*குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்… மதுரை அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
*தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை .. திருக்குறளை தேசிய நூலக அறிவிக்குமாறும் தீர்மானத்தில் அதிமுக வலியுறுத்தல்.
*அதிமுக மாநாட்டை முன்னிட்டு 51 அடி உயரக் கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார் எடப்பாடி பழனிசாமி … வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி வாழ்த்து .
*அதிமுக மாநாட்டில் பங்கேற்ற பல லட்சம் பேருக்கும் காலை முதல் உணவளிக்க பிரமாண்ட சமையல் கூடத்தில் பத்தாயிரம் பேர் தொடர்ந்து சமையல் … மக்கள் கூட்டம் காரணமாக மதுரையில் போக்குவரத்தில் மாற்றம்.
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வரிசையில் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி ..மதுரை மாநாட்டில புதிய பட்டம் வழங்கி அதிமுக நிர்வாகிகளால் கவுரவிப்பு
*சந்திராயன் – 3 விண்கலத்தின் லேண்டரின் இறுதிக்கட்ட வேகத்தை மேலும் வெற்றிகரமாக குறைத்து இஸ்ரோ .. ஆகஸ்டு 23- ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு தரையிறக்க நடவடிக்கை.
*நிலவுக்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் விழுந்து நொருங்கியதாக ரஷ்ய விண்வெளி மையம் அறிவிப்பு … விழுந்து நொருங்கியதால் தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பையும் இழந்தது லூனா 25.
* ரஷ்யாவின் லூனா விழுந்து விபத்துக்கு ஆளானதால் இந்தியாவின் சந்திராயன் -3 நிலவின் தென் பகுதியை அடையும் முதல் விணகலம் என்ற பெருமையை பெறுகிறது ..அடுத்த மூன்று நாட்கள் முக்கியமானது என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு.
*பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் 30 பேர் பட்டியலை வெளியிட்டார் மல்லிகார்ஜுன் கார்கே .. ப.சிதம்பம், சசி தரூர், சச்சின் பைலட் உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு காரியக் கமிட்டியில் இடம்.
*நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் .. சென்னையில் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்பு.
*நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 21 – வது நாள் நடை பயணம் .. அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவனை சந்தித்து நடந்தவை குறித்து விசாரிப்பு.
*நாங்குநேரி வட்டாரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக திருமாவளவன் கருத்து .. மாணவன் தாக்கப்பட்டத்தில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணனுக்கு விசிக சார்பில் நிதி உதவி அளிப்பு.
*தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்குமாறு அன்புமணி கோரிக்கை .. கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.
*காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம் .. கர்நாடகத்தில் 23-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அந்த மாநில அரசு ஏற்பாடு.
*ஒவ்வாருவராக சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் லக்னோவில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சு .. உ.பி.யின் முக்கியமான தலைவர்களை ரஜினி காந்த் சந்திப்பது எதற்காக என்று வலைதளங்களில் கேள்வி.
*இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. சோதித்த ஆளில்லாத விமானம் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே நொறுங்கி விழுந்தது .. விபத்துக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு.
*இந்திய நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமா் மோடி சொல்லி வருவது உண்மையில்லை .. தம்மை சந்தித்துப் பேசிய லடாக் பொது மக்கள் தெரிவித்ததாக ராகுல் காந்தி தகவல்.
*நடிகர் யோகி பாபு மீது ஜாக் டேனியல் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஹாசிர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் .. ரூ20 லட்சத்தை வாங்கி்கொண்டு நடிக்க மறுப்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.