) விடுமுறை அறிவிப்பு.
*பங்காரு அடிகளார் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது… பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிப்பு.
*அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி … சிறையில் இருந்து விடுதலை செய்தால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என்ற அமலாக்கத் துறை வாதம் ஏற்பு.
*உடல் நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் .. அசர வழக்காக கருத்தில் கொண்டு நாளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பு.
*கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குார், தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி .. விசாரணையை மூன்று மாதங்களில முடிக்குமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு.
*தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து திமுக கட்சி நிகழ்ச்சிகள் காணொலி வாயிலாக ஊடகங்களுக்கு அனுப்பப்படுவதாக அண்ணாமலை புகார்.. அதிகார அத்துமீறலை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தல்.
*ஆயுத பூஜையை முன்னிட்டு நடத்துநர்கள், ஓட்டுநர்கள் விடு்ப்பு எடுக்கக் கூடாது .. விடுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை.
*ஐப்பசி முதல் நாள் மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் நேற்று தமிழ்நாட்டில் சொத்துகளை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் .. ஒரே நாளில் ரூ 180 கோடி பத்திரப் பதிவு மூலம் வசூல்.
*மனிதனை விண்ணுக்கு அனுப்பி பாதுகாப்பாக தரைக்கு கொண்டு வந்து சேர்க்கும் ககாயான் திட்டம் .. ஸ்ரீ ஹரிகோட்டாவில் நாளை மறுதினம் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இ்ஸ்ரோ தீவிரம்.
*காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக குண்டுவீசி தாக்குதல் நடத்துவது தொடருகிறது .. கடந்த 13 நாட்களாக நடக்கும் போரில் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3500 ஐ தொட்டது.
*அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் இ்ஸ்ரேல் பயணம் … பெஞ்சமின் நெதான்யாகுவை சந்தித்து போருக்கு பிரிட்டன் ஆதரவை உறுதி செய்தார்.
*ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆகஸ்டு மாதம் கொண்டு வந்த டிஜிட்டல் சேவைகள் சட்டத்தால் எலன் மஸ்க் அதிருப்தி… எக்ஸ் சேவையை ஐரோப்பாவில் நிறுத்துவதுக் குறித்து ஆலோசிப்பதாக தகவல்.
*கடந்த ஜுன் மாதம் ஆரம்பமான தென் மேற்கு பருவமழை விலகிவிட்டதாக வானிலை மையம் தகவல்… இன்னும் 3 நாளில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாக உள்ளதாக தகவல்.