தலைப்புச் செய்திகள் (20-10-2023)

*ஒரு முறை மட்டும் பயன்படு்த்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு … தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குவளைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கருத்து.

*அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாணையின் போது தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை … உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்.

*இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் 21 பேரை தவிர மற்ற அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவு … இந்தியாவின் உத்தரவை அடுத்து கனடா அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் பயணம்.

*மும்பை, பெங்களூரு மற்றும் சண்டிகரி்ல் உள்ள கனடா துணை தூதரகங்களில் விசா உள்ளிட்ட சேவைகள் நிறுத்தம் .. டெல்லியில் உள்ள தூதரகம் மட்டுமே இனி விசா வழங்கும் என்று அறிவிப்பு.

*மேல் மருவத்தூரில் பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி .. கோயில் அடுத்து உள்ள தியான மண்டபம் அருகே அவரே கட்டிவைத்திருந்த சமாதியில் 21 குண்டுகள் முழங்க உடல அடக்கம்.

*பங்காரு அடிகளார் உடலுக்கு சித்தர் முறைப்படி பால், பன்னீர், மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் .. சந்தன நாற்காலியில் உட்கார வைத்தபடி உடலை அடக்கம் செய்து வில்வம், துளசி, உப்பு, ஜவ்வாது உள்ளிட்டவற்றைக் கொண்டு குழி நிரப்பல்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் மரியாதை … பங்காரு அடிகளாரின் மனைவி, மகன்கள் உள்ளிட்ட உறவினர்களுக்கு ஆறுதல்.

*மனித குலத்திற்கான அயராத சேவை, கல்விக்கான முக்கியத்துவம் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதித்தவர் … பங்காரு அடிகளார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகவும் பிரதமர் மோடி இரங்கல்.

*மேல் மருவத்தூரில் இரண்டாயிரம் போலீசாரை குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தது காவல் துறை .. மதுராந்தகம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

*வால்பாறைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிழப்பு.. நான்கு சடலங்கள் மீட்பு.

*டிடிவி தினகரன் திவாலானவர் என்று அறிவிப்பதற்கு நேட்டீஸ் அனுப்பியது செல்லாது … ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு.

*நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையை மறைத்து வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு .. தேனி தொகுதி எம்.பி. ரவீந்திர நாத் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

*திமுக அரசின் சட்ட விரோதச் செயல்களுக்கு துணை போகாமல் சட்டத்தைக் காப்பாற்ற காவல் துறை செயல் பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் .. ஆட்சியில் இருப்பவர்கள் அவிழ்த்துவிடும் பொய்மூட்டைகளை உண்மையாக்க பாடுபட வேண்டாம் என்றும் போலீசுக்கு வேண்டுகோள்.

*சென்னையில் தமது திரை அரங்க ஊழியர்களிடம் வைப்பு நிதி வசூலித்த வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய வேண்டும் .. சரணடைந்து ரூ 20 லட்சத்தை கட்டினால் மட்டுமே ஜாமீன் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.

*பேரிடர்கள் ஏற்படும் போது செல்போன் மூலம் பொதுமக்களை எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கான சோதனை ஓட்டம் .. மத்திய மாநில பேரிடர் ஆணையங்கள் சார்பில் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி சோதனை .

*டெல்லி, காசியபாத், மீரட் வழித்தடத்தில் துகியா ரயில் நிலையம் வரை ரேபிட் எக்ஸ்பிரஸ் எனப்படும் அதி வேக ரயில் சேவை, பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கி வைப்பு .. அதிவேக ரயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்.

*சாக்கடை கழிவுகளை அகற்றும் போது உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடு்ம்பத்திற்கு ரூ 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு .. மனிதர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.

*மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரளா முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தனுக்கு 100 வது பிறந்த நாள் .. முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்து.

*காசா முனையின் தெற்கு எல்லையில் உள்ள ராபா பாதையை எகிப்து திறந்து விடாததால் பல ஆயிரம் பேர் தவிப்பு .. எல்லையை திறந்தால் மருந்து , உணவு உள்ளிட்ட உதவிகளை அளிக்க முடியும் என்று உலக சுகாதரா அமைப்பு கருத்து.

*காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான் வழித் தாக்குதல் .. கடந்த 14 நாள் சண்டையில் காசாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் இ்ஸ்ரேலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,400 ஐயும் தாண்டியது.

*மார்க் ஆண்டனி படத்துக்கு இந்தியில் சென்சார் சான்றிதழ் தருவதற்கு ரூ ஆறரை லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் தெரிவித்த புகார் மீது நடவடிக்கை… ஆதராங்களை திரட்ட விஷாலின் உதவியாளர் அரியிடம் மும்பையில் சிபிஜ விசாரணை.

*வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் .. வானிலை மையம் தகவல்.

*அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் .. புதிய புயலுக்கு தேஜ் என்று பெயரிட்டது வானிலை மையம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *