தலைப்புச் செய்திகள் …(19-12-2023)

*அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்ததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு .. தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக நாளை மறுதினம் ஆஜராகுமாறு பொன்முடி , அவருடைய மனைவி விசாலாட்சிக்கு உத்தரவு.

*கடந்த 2006 -ல் இருந்து 2011 -வரை அமைச்சராக இருந்த போது பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் 2016-ல் விடுவித்ததை எதிர்த்தது லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்திருந்தது …மேல் முறையீட்டை விசாரித்த உயர் நீதி மன்றம், பொன்முடி அமைச்சராக இருந்த போது வருமானத்தை மீறி 64 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்தாக தீர்ப்பு.

*இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் பொன்முடி அமைச்சர் பதவியை உடனடியாக இழக்க நேரிடும் என்று தகவல் பரவுகிறது .. ஒரு வேளை பொன்முடி மேல்முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் பதவியை இழக்க நேரிடாது என்றும் கருத்து.

*கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை… . 9 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் … ஏராளமான இடங்கள் வெள்ளம் சூழ்ந்து தீவு போல காட்சி அளிப்பதால் பல ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்.

*தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு என்பதால் கூடுதல் அதிகாரிகள் மீட்புப் பணிக்கு நியமனம் … படகு மூலம் மீட்பு பணிகள் தொடர்ந்த போதிலும் இன்னும் பல இடங்களை நெருங்குவதில் சிக்கல்.

*சாலைகளை மண் அரித்துச் சென்றுவிட்டதால் பல கிராமங்களுக்கு செல்ல முடியாத சூழல் … ஒவ்வொரு ஊரும் தனித்தனி தீவுகளாக காட்சி அளிக்கும் பரிதாபம்.

*திருவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயிலில் சிக்கி இருந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு … முதலில் மீட்கப்பட்ட கர்ப்பிணி உள்ளிட்ட நான்கு பேர் முதலுதவி சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில அனுமதி.

*செந்தூர் ரயிலில் சிக்கித் தவித்த 400 பேரை தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து பேருந்தில் அனுப்பி வைத்தது …. மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்ட பயணிகளை சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை.

*திருவைகுண்டத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்ததால் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட எந்தக் குழுவாலும் ரயிலை நேற்று நெருங்க முடியவில்லலை.. கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழு இன்றுதான் ரயிலை நெருங்கி மீட்பு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது

*நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்றாவது தினமாக நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ,, பல மாவட்டங்களில் மழை நீர் இன்னும் வடிய வேண்டியிருப்பதால் விடுமுறை அறிவிப்பு.

*தென்காசி மாவட்டத்தில் நிலைமை சீரடைந்ததால் நாளை முதல் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடிவு .. மழையால் நேற்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும்.

*சென்னை- தூத்துக்குடி இடையிலான விமான சேவை மூன்றாவது நாளாக ரத்து.. விமான நிலைய ஓடுபாதையை சரி செய்த பிறகே போக்குவரத்தை தொடங்க திட்டம்.

*மாநில அரசின் நடவடிக்கைகளால் தென் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு குறைவு ..பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதற்காக நாளை தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாகவும் பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

*தூத்துக்குடி மாவட்டத்தில் 60 சதவிகிதம் இடங்களில் மின் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது..நெல்லை மாவட்டத்தில் 12 சதவிகித இடங்களுக்கு இன்னும் மின்சாரம் தரப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தகவல்.

*கனமழையால் பாதிக்கப்பட்ட திருவைகுண்டத்திற்கு இன்னும் செல்ல முடியவில்லை என்று தலைமைச் செயலாளர் பேட்டி .. நான்கு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக 10 பேர் உயிர் இழந்திருப்பதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் தகவல்.

*நெல்லையி்ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமி நேரி்ல் ஆய்வு .. திமுக அரசு முறையான முன் எச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்திருந்தால் பாதிப்புகளை குறைத்து இருக்கலாம் என்று கருத்து.

* தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி 95 சென்டி மீட்டர் மழை பெய்தது தமிழ்நாட்டு வரலாற்றில் 2- வது அதிகபட்ச மழை பதிவு என்று நிபுணர்கள் தகவல் .. கடந்த 1992 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நெல்லை மாவட்டட்ம காக்கச்சில் 96.5 சென்டிமீட்டர் மழை பெய்ததே தமிழகத்தில் இது வரை பெய்த அதிக மழை என்று கருத்து.

*நடிகை கவுதமியின் நிலத்தை மோசடி செய்து விற்ற வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் எந்த நேரத்திலும் கைது செய்படக்கூடும் என்று எதிர்ப்பார்ப்பு .. ஆறு பேரின் முன் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதன் எதிரொலி.

*சேலத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு .. தென் மாவட்டங்களில் ஏற்பட்டு உள்ள பெரு வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக தகவல்.

*திருக்கோவிலூர் அருகே பன்றிக்கு வைத்திருந்த மின் வேலியில் சிக்கி தந்தை, தாய், மகன் ஆகிய மூன்று பேர் இறந்து கிடந்த பரிதாபம் … மின் வேலி வைத்த மக்கா சோள நிலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை.

*தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது .. உபரி நீரை விநாடிக்கு 3ஆயிரம் கன வீதம் வைகை ஆற்றில் திறந்துவிட்டு உள்ளதால் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை.

*எதிர்க்கட்சி எம்.பி.க்களில் விசிக தலைவர் திருமாவளவன் உட்பட மேலும் 49 பேர் மக்களவையில் இருநது சஸ்பெண்ட் .. இதுவரை மக்களவை எம்.பி்.க்கள் 95 பேர், மாநிங்களவை எம்.பி.க்கள் 46 பேர் என மொத்தம் 141 பேர் இடை நீக்கம்.

*நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் .. சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து அனவைரும் முழக்கம்.

*டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி நான்காவது கூட்டத்தில் கார்கே ,சரத் பவார்,ஸ்டாலின், உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு .. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஜனவரி 2 வது வாரத்தில் முடிவு செய்ய திட்டம்.

*இந்தியா கூட்டணி சார்பில் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கருத்து .. தேர்தலில் வென்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்று கார்கே கருத்து.

*பாரதீய ஜனதாக் கட்சி அரசை அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம்.. டெல்லியில் கட்சி எம்.பி.க்கள் கூடத்தில் பிரதமர் மோடி பேச்சு.

*அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள ராமர்கோயில் திறப்பு விழாவிற்கு பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வர வேண்டாம் என்று வேண்டுகோள் ,,, அதிக கூட்டம் இருக்கும் என்பதால் வயதானவர்கள் சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக அறக்கட்டனை தரப்பில் யோசனை.

*சீனாவின் வட மேற்கில் கான்சு மாகாணத்தில் ரிக்டரில் 6.2 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலடுக்கம் காரணமாக 115 பேர் இறப்பு …200 பேர் படுகாயம், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம்.

*கான்சு மாகாணத்தில் மைனஸ் 16 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவுதால் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதில் சிக்கல் .. மின்சாரம் மற்றும் குடி நீர் விநியோகத்தை உடனடியாக சரி செய்யுமாறு சீன அதிபர் ஜின் பிங் உத்தரவு.

*திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை சனி பெயர்ச்சி விழா ..பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்வதற்கு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்.

*ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஆஸிதிரேலிய வீரர் மிட்செல் ஸ்டராக் ஏலம் … துபாயில் நடந்த ஏலத்தில் ஸ்டராக்கை ரூ 24.75 கோடி கொடுத்து எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *